
பெண்களின் சருமத்தைப் பொலிவாக்க வைத்திருக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளில் ஈடுபடுவார்கள். அழகு நிலையங்களுக்குச் செல்வது முதல் வீட்டிலேயே முகத்திற்கு மஞ்சள், கடலை மாவு, பாசிப்பயறு போன்றவற்றைப் பயன்படுத்தி அழகாக்கிக் கொள்ள முயற்சிப்பார்கள். இவையெல்லாம் சருமத்திற்கு வெளியில் பயன்படுத்தும் இயற்கையான அழகு சாதனப் பொருட்கள். என்ன தான் சருமத்திற்கு வெளியில் அழகாக்கிக் கொள்ள முயற்சித்தாலும், உள்ளார்ந்த ஆரோக்கியமும் அழகு சேர்க்கும். இதற்கு சிறந்த தேர்வாக உள்ளது மாதுளை மற்றும் பீட்ருட். இவை எப்படி சருமத்தைப் பொலிவாக்கும்? என்பது குறித்த இங்கே அறிந்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க: Grey hair home remedy: இளநரை பிரச்சனை இனி இல்லை; இரசாயனம் இல்லாத வீட்டு வைத்திய முறையில் தீர்வு
உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய பழங்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது மாதுளை. மாதுளையில் உள்ள தோல், பழங்கள் அனைத்தையும் பயன்படுத்தலாம். மாதுளை பழங்களை ஜூஸாக்கித் தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும். தொடர்ச்சியாக இவ்வாறு செய்யும் போது இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆக்டி ஆக்ஸிடன்ட்கள் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. உடல் சுத்தமாகும் போது சரும புத்துணர்ச்சியும் அடைகிறது.
மாதுளை பழங்களை ஜூஸாக மட்டுமல்ல அதன் தோலை நன்கு பொடியாக்கிக் கொண்டு தண்ணீரில் கரைத்து ஸ்க்ரப் போன்று பயன்படுத்தவும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்யும் போது சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் முகப்பருக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறையக்கூடும்.
மேலும் படிக்க: Korean hair care: இளம் தலைமுறையினர் விரும்பும் கொரியன் ஹேர் ஸ்டைல் வேண்டுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
சரும பராமரிப்பு என்று வரும் போது உடனடியாக நினைவுக்கு வருவது பீட்ருட். அதிகமாக பீட்ருட் சாப்பிட்டால் முகம் கலராகிவிடும் என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆம் உண்மை தான். உடலுக்கு ஆற்றலையும் சருமத்திற்குப் புத்துணர்ச்சி மற்றும் பொலிவைத் தருகிறது பீட்ரூட் ஜுஸ். பீட்ரூட்டை நன்கு அரைத்து வடிகட்டி தினமும் காலையில் குடித்து வரவும். இதில் உள்ள ஆண்டிஆக்ஸிடண்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. எந்தளவிற்கு உடலின் இரத்த ஓட்டம் சீராக அமைகிறதோ? அந்தளவிற்கு உடல் எப்போதும் பொலிவுடன் இருக்கும்.
இதுபோன்று இந்த ஜுஸ்களைத் தொடர்ச்சியாக பருகி வந்தால் போதும் முகத்தில் பல மாற்றங்களை நீங்கள் அறிவீர்கள்.
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com