herzindagi
digestion home remedies

digestion problem : செரிமான பிரச்சனைக்கு உதவும் சிறந்த வீட்டு வைத்தியம்

உங்களுக்கு உணவு செரிமான பிரச்சினை இருந்தால், சீரகம், தனியா மற்றும் சோம்பு சேர்த்து ஒரு மசாலா டீ தயாரித்து குடிக்கலாம்.&nbsp; <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2023-02-16, 09:37 IST

வயிறு சம்பந்தமான உபாதைகள் இருந்தால், நீங்கள் இது போன்ற மசாலா தேநீரை செய்து குடிக்கலாம். இதனால் வயிறு பிரச்சனை அனைத்தும் குறைந்து விடும்.

இந்த மசாலா டீ மூன்று மிகச்சிறந்த, எளிதாக நம் சமையல் அறையில் கிடைக்க கூடிய பொருட்களால் ஆனது. அவை தான் தனியா, சீரகம், சோம்பு ஆகியவை.

ஆயுர்வேத நிபுணர் டாக்டர். தீக்ஷா பவ்சர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த மசாலா டீ செய்முறை பற்றி பகிர்ந்துள்ளார். டாக்டர் தீக்ஷாவை பொறுத்தவரை செரிமான பிரச்சினைகள் அனைத்தையும் சரிசெய்ய கூடியது இந்த மசாலா டீ. உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. மூன்று சமையல் பொருட்கள் கொண்டு இந்த மசாலா டீயை தயாரிக்கலாம். ஒருவேளை நீங்கள் அதிக இனிப்பு, அதிக காரம் அல்லது அதிக அளவில் உணவு உணண நேர்ந்தால், இந்த டீ சிறந்தது.

இதுவும் உதவலாம்:குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் 3 வகையான மூலிகை டீ

இந்த டீயை ஆயுர்வேத மருந்தாக கூட பயன்படுத்தலாம். நெஞ்சு எரிச்சலை முற்றிலும் குணப்படுத்தும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சி எடுக்கிறது மற்றும் நச்சுக்களை வெளியேற்றுகிறது.

மசாலா டீ இது போன்ற உடல் உபாதைகளை சரி செய்ய கூடியது. அவை

  • வயிறு உப்புசம் பிரச்சினையை தீர்க்கிறது
  • வயிற்றில் உள்ள பிடிப்புகளை நீக்குகிறது
  • வயிற்று வலிகளை விரட்டுகிறது
  • சரியான நேரத்தில் பசியை தூண்டுகிறது
  • குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனையை தீர்க்கிறது
  • மாதவிடாய் வலிகளை போக்குகிறது
  • இது இரத்த சர்க்கரை அளவை கட்டுபடுத்துகிறது
  • எரிச்சலை குணப்படுத்துகிறது
  • மன அழுத்தம் நீங்குகிறது

இந்த மசாலா டீயை எப்படி தயாரிப்பது?

மசாலா டீ தயாரிப்பது மிகவும் எளிமையானது. இதை 5 நிமிடத்தில் செய்து முடித்து விடலாம்.

digestion issue in tamil

தேவையான பொருள்

1 ஸ்பூன் சீரகம்

1 ஸ்பூன் தனியா

1 ஸ்பூன் சோம்பு

1.5 கப் தண்ணீரில் இவற்றை சேர்த்து வேக வைத்து, வடிகட்டி குடிக்கவும். விருப்பப்பட்டால் ருசிக்காக இதில் சிறிது தேன் சேர்க்கலாம். அடுப்பில் இருந்து இறக்கிய பிறகு மட்டுமே தேன் சேர்க்க வேண்டும். தேனை சூடு படுத்த கூடாது.

இந்த டீயின் சுவை எவ்வாறு இருக்கும்?

இதன் சுவை அதிகம் கசக்காது. அதனால் இதை குடிப்பதில் நமக்கு எந்த சிரமமும் இருக்காது. காலையில் குடிக்கலாம் அல்லது வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது உணவு சாப்பிட 1 மணி நேரத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ குடிக்கலாம். மசாலா டீ மிகவும் பயனை தரக்கூடியது. செரிமான பிரச்சினைகள் அனைத்தையும் சரிசெய்ய கூடியது என்பது நிரூபணமாகியுள்ளது.

digestion problem in tamil

ஆயுர்வேத மருத்துவம் அனைவருக்குமே பொருந்தும் என்று சொல்ல முடியாது. மசாலா டீ தயாரிக்கும் பொருட்களில் ஒன்று உங்களுக்கு ஒவ்வாமையை உண்டாக்கும் பொருளாக இருக்கலாம், உங்களுக்கு மோசமான வயிறு சம்பந்தமான உபாதைகள் இருக்கிறதா, நீங்கள் வேறு ஏதாவது நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறீர்களா? அப்படி என்றால் நீங்கள் மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகு இந்த மசாலா டீயை பருகலாம்.

இதுவும் உதவலாம்:டீயுடன் ரஸ்க் சாப்பிடுவது பல உடல் நல கோளாறுகளை ஏற்படுத்தும்

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com