ஒரு மனிதனின் உடலின் ஒரு முக்கிய அங்கமாக விளங்குவது சிறுநீரகம் ஆகும். இது உடலில் பல முக்கியமான செயல்பாடுகளைச் செய்ய உதவுகிறது. ஒவ்வொரு நாளும் சிறுநீரகம் அதிகப்படியான தண்ணீரை அகற்றுகிறது, நச்சுகளை வெளியேற்றுகிறது, எலக்ட்ரோலைட்களை சமன் செய்கிறது, ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது மற்றும் உடலின் மற்ற செயல்முறைகளை சரியான முறையில் பராமரிக்கிறது.
சிறுநீரகம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால், நாம் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது மிகவும் முக்கியம். இது சிறுநீரகம் பழுதடைதலை தடுக்கிறது. இந்த கட்டுரையில், உங்கள் சிறுநீரகத்தின் நச்சுத்தன்மை நீக்க உதவும் சில பானங்களைப் பற்றி சொல்கிறோம்
இதுவும் உதவலாம் :உடல் எடையை இயற்கையாக குறைக்க டீடாக்ஸ் செய்வது எப்படி?
கொத்தமல்லி உணவை அழகுபடுத்துவதற்கும், மணத்தை தருவதற்கு மட்டுமல்லாமல், இது சிறுநீரகத்தின் நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. இதற்கு முதலில் ஒரு கொத்து கொத்தமல்லியை எடுத்து சுத்தமாக கழுவி கொள்ள வேண்டும். பின்னர் அதை பொடியாக அரிந்து, ஒரு பாத்திரத்தில் போடவும். அதை நன்கு கழுவி விட வேண்டும்.
இப்போது நல்ல தண்ணீரை பாத்திரத்தில் அரிந்த கொத்துமல்லியுடன் சேர்த்து, பத்து நிமிடம் கொதிக்க வைத்து ஆறவிடவும். அதை வடிகட்டி சுத்தமான பாட்டிலில் நிரப்பி குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். தினமும் ஒரு கப் கொத்துமல்லி நீரை குடிக்கவும். இரண்டே நாட்களில் உங்களிடம் ஏற்படும் ஒரு மாற்றத்தை உங்களால் உணர முடியும்.
ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் சிட்ரிக் அமிலமானது சிறுநீரக கற்களை கரைத்து, நச்சுகளை வெளியேற்றம் செய்கிறது. எனவே இதனை கொண்டு நச்சுநீக்கி பானத்தை தயார் செய்யலாம். இதைச் செய்ய, ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரைச் சேர்க்கவும்.
மாதுளம்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால், இது சிறுநீரக கற்களை அகற்றுவதில் உதவி புரிகிறது. பொட்டாசியம் சிறுநீரின் அமிலத்தன்மையைக் குறைத்து, சிறுநீரக கல் உருவாவதைத் தடுக்கிறது. மேலும், இதை உட்கொள்ளும் போது, சிறுநீரகங்களில் இருந்து நச்சுகள் மற்றும் கழிவுகள் வெளியேறி விடுகிறது. இதற்காக, மாதுளை பழச்சாற்றை தயார் செய்து அடிக்கடி உட்கொண்டு வரலாம்.
பீட்ரூட் சாறில் பீட்டேன் எனும் வேதி பொருள் உள்ளது. இது மிகவும் பயனுள்ள பைட்டோ கெமிக்கல் ஆகும். இது ஆன்டி ஆக்சிடென்ட்கள் பண்புகளைக் கொண்டுள்ளது. இது சிறுநீரகங்களில் இருந்து கால்சியம் பாஸ்பேட் மற்றும் ஸ்ட்ரூவைட் உருவாக்கத்தை அழிக்க உதவும். இது சிறுநீரகத்தின் நச்சுத்தன்மையை நீக்குவதுடன், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் அபாயத்தையும் குறைக்கிறது.
இந்த டீடாக்ஸ் பானத்தை தயாரிக்க, பீட்ரூட் சாற்றை ஜூஸரில் எடுக்கவும். இத்துடன் சிறிது எலுமிச்சை, இஞ்சி, கொத்தமல்லி மற்றும் புதினாவையும் சேர்க்கலாம். இப்போது இந்த சாற்றை உட்கொள்ளுங்கள்.
இதுவும் உதவலாம் :குளிர்காலத்திற்கு ஏற்ற 3 டீடாக்ஸ் டீ ரெசிபிக்கள்
நெல்லி சாறு சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கு (UTI) மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. சிறுநீரகங்களில் இருக்கும் அதிகப்படியான கால்சியம் ஆக்சலேட்டை அகற்றவும் நெல்லி சாறு பயன்படுகிறது. உங்கள் சிறுநீரகத்தின் நச்சுத்தன்மையை நீக்க நெல்லியை கொண்டு வீட்டிலேயே சாறு தயாரித்து உட்கொள்ளலாம்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com