ஒரு இல்லத்தரசி ஜிம்மிற்குச் செல்வதும், வீட்டு வேலைகளுடன் உடற்பயிற்சி செய்வதும் மிகவும் கடினம். வீட்டு வேலைகளைச் செய்வதன் மூலம் கலோரிகள் எரிக்கப்படுகின்றன, ஆனால் அது போதாது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் யாரிடமாவது எடை குறைப்புக்கான உணவு திட்டத்தை பற்றி ஆலோசனைகளை கேட்டால், அவர்கள் எந்த உணவு பொருளையும் தொடக்கூடாது என்றும், எல்லாவற்றையும் விட்டுவிடுமாறு அறிவுறுத்துவார்கள். ஆனால் உணவு திட்டம் என்பது உணவை கைவிடுவது இல்லை.
நொய்டாவைச் சேர்ந்த நியூட்ரிட்டுவின் நிறுவனர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரான இடு பரத்வாஜ் கூறுகையில், “உணவு கட்டுப்பாடு என்ற பெயரை கேட்டாலே, உணவைக் கைவிட வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் உணவுத் திட்டம் என்றால் நீங்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவைச் சேர்ப்பது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் உணவுமுறையை கட்டுப்பாடுடன் உண்ண வேண்டும் மற்றும் சீரான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். நாள் முழுவதும் நாம் எதைச் சாப்பிட்டாலும், அதுவே நமது எடை அதிகரிப்பதற்குக் காரணமாகும். எனவே, உங்கள் உணவு தட்டில் இருந்து அவற்றை அகற்றுவதன் மூலம், நீங்கள் ஆரோக்கியமான விருப்பத்தை கடை பிடிக்கலாம்.
இதுவும் உதவலாம்:மலச்சிக்கல் தீர சோம்பை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
டாக்டர் இடு மேலும் கூறுகிறார், 'நான் யாரையும் பசியுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதில்லை. உடல் எடையைக் குறைக்கும் முன், உணவுத் திட்டத்தைத் தொடங்கும் முன், உங்கள் உடல் தன்மை, உடல்நலப் பிரச்னைகள் போன்றவற்றைத் தெரிந்து கொண்டு, அதன் பிறகுதான் புதிய உணவு திட்டத்தை தொடங்க வேண்டும். உணவியல் நிபுணர் இடுவும் தனது 1 மாத உணவுத் திட்டத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார், அது என்னவென்று இங்கு காண்போம்.
நீங்கள் காலை உணவில் 2 இட்லி மற்றும் சாம்பார் சாப்பிடுங்கள். இது தவிர, வேக வைத்த காய்கறிகள், ராகி, மற்றும் கடலை சட்னி சாப்பிடலாம். காலை உணவில் எதைச் சாப்பிட்டாலும், அத்துடன் வேகவைத்த முட்டையைச் சேர்க்கவும். 1 மாதத்திற்கு இந்த மூன்று பொருட்களையும் மாறி மாறி சாப்பிடலாம். இதன் மூலம் ஒரே மாதிரியான உணவை உண்பதில் சலிப்பு ஏற்படாது. குறிப்பு: 30 நிமிடங்களுக்குப் பிறகு நீங்கள் மஞ்சள் பால் குடிக்க வேண்டும். சிறுதானிய தோசை வகைகளும் சேர்க்கலாம்.
காலை உணவு சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பியிருக்கும், ஆனால் அதற்குள் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், ஆரஞ்சு, திராட்சைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, கிவி போன்ற ஏதாவது ஒரு சிட்ரிக் பழத்தை சாப்பிடலாம். இது தவிர 1 கிண்ணம் அளவு முளைவிட்ட பயறு சாலட் சாப்பிடலாம். இதை சாப்பிடுவதன் மூலம், உங்கள் பசி அடங்கும் மற்றும் நார்ச்சத்து நிறைந்த முளை கட்டிய பயிறுகள் உங்கள் உணவை ஜீரணிக்க உதவியாக இருக்கும். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் மற்றும் உடல் எடை குறைக்க உதவும்.
