இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் தவறான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு முறை போன்ற பழக்கத்தால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. வயது வரம்பின்றி இளைஞர்கள் உட்பட பலரும் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆளாகிறார்கள். இதுபோன்ற கடுமையான நோய்களை போலவே சிறுநீர் தொற்றும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது.
உடலில் நீர் பற்றாக்குறை அல்லது நீண்ட நேரம் சிறுநீரை அடக்குவதால் சிறுநீர் தொற்று ஏற்படுகிறது. ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களே இது போன்ற தொற்றுகளுக்கு அதிகம் ஆளாகிறார்கள். சிறுநீர்ப்பை குழாயில் தொற்று அல்லது வீக்கம் ஏற்படும்போது சிறுநீர் தொற்று ஏற்படுகிறது. அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும்பொழுது எரிச்சல் உணர்வு, சிறுநீருடன் இரத்தம் கலந்து வருவது, இடுப்பு அல்லது அடிவயிற்றில் வலி போன்றவை சிறுநீர் தொற்றின் பொதுவான சில அறிகுறிகள் ஆகும். இந்நிலையில் சிறுநீர் தொற்றிலிருந்து விடுபட உதவும் 5 சிறந்த வீட்டு வைத்தியங்களை இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம்.
இந்த பதிவும் உதவலாம்: கருப்பு கொண்டைக்கடலை சாப்பிட சரியான நேரம் எது? நிபுணர் டிப்ஸ்!
நெல்லிக்காயில் வைட்டமின் C நிறைந்துள்ளது. இது குளிர்ச்சியான விளைவை கொண்டுள்ளதால் சிறுநீர் தொற்று பிரச்சனைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியுடன் 4-5 ஏலக்காய் விதைகளை அரைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் தொற்று குணமாகும்.
சிறுநீர் தொற்று பிரச்சனையிலிருந்து விடுபட இளநீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது உடலை உள்ளிருந்து நீரேற்றமாக வைத்துக் கொள்வதுடன் வயிற்றையும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும். சிறுநீர் தொற்றிலிருந்து நிவாரணம் பெற இளநீர் குடிக்கலாம்.
தொற்று நோயிலிருந்து உடலை பாதுகாக்க கூடிய ஏராளமான நற்பண்புகள் தயிரில் நிறைந்துள்ளன. எனவே சிறுநீர் தொற்று பிரச்சனைக்கும் தயிர் உதவும். தயிர் சாப்பிடுவதால் சிறுநீர் தொற்றினால் ஏற்படும் எரிச்சல் உணர்வை குறைக்கலாம். நீங்கள் விரும்பினால் தயிரை கடைந்து மோராகவும் குடிக்கலாம். இதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் தொற்றில் இருந்து நிவாரணம் பெற உதவும்.
ஏலக்காய் சாப்பிடுவது சிறுநீர் தொற்றுக்கு நன்மை தரும். சிறுநீர் தொற்றிலிருந்து விடுபட 5-6 ஏலக்காய் விதைகளை அரைத்து அரை டீஸ்பூன் சுக்கு பொடியுடன் கலக்கவும். இந்த கலவையை மாதுளை சாறு, கல் உப்பு மற்றும் வெந்நீருடன் சேர்த்து குடிக்கலாம்.
ஆப்பிள் சிடர் வினிகரை சரியான முறையில் சரியான அளவுகளில் எடுத்துக் கொள்ளும் பொழுது பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். இது சிறுநீர் தொற்றுக்கும் நன்மை பயக்கும். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் தேன் கலந்து குடிப்பதன் மூலம் சிறுநீர் தொற்றின் அறிகுறிகளை குறைக்கலாம்.
மறுப்பு: கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் யாவும் பொதுவானவை. இவற்றை மருத்துவ ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மருத்துவரை அணுகி உங்கள் பிரச்சனைக்கு ஏற்ற சரியான ஆலோசனையை பெறவும்.
இந்த பதிவும் உதவலாம்: ஓரே வாரத்தில் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ஒல்லியான இடை அழகு தரும் 5 உணவுகள்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com