
பொதுவாக நமக்கு பசி அல்லது தாகம் ஏற்படும் பொழுது, அதை நம்மால் உணர முடியும். அதேபோல உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் அதையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். இதற்கு நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது புதிதாக தோன்றும் அறிகுறிகளை நாம் கவனிக்க வேண்டும். அதிகப்படியான சோர்வு, வெப்பநிலை மாற்றங்கள், உடலின் ஏதேனும் பகுதியில் வலி போன்ற அறிகுறிகள் உடலில் ஏதேனும் ஒரு பிரச்சனையுடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஊட்டச்சத்து குறைபாடு, இரத்த சோகை அல்லது வேறு சில உடல்நல பிரச்சனைகளின் அறிகுறிகள் உடலில் தென்படும் பொழுது, அவற்றை கூர்ந்து கவனித்து சரியான நேரத்தில் கண்டறிந்தால் பல தீவிர நிலைகளை தடுக்கலாம்.
இந்த அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறியாவிட்டால், நிலை மேலும் மோசமாகலாம். உடலில் தென்படும் சில முக்கிய அறிகுறிகளை பற்றி உணவியல் நிபுணரான ரித்திமா பத்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். பின்வரும் அறிகுறிகள் யாவும் கவனிக்கப்பட வேண்டியவை, இவற்றை அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
இந்த பதிவும் உதவலாம்: உயர் இரத்த அழுத்தம் ஏற்பட காரணம் என்ன? இதன் அறிகுறிகளை அறிந்து தீர்வு காண்போம்!

ஆரோக்கியமற்ற ஈறுகளால் மட்டுமே ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படாது. இதற்கு வைட்டமின் C குறைபாடு, ஹார்மோன் சமநிலையின்மை, கல்லீரல் தொடர்பான நோய்கள் மற்றும் இரத்தம் சார்ந்த பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம். ஈறுகளில் இரத்தக்கசிவு பிரச்சனை இருந்தால் அதைக் புறக்கணிக்க வேண்டாம். இதை போக்க வைட்டமின் C நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
சிறுவயதில், கோடைக்காலத்தில் ஃபிரிட்ஜில் இருந்து ஐஸ்கட்டியை எடுத்து சாப்பிட்டு இருப்போம். ஐஸ் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இரத்த சோகையினால் தோன்றலாம். உடலில் இரத்தப் பற்றாக்குறை இருந்தால், இது போன்ற ஆசை வரும். இதை போக்க இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
வானிலை மாறும்போது சரும வறட்சி ஏற்படுவது இயல்பானது தான். ஆனால் கடுமையான வறண்ட சருமத்தால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்றால் அது ஊட்டச்சத்து குறைபாடின் காரணமாகவும் இருக்கலாம். பொதுவாக வைட்டமின் E குறைபாட்டினால் சரும வறட்சி ஏற்படும். இதை போக்க முட்டை, கீரை, பாதாம், சூரியகாந்தி விதைகள் போன்ற வைட்டமின் E நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

கால் வலி என்பது மிகவும் பொதுவான பிரச்சனை தான். இருப்பினும் உங்கள் பாதங்களில் தொடர்ந்து வலி இருந்தால், அது மெக்னீசியம் அல்லது வைட்டமின் D குறைபாடாகவும் இருக்கலாம். தசைகள் சோர்வடையும் பொழுதும், உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும் பொழுதும் கால் வலி ஏற்படலாம். வைட்டமின் D மற்றும் மெக்னீசியம் குறைபாட்டைப் போக்க பால், தயிர், மீன், பூசணி விதைகள் மற்றும் பச்சை இலைக் காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளவும்.
உடல் ஆரோக்கியத்தை நகங்களும் பிரதிபலிக்கின்றன. நகங்கள் அதிக வெண்மையாக இருந்தால் அது இரத்த பற்றாக்குறையை உணர்த்தலாம். அதேசமயம் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால் அது கல்லீரல் பிரச்சனையின் அறிகுறியாகவும் இருக்கலாம். பலவீனமான நகங்கள் வைட்டமின் B குறைபாட்டை குறிக்கின்றன. இதைப் போக்க ஆரஞ்சு, காளான், முட்டை மற்றும் சூரியகாந்தி விதைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்க உதவும் அற்புத பானம்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com