
சருமத்திற்குப் பொலிவைத் தருவது மட்டுமல்ல, பீட்ரூட்டில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பல வகைகளில் ஆற்றலை அளிக்கிறது. இதுவரை பீட்ரூட்டை உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பது தெரியவில்லையென்றால் இந்த கட்டுரையின் வாயிலாக அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: உடல் எடையை குறைக்க உதவும் சீரக தண்ணீர்; எப்படி தெரியுமா?
பீட்ரூட்டை ஜூஸாக குடிக்கும் போது இதில் உள்ள நைட்ரேட்டுகள் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிப்பதோடு, உடலில் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை தற்போது அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது உயர் இரத்த அழுத்தம். அதிகமானாலும், குறைவானலும் உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்பதால் எப்போது சீராக வைத்திருக்க வேண்டும். மருந்துகள் சாப்பிடுவதற்குப் பதிலாக ஆரம்பத்தில் இருந்தே இயற்கையான முறையில் இரத்த அழுத்தத்தைக் குறைக்க முயற்சி செய்யலாம். இதற்கு பீட்ரூட் சிறந்த தேர்வாக அமையும். பொரியலாக செய்து சாப்பிடுவதற்குப் பதிலாக ஜூஸாக செய்து பருகும் போது இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதயத்திற்கு ஆரோக்கியம் அளிப்பதோடு உயர் இரத்த அழுத்த அபாயத்தையும் குறைக்கிறது.
பீட்ரூட்டில் உள்ள நைட்ரிக் ஆக்சைடி உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்கும். இதோடு மூளைக்குச் செல்லக்கூடிய இரத்தத்தை சீராக்குவதோடு செயல்திறனையும் அதிகரிக்கிறது. இதனால் பலரும் அடிக்கடி சந்திக்கும் கவனக்குறைவு, நினைவாற்றல் செயலிழப்பு போன்ற பிரச்சனைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க உதவுகிறது.
பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து இதயத்தின் செயல்திறனை மேம்படுத்துகிறது. தினமும் ஜுஸாக பீட்ரூட்டைக் குடிக்கும் போது இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதயத்தைப் பாதுகாக்கிறது.
மேலும் படிக்க: ஆரோக்கியத்தை பாதிக்கும் ஆபத்தான உணவுகள்; இவற்றை தவிர்ப்பது உடலுக்கு நல்லது
பீட்ரூட்டில் பீட்டான்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை உடலில் இருந்து நச்சுகளை திறம்பட அகற்ற உதவுகின்றது.
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com