HIV வைரஸ் அல்லது மனித நோய் எதிர்ப்பு குறைபாடு வைரஸ் என்பது ஒரு கொடிய வைரஸ் ஆகும். இது உடலின் முக்கியமான நோய் எதிர்ப்பு செல்களை குறிவைக்கிறது. இது இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை ஊடுருவி, அதன் மூலம் நோய் தொற்றுகள் மற்றும் பிற நோய்களை எதிர்க்கும் உடலின் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. இந்த வைரஸை உடலில் இருந்து முழுமையாக வெளியேற்றிய விட முடியாது. இருப்பினும் சரியான சிகிச்சை மூலம் கடுமையான நிலைகளை தடுக்கலாம்.
எய்ட்ஸ் என்பது HIV வைரஸால் ஏற்படும் ஒரு நோயாகும். HIV யால் பாதிக்கப்பட்டவர்கள் எய்ட்ஸ் நோய்க்கு ஆளாகிறார்கள். எய்ட்ஸ் என்பது HIV இன் கடைசி நிலையாகும். இந்தக் கட்டத்தில் நோய் தொற்று தீவிர நிலையை அடைந்து ஒரு நபரின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சேதப்படுத்துகிறது. இதனால் உயிர் இழப்பும் ஏற்படலாம். இருப்பேனும் மருவத்துவ துறையில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றங்களால் எய்ட்ஸ் நோயிற்கான சிகிச்சை சாத்தியமாகி உள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கையை குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: சிறுநீர் கழிப்பதில் சிரமமா? இதற்கான காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்
எய்ட்ஸ் நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்கள்
பாதுகாப்பற்ற உடல் உறவு
எய்ட்ஸ் மற்றும் HIV நோய் பரவலுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும். HIV பாசிட்டி உள்ள நபருடன் பாதுகாப்பற்ற உடலுறவு வைத்துக் கொள்பவர்களுக்கு எய்ட்ஸ் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். இதைத் தவிர்க்க ஆணுறை போன்ற பாதுகாப்பு வழிகளை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
பகிரப்பட்ட ஊசிகள்
மருத்துவ பரிசோதனை, பச்சை குத்துதல் போன்ற எந்த நோக்கத்திற்காக உடலில் ஊசியை செலுத்திக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டாலும், அவை புதியது என்பதை உரியது செய்து கொள்ளுங்கள். ஏனெனில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் பயன்படுத்திய ஊசிகளை பிறருடன் பகிரும் பொழுது HIV பரவுகிறது.
தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுதல்
தாய்க்கு HIV இருந்தால் குழந்தைக்கும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். கர்ப்ப காலத்தில் அல்லது பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பொழுது இது பரவுகிறது. ஆகையால் எல்லா கர்ப்பிணி பெண்களும் HIV பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மேலும் பரிசோதனை பாசிட்டிவ் ஆக இருந்தால் தாமதிக்காமல் சரியான சிகிச்சையையும் தொடங்க வேண்டும்.
இரத்த மாற்றம்
HIV பாசிட்டிவ் உள்ள ஒரு நபரின் இரத்தத்தை ஆரோக்கியமான நபரின் உடலில் செலுத்தும் பொழுது அவருக்கும் HIV பரவுகிறது. ஆகையால் இரத்த தானத்தை பெறுவதற்கு முன் அது HIV பரிசோதனை செய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
HIV/ எய்ட்ஸ் நோயின் ஆரம்பகால அறிகுறிகள்
- அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், தலை மற்றும் உடல் வலி.
- குமட்டல்
- நாள்பட்ட சோர்வு
- வயிற்றுப்போக்கு
- திடீர் மற்றும் விரைவான எடை இழப்பு
- நிமோனியா
- சரும தடிப்புகள் அல்லது பிளவுகள்
- நாக்கு மற்றும் வாய்ப்பு புண்கள்
- தூங்கும் போது வியர்க்கும் நிலை
- பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் ஈஸ்ட் தொற்றுகள்
- கவலை
- ஞாபகம் மறதி, கவனக் குறைவு போன்ற நரம்பியல் பிரச்சனைகள்.
உடல் நல பிரச்சனைகள்
- காசநோய்
- நிமோனியா
- தொண்டை அல்லது வாயில் புஞ்சை தொற்று
- மூளைக்காய்ச்சல்
பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்
- மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள்
- இடுப்பு அழற்சி நோய்(PID)
- பாக்டீரியா வஜினோசிஸ் போன்ற பிறப்புறுப்பு தொற்றுகள்
- பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று
- மனித பாப்பிலோமா வைரஸ் (HPV)
- கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
வருமுன் காப்பதே சிறந்தது. இந்த கொடிய நோய் பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இன்றைய உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினத்தன்று எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். எய்ட்ஸ் தடுப்பூசி உருவாக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள்யாவும் வெற்றி பெற வேண்டும். இதன் மூலம் வரும் காலங்களில் எய்ட்ஸ் நோயினால் ஏற்படும் உயிரிழப்பை தடுப்போம்.
இந்த பதிவும் உதவலாம்: உடலில் இந்த அறிகுறிகள் தென்பட்டால், அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation