துளசி என்பது ஒவ்வொரு வீட்டிலும் நீங்கள் பொதுவாகக் பார்க்கக்கூடிய ஒரு செடியாகும். மூலிகைகளின் ராணி என்றும் அழைக்கப்படும், துளசி ஆன்டி ஃபங்கல், ஆன்டி வைரஸ் மற்றும் ஆன்டி பாக்டீரியா குணங்களை கொண்டுள்ளது. இது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு சிறந்தது. துளசி பொதுவாக நாடு முழுவதும் கிடைக்கிறது என்றாலும், பலருக்கு அது தரும் எண்ணிலடங்கா நற்பலன்களை பற்றி தெரியாது.
உங்கள் அன்றாட உணவில் துளசி சேர்க்கும் போது, அதனுடைய அனைத்து விதமான அற்புத நன்மைகளையும் நம்மால் பெற்று கொள்ள முடியும். உங்கள் உணவில் துளசியைச் சேர்ப்பதற்கு உண்டான பல்வேறு வழிகள் என்ன என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.
இதுவும் உதவலாம் :துளசி இலைகள் மாதவிடாயை தூண்டுமா ?
துளசி டீ
துளசியை டீயாக செய்து குடிப்பது, உங்கள் உணவில் துளசியைச் சேர்ப்பதற்கான எளிதான வழிகளில் ஒன்றாகும். நீங்கள் ஒரு டீ பிரியர் என்றால், நீங்கள் வழக்கமாக தயாரிக்கும் போது தண்ணீரில் ஒரு கைப்பிடி துளசி இலைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த டீ மிகவும் சுவையாக இருக்கும் , மேலும் மூச்சுத் திணறல் மற்றும் மூச்சடைப்பு போன்ற சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதில் உதவுகிறது. ஒரு கப் துளசி டீ நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
துளசி நீர்
உங்களுக்கு துளசி டீ பிடிக்கவில்லை என்றால் ஒரு கப்துளசி கலந்த தண்ணீரை குடிப்பது ஒரு நல்ல தேர்வாகும். ஒரு கடாயில், சிறிது தண்ணீர் மற்றும் ஒரு கைப்பிடி துளசி இலைகளை சேர்க்கவும். தண்ணீரை கொதிக்க வைத்து வடிகட்டவும். இந்த தண்ணீரை ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை குடிக்கவும். துளசி நீர் ஆரோக்கியமானது மற்றும் நாள் முழுவதும் உங்கள் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க ஒரு சிறந்த வழியாகிறது.
துளசி கலந்து செய்த சாறுகள்
துளசி ஆரோக்கியமானது மட்டுமல்ல, உங்கள் பானங்களுக்கு புத்துணர்ச்சி தரும் சுவையையும் சேர்க்கிறது. ஜூஸ் தயாரிக்கும் போது நீங்கள் ஒரு கைப்பிடி இலைகளை சேர்க்கலாம். இந்த இலைகள் உங்கள் பானத்திற்கு புதிய மற்றும் அமைதியான சுவையை சேர்க்கின்றன.
துளசி இலைகளை மெல்லலாம்
ஒரு வேளை உங்களுக்கு போதுமான நேரம் இல்லை என்றால், ஒரு பிடி துளசி இலைகளை மென்று சாப்பிட்டால், அது உங்கள் ஆரோக்கியத்தில் பல மாயங்களை ஏற்படுத்தும்.
துளசி இலைகளை பழங்கள் மற்றும் காய்கறி கலவையுடன் சேர்க்கவும்
துளசியில் உங்கள் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் நிரம்பியுள்ளன. ஒவ்வொரு நாளும் இந்த வைட்டமின்கள் உங்கள் உடலால் எரிக்கப்பட வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளின் கலவையில் சில துளசி இலைகளைச் சேர்க்கவும்.
துளசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
துளசியில் ஜிங்க் மற்றும் வைட்டமின் C உள்ளது, இது இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆன்டி பாக்டீரியா, ஆன்டி ஃபங்கல் மற்றும் ஆன்டி வைரஸ் பண்புகளையும் கொண்டுள்ளது, இதனால் தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
துளசியை உட்கொள்வது செல்களின் செயல்பாட்டைக் தடுக்க உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
சளி, இருமல் மற்றும் காய்ச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது
பருவ நிலை மாற்றம் காரணமாக, நம்மில் பலர் நோய்வாய்ப்படுகிறோம். மற்ற சுவாச கோளாறுகளுடன் சேர்ந்து சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறோம். துளசியில் யூஜினோல் உள்ளது, இது சளி, இருமல், காய்ச்சல் மற்றும் தொண்டை கமறலை குறைக்க உதவுகிறது.
புற்றுநோய் தடுக்கும் பண்புகள்
துளசியில் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. இதனால் நுரையீரல், கல்லீரல், வாய்வழி மற்றும் தோல் புற்றுநோய்கள் தடுக்கப்படுகிறது.
இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது
உயர் இரத்த அழுத்தம் என்பது இன்று பெண்கள் சந்திக்கும் பொதுவான உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்றாகும். உடலில் வீக்கம் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் கலவைகள் துளசியில் உள்ளன.
இதுவும் உதவலாம் :கழுத்தை சுற்றியுள்ள கருமை ஒரு தீவிர நோயின் அறிகுறியா !
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
துளசியில் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இது பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation