நீங்கள் அனைவரும் எப்போதாவது ஒரு முறை நரிப்பயிரை(மோத் தால்) ருசித்திருக்க கூடும். சில சமயம் முளை கட்டிய பயறுகளாகவும் சில சமயம் பருப்பு வகைகளாகவும் உட்கொள்ளப்படுகிறது. இந்த பருப்பு சுவையில் அற்புதமாக இருப்பது மட்டும் அல்லாமல், பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் உதவுகிறது. எலும்பு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட வைப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது.
நீங்கள் இதற்கு முன் கேள்விப்பட்டிராத இந்த நரிபயறின் சில ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி, புகழ்பெற்ற டாக்டர் அகன்க்ஷா அகர்வால் (BHMS), புது தில்லி அவர்களிடம் இருந்து கேட்டு அறிந்து கொள்வோம். இந்த பருப்பை உங்கள் வழக்கமான உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதுவும் உதவலாம்:உடல் எடையை குறைக்க உதவும் 1 மாத டயட் பிளான்
இது வலுவான எலும்புகளை பராமரிக்கவும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களின் அபாயத்தைத் தடுக்க உதவுகிறது. பாஸ்பரஸ் சத்துக்களும் இதில் ஏராளமாக காணப்படுவதால், இது எலும்புகளை பலமாக்க உதவுகிறது. உங்களுக்கும் எலும்புகள் தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தால், கட்டாயமாக நரிப்பருப்பை ஏதாவது ஒரு வகையில் சமைத்து உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நரிப்பயரில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன, எனவே அவற்றை உட்கொண்டால், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ்களுக்கு எதிராக உடலைப் பாதுகாக்கிறது. ஜிங்க் என்ற சத்து ஏராளமாக உள்ளது, இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர, அது உடலுக்கு நோய்களை எதிர்த்துப் போராடும் திறனை வளர்க்கிறது. இது பல்வேறு வகையான உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.
ஜிங்க் உடலுக்கு ஒரு ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது, இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அதாவது, பரபரப்பான வாழ்க்கை முறையில் வேலை செய்பவர்கள் மற்றும் உடலைப் பராமரிக்க முடியாதவர்கள் தினமும் இந்த பருப்பை உட்கொள்வது பயனுள்ளதாக இருக்கும். ஜிங்க் நிறைந்த உணவுகளை உட்கொள்வது உடலில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
மற்ற பருப்பு வகைகளைப் போலவே, நரிப்பயர் புரதத்தின் சிறந்த மூலமாகும், இது தசைகளை உருவாக்குவதற்கும் சரிசெய்வதற்கும் அவசியம் தேவைப்படுகிறது. காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற உணவுப் பொருட்களிலிருந்து புரதத்தைப் பெற வேண்டிய சைவ உணவாளர்களுக்கு இது புரதத்தின் சிறந்த மூலமாகும்.
அதிக புரதம் இருப்பதால், எடை இழக்க முயற்சிக்கும் மக்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இது தசைகளை பெரிதாக்குகிறது, இது கலோரிகளை எரிக்கிறது. ஒரு நபர் முளை கட்டிய வடிவில் உட்கொள்ளும்போது, அவர் நீண்ட நேரம் வயிறு முழுதாக நிரம்பிய உணர்வுடன் இருப்பார் மற்றும் பசியின்மை காரணமாக அதிக உணவை உட்கொள்வதைத் தவிர்த்து விடுவார்.
இதுவும் உதவலாம்:எந்த டீயில் காஃபின் இல்லை?
நரிப்பயரில் வைட்டமின் B உள்ளது, இது உணவை எரிபொருளாக மாற்றுவதற்கு அவசியம் தேவைப்படுகிறது. முழுமையான ஊட்டச்சத்துக்காக இதை நீங்கள் அன்றாடம் சாப்பிடும் பருப்பு உணவுடன் சேர்த்துக்கொள்ளுங்கள். துத்தநாகம் என்ற சத்து முக்கியமாக மன அழுத்தத்தைக் குறைத்து உடலுக்கு சக்தியை அளிக்கிறது.
மலச்சிக்கல் என்பது இன்றைய காலத்தில் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. வயிற்றை சரியாக சுத்தம் செய்யாத போது அது பல நோய்களுக்கும் காரணமாகிறது. இதில் நார்ச்சத்துகள் ஏராளமாக இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கிறது. இது தினமும் கழிவுகளை வெளியேற்றம் செய்கிறது மற்றும் குடலில் இருக்கும் நச்சுகளை அழிக்கிறது. இந்த பருப்புகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் உருவாகும் அபாயங்கள் குறைக்க உதவுகிறது.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image source: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com