herzindagi
image

வாயு காரணமாக பலூன் போல் ஊதி இருக்கும் வயிற்றை 10 நிமிடங்களில் குணப்படுத்தும் வீட்டு வைத்தியம்

வாயு, துர்நாற்றம்,  மற்றும் வீக்கம் போன்று வயிறு தொந்தரவு செய்தால், தீர்வு காணசமையலறையில் இருக்கும் பொருட்களை நாடலாம் . இஞ்சி மற்றும் பெருஞ்சீரகம் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு அருமருந்து. 
Editorial
Updated:- 2025-01-06, 01:07 IST

வயிற்றில் ஏற்படும் வாயு மிகவும் பொதுவான பிரச்சனையாகும். இது நம் அன்றாட வழக்கத்தின் ஒரு கட்டத்தில் நம் அனைவரையும் தொந்தரவு செய்கிறது. பொதுவாக விடுமுறை நாட்களில் அதிகப்படியாகச் சாப்பிட்டு வயிற்றை பலூன் போல் பெருக்கிக் கொள்கிறோம். சில சமயங்களில் வாயுவால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் செரிமான பிரச்சனைகள் நம்மை வெட்கப்பட வைக்கிறது. கனமான உணவுகளை உண்பதாலும், உணவைச் சரியாகச் செரிக்காததாலும் அல்லது செரிமானம் குறைவதாலும் வயிற்றில் பல மடங்கு வாயு உருவாகத் தொடங்கி. இதற்கு முக்கிய காரணம் செரிமான அமைப்பு சரியாக வேலை செய்யாதபோது, உணவை ஜீரணிப்பது கடினமாகிறது. கொழுப்பு கல்லீரல் இருந்தாலும் இப்படி நிகழும் வாய்ப்புகள் அதிகம்.  பல சமயங்களில் மன அழுத்தம் மற்றும் உடல் உழைப்பு இல்லாமை போன்றவையும் செரிமானத்தைப் பாதிக்கச் செய்கிறது. வயிற்றில் வாயு, துர்நாற்றம், மற்றும் வீக்கம் போன்ற தொந்தரவு இருந்தால், அதன் தீர்வு காண சமையலறைக்குச் செல்லலாம்.  இஞ்சி மற்றும் பெருஞ்சீரகம் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு அருமருந்து. இதைப் பற்றி டயட்டீஷியன் நந்தினியிடம் பேசினோம், அவரும் அதை சரியாகக் கருதினார்.

 

மேலும் படிக்க: தொளதொள தொப்பை இருந்தால் இந்த உடல்நல பிரச்சனைகள் உங்களுக்கு வரலாம்

வாயு பிரச்சனையைப் போக்கு மசாலா டீ

 

  • இஞ்சி மற்றும் பெருஞ்சீரகத்தில் இருந்து தயாரிக்கப்படும் இந்த தேநீர் வயிற்று வாயு மற்றும் அஜீரணத்தை குறைக்க உதவும்.
  • வெந்தயத்தில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் வயிற்று வாயு, அஜீரணம் மற்றும் மலச்சிக்கலைப் போக்க உதவும்.
  • பெருஞ்சீரகம் மற்றும் இஞ்சி இரண்டும் செரிமான பண்புகளைக் கொண்டுள்ளன. அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் செரிமான மண்டலத்தை தளர்த்துவதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
  • உணவு உண்ட பிறகு வயிறு வீங்கி, வாயு உருவாகி, வயிற்றில் கனமாக இருந்தால், இந்த டீ நன்மை பயக்கும்.
  • இஞ்சி செரிமான சாறு சுரப்பை அதிகரிக்கும். இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும்.
  • இஞ்சி மற்றும் பெருஞ்சீரகம் தேநீர் குடிப்பதன் மூலம் வாய்வு மற்றும் வாயு பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • இந்த தேநீர் நெஞ்செரிச்சல் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் பிரச்சனைகளுக்கும் நிவாரணம் அளிக்கும்.
  • பசி இல்லாதவர்களுக்கும், உணவு உண்டவுடன் வாந்தி எடுப்பவர்களுக்கும் இந்த தேநீர் பயனுள்ளதாக இருக்கும்.
  • இந்த டீயை ஒரு நாளைக்கு 1-2 முறை குடித்து வந்தால் வயிறு எளிதாக சுத்தமாகும்.

ginger tea

Image Credit: Freepik

தேவையான பொருள்கள்

 

  • பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
  • இஞ்சி - அரை அங்குலம்

belly fat (1)

 Image Credit: Freepik


செய்முறை

 

  • 1 கிளாஸ் தண்ணீரில் இஞ்சி மற்றும் பெருஞ்சீரகம் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • நிறம் மாறிய பிறகு அதை வடிகட்டவும்.
  • இந்த தேநீர் குடிக்க தயாராக உள்ளது.
  • இது வயிற்று வாயு மற்றும் அஜீரணத்திலிருந்து நிவாரணம் அளிக்கும்.

 

மேலும் படிக்க: நச்சு நீக்கும் இந்த பானத்தைக் குடித்து வந்தால் இரண்டே வாரத்தில் 2 கிலோ எடையை குறைக்கலாம்


இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com