herzindagi
healthy tea

எந்த டீயில் காஃபின் இல்லை?

 டீ சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால் அதில் உள்ள காஃபின் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். சில காஃபின் இல்லாத டீயை பற்றி பார்க்கலாம்...
Editorial
Updated:- 2023-04-17, 09:03 IST

வேலை களைப்பை போக்கவும் , வீட்டுக்கு விருந்தினர் வந்தாலும் கட்டாயமாக டீ போடுவோம். நிச்சயமாக டீ உங்களுக்குள் அதிக புத்துணர்வை ஏற்படுத்தும், ஆனால் அதை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, அதில் உள்ள காஃபின் ஆரோக்கியத்திற்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. அதிகப்படியான காஃபின் உங்கள் உடலை நீரிழப்பு செய்வதோடு இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும். இதுமட்டுமின்றி, அதிகப்படியான காஃபின் காரணமாக, குமட்டல் மற்றும் தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகளையும் நீங்கள் உணரலாம். எனவே, காஃபினை அளவாக உட்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.இந்த கட்டுரையில் சில காஃபின் இல்லாத தேநீர் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

புதினா டீ

புதினா செடியின் இலைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது மற்றும் இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். இந்த டீயை உட்கொள்வது செரிமானத்திற்கு உதவுகிறது. புதினாவில் மெந்தோல் உள்ளது, இது செரிமான மண்டலத்தில் உள்ள தசைகளை தளர்ச்சி அடைய செய்து அவற்றை குளுமை படுத்தும். நீங்கள் சிறிது நேரம் இளைப்பாற விரும்பினால், நீங்கள் ஒரு கப் புதினா டீ குடிக்கலாம். புதினா டீ தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். இப்போது அடுப்பை அணைத்து அதில் புதினா இலைகளை போட்டு ஐந்து நிமிடம் அப்படியே வைக்கவும். இப்போது தண்ணீரை வடிகட்டி அதில் தேன் அல்லது வெல்லம் கலந்து குடிக்கவும்.

இதுவும் உதவலாம்:பூக்களால் செய்யப்படும் டீ உடலுக்கு நல்லதா?

herbal tea for health

செம்பருத்தி டீ

செம்பருத்தி டீ ஒரு மூலிகை டீ ஆகும், இது செம்பருத்தி பூக்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது மற்றும் இது இயற்கையாகவே காஃபின் இல்லாதது. வைட்டமின் C சத்து செம்பருத்தி நீரில் அதிகம் உள்ளது, இதன் காரணமாக இது நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் நல்லது. செம்பருத்தி டீ தயாரிக்க, தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் செம்பருத்தி பூக்களை சேர்க்கவும். இப்போது அடுப்பை அணைத்து, 15-20 நிமிடங்கள் தண்ணீரை இப்படி விடவும். பிறகு தண்ணீரை வடிகட்டி தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் ஆறவிடவும். கடைசியாக, நீங்கள் அதை குளிர்ச்சியாக பருகலாம்.

இஞ்சி டீ

இஞ்சி டீ இயற்கையாகவே காஃபின் இல்லாதது மற்றும் செரிமானத்திற்கும் உதவுகிறது. இஞ்சியில் ஆன்டி இன்பிளமேட்டரி மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் உள்ளன. இஞ்சி டீ தயாரிக்க, இஞ்சியை அரைத்து தண்ணீருடன் கலக்கவும். இப்போது அதை கொதிக்க வைக்கவும். அதன் பிறகு, அதை வடிகட்டி அரை எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலக்கவும்.

இதுவும் உதவலாம்:கோடையில் உடல் எடையை குறைக்க உதவும் சிறந்த ஜூஸ் எது தெரியுமா?

home made herbal tea

துளசி டீ

வழக்கமாக, வழக்கமான டீயில் நாம் துளசியை அடிக்கடி சேர்த்து குடிப்போம், ஆனால் நீங்கள் விரும்பினால், துளசி டீயை தனிபட்ட முறையிலும் தயாரித்து குடிக்கலாம். இது முற்றிலும் காஃபின் இல்லாதது. இதைச் செய்ய, ஒரு கப் கொதிக்கும் நீரில் துளசி இலைகள் மற்றும் வெல்லம் சேர்க்கவும். இப்போது தண்ணீரில் அரை எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து வடிகட்டி, பருகவும். எனவே இனிஊ நீங்களும் இந்த தேநீர்களை விதவிதமாக உட்கொள்ளலாம். அவை அனைத்தும் காஃபின் இல்லாதவை என்பதால் கவலைப்பட தேவையில்லை.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com