
சிறுநீரக கற்களால் அவதிப்படும் பெரும்பாலான நபர்களுக்கு அதை எப்படியாவது கரைக்க வேண்டும் என்ற கவலை இருக்கிறது. ஒரு சிலர் முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் சிறுநீரகத்தில் கற்கள் திரும்ப திரும்ப வரும். இதற்கு மரபியல் ரீதியான காரணங்கள் இருக்கின்றன.
சிறுநீரகத்தில் எப்படி எதனால் கற்கள் உருவாகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சிறுநீரகத்தில் கற்கள் உருவான பிறகு அதை கரைப்பதை விட கற்கள் உருவாகாமல் இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
பலர் சாப்பிடும் உணவில் தெரியாமல் கற்களை சாப்பிடுவதால் அது சிறுநீரகத்தில் சென்று தேங்கிவிடுவதாக நினைக்கின்றனர். இதில் உண்மை இல்லை. சிறுநீர் கழிக்கும் போது நிறைய கழிவுகளும், கனிமங்களும் வெளியேறும். கனிமங்கள் அதிகளவில் வெளியேறும் போது சிறுநீரகத்தில் அவை படிந்துவிட்டால் கற்களாக உருவாகும். பெரும்பாலான மக்களுக்கு சிறுநீரகத்தில் கால்சியம் ஆக்சலேட் என்ற கல் இருக்கும்.

யூரிக் அமிலம் அதிகமாக வெளியேறினால் யூரேட் கற்கள் உருவாகலாம். இதே போல இன்னும் சில சிறுநீரக கற்கள் இருக்கின்றன. மரபணு காரணங்களால் சிலருக்கு இயல்பாகவே கற்கள் உருவாகும்.
சிறுநீரக கற்களை மருந்து மாத்திரைகளால் மட்டும் கரைக்க முடியாது. அறுவை சிகிச்சைகளும் தேவைப்படலாம். ஏழு மில்லி மீட்டருக்கும் குறைவான சின்ன கற்கள் குறையும்.
மேலும் படிங்க குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான எட்டு எளிய வழிகள்
கற்கள் உருவாகாமல் தடுப்பதற்கு வழிகள்
மேலும் படிங்க அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் ஏற்படும் தீவிரமான பிரச்சினைகள்
இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com