herzindagi
image

குளிர் கால பொடுகு தொல்லையால் முடி கொத்து கொத்தாய் கொட்டுகிறதா... ஒரே வாரத்தில் தீர்வு தரும் ஹேர் மாஸ்

குளிர் காலத்தில் பொடுகு பிரச்சனையால் முடி கொத்துக் கொத்தாய் கொட்டுகிறதா, இனி அந்த கவலை வேண்டாம், கசப்பு தன்மையைக் கொண்ட வேப்பிலை ஹேர் மாஸ்க் பொடுகுக்கு முற்றுப்புள்ளியாக இருக்கும். 
Editorial
Updated:- 2024-12-19, 13:19 IST

வேப்பிலை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகள் காரணமாகப் பொடுகை எதிர்த்துப் போராடுகிறது. இந்த ஹேர் மாஸ் கூந்தலுக்கு எளிதான மற்றும் மலிவான வழிகளில் பயன்படுத்தக்கூடிய சிறந்த பொருளாகும். கூந்தல் பிரச்சனைகள் பலவற்றைச் சமாளிக்க வேப்பிலை சிறந்த தேர்வுகளில் ஒன்றாகும். அதேபோல் பொடுகை எதிர்த்துப் போராடும் விதத்தில் இது சூப்பர் ஹீரோவாக செயல்படுகிறது.  வேப்பிலையில் இருக்கும் பண்புகள் பொடுகு, வறண்ட உச்சந்தலை மற்றும் எரிச்சலூட்டும் உச்சந்தலையின் எதிர்மறையான விளைவுகளