herzindagi
image

30 வயதுக்கு மேல் பெண்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் கருப்பு எள்ளுவில் இருக்கும் சத்துக்கள்

30 வயது பெண்கள் கருப்பு எள்ளு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எள்ளு கொட்டு கொடுக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி பார்க்கலாம். 
Editorial
Updated:- 2024-12-22, 23:11 IST

30 வயதிற்குப் பிறகு பெண்களின் சத்து குறைவதால், ஆரோக்கித்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் ஹார்மோன் மாற்றங்கள், வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள், எலும்பு பலவீனம் உட்பட பல உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இத்தகைய சூழ்நிலையில் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் கருப்பு எள்ளு பார்க்கலாம். பெண்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் எள்ளு பற்றி தெரிந்து கொள்வோம்.

 

மேலும் படிக்க: குளிர் கால பொடுகு தொல்லையால் முடி கொத்து கொத்தாய் கொட்டுகிறதா... ஒரே வாரத்தில் தீர்வு தரும் ஹேர் மாஸ்

பெண்கள் கருப்பு எள்ளூ சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

 

  • எள்ளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவியாக இருக்கிறது.
  • கருப்பு எள்ளுவில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை நிறைந்துள்ளதால் எலும்புகளை வலுப்படுத்த அவசியமானவை.
  • எள்ளு விதைகள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. முடி உடைவதை தடுத்து வலிமையாக்குகிறது. முடி வளர்ச்சிக்கு எள்ளு சாப்பிடுவது நல்ல பலனை தரக்கூடியது.
  • எள்ளுவில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தைக் குறைக்கவும், உடலின் வலியைப் போக்கவும் உதவுகிறது.
  • இந்த விதைகள் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகின்றன, இது மாதவிடாய்களை ஒழுங்குபடுத்த உதவுகிறது.
  • குறிப்பாக மாதவிடாய் காலத்தில், இந்த விதைகள் ஹார்மோன் சமநிலையை ஊக்குவிக்கின்றன. மெனோபாஸ் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.
  • எள்ளுவில் உள்ள மெக்னீசியம் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. நீங்கள் தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
  • எள்ளு தொடர்ந்து உட்கொள்வதால் மன அழுத்தத்தை குறைக்கலாம், இதனால் மன ஆரோக்கியம் மேம்படும்.

black seesom 1

Image Credit: Freepik

எள்ளுவை உட்கொள்ளும் வழிகள்

 

  • இதை தினமும் ஒரு ஸ்பூன் உட்கொள்வது நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பருப்பு, காய்கறி, லட்டு, ரொட்டி, தயிர், ஸ்மூத்தி ஆகியவற்றில் சேர்க்கவும்.
  • பட்டிகள் செய்து கொடுக்கும் பலகாரத்தை சப்பிடாலம். அதாவது எள்ளு உருண்டை, எள்ளு பர்பி, மற்றும் கேழ்வரகுடன் எள்ளு மற்றும் இனிப்பு சேர்த்து பலகாரம் செய்வட்து.

  black seesom 2

Image Credit: Freepik


மேலும் படிக்க: வேகமாக முடி வளர்ச்சி இருக்கனுமா.. இந்த 4 விதைகளை உங்கள் உணவில் சேருங்கள்


இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com