முளை கட்டிய பயறு சாலட் அல்லது பழங்களை சாப்பிட்ட அரை மணி நேரம் கழித்து கிரீன் டீ அல்லது மசாலா டீ குடிக்கலாம். நீங்கள் க்ரீன் டீ எடுத்துக் கொண்டிருந்தால், அதில் அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் சேர்க்கவும். கிரீன் டீ அல்லது மசாலா டீ உடல் எடையை குறைக்க உதவுகிறது. அவை செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதோடு உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்புச் சக்திக்கும் உகந்தவை.
பகலில் 1 கிண்ணம் கம்பு மற்றும் பருப்பு கிச்சடியுடன் கலந்த காய்கறிகளை சாப்பிட வேண்டும். இது தவிர, பனீர் மற்றும் காய்கறிகள் கலந்து செய்த பிரவுன் ரைஸ் மற்றும் ஒரு கப் தயிர், 1 கிண்ணம் பருப்பு மற்றும் 1 கிளாஸ் மோர், 1 கிண்ண சாம்பாருடன் 2 தினை ஊத்தாபம், தானிய கலவையில் செய்த ரொட்டி ஆகியவற்றை சாப்பிடலாம். இந்த வழக்கத்தை ஒரு மாதத்திற்கு பின்பற்றப்படுவதால், மற்ற நாட்களிலும் நீங்கள் விருப்பப்பட்டால் இவற்றை செய்யலாம்.சிறுதானிய உணவுகளை சேர்த்து கொள்ளலாம்.
மதிய உணவு சாப்பிட்ட உடனே உட்கார வேண்டாம். சுமார் 10 நிமிடங்கள் நடக்க வேண்டும், 1 மணி நேரம் கழித்து க்ரீன் டீ அல்லது மசாலா டீ எடுத்துக் கொள்ளுங்கள்.
மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் பசி எடுத்தால், ஏதேனும் ஒரு பழம் அல்லது ஒரு சிறிய கிண்ணத்தில் உலர்ந்த வறுத்த தாமரை விதைகளை சிற்றுண்டியாகச் சாப்பிடலாம். தாமரை விதைகள் சத்துக்கள் நிறைந்தது. இதில் புரதம், நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்க தாமரை விதைகள் உதவுகிறது. இது உங்கள் பசியைக் குறைத்து உங்கள் வயிறை நிறைவாக வைத்திருக்கும். தாமரை விதைகள் சத்துக்கள் நிறைந்தது. இதில் புரதம், நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்க இது உதவுகிறது. இந்த விதைகள் உங்கள் பசியைக் குறைத்து உங்களை நிறைந்த வயிற்றுடன் வைத்திருக்கும்.
இதுவும் உதவலாம்:எந்த டீயில் காஃபின் இல்லை?
எலுமிச்சை பழம்
சிற்றுண்டி சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை மற்றும் இலவங்கப்பட்டை தூள் எடுத்து கொள்ள வேண்டும். இந்த பானம் உங்கள் உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.
இரவு உணவை 7 முதல் 8 மணிக்குள் சாப்பிட முயற்சிக்க வேண்டும். இரவில் உடல் அதிக சுறுசுறுப்பாக இயங்காது. இதனால் உணவை ஜீரணிக்க நேரம் எடுக்கும். உங்கள் இரவு உணவை இலகுவாக வைத்திருங்கள். இரவு உணவில், நீங்கள் ஒரு கிண்ணம் கலந்த காய்கறிகள் மற்றும் 1 தானிய கலவை ரொட்டியுடன் சிறிது கலந்த பருப்புகள் கலந்து சாலட் செய்து சாப்பிட வேண்டும். இது தவிர, 1 கிண்ணம் பிரவுன் ரைஸ், 1 கிண்ணம் பருப்பு மற்றும் 1 கிண்ணம் கலந்த சாலட் எடுத்துக் கொள்ளவும். இரவில் ஓட்ஸ் கஞ்சி 1 கிண்ணம் சாப்பிடலாம். ஆவியில் வேக வைத்த உணவு சிறந்தது.
குறிப்பு: இதற்குப் பிறகும் பசி எடுத்தாலோ அல்லது தாமதமாக எழுந்தாலோ தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன் மஞ்சள் பால் அல்லது மசாலா டீ குடிக்கலாம்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image source: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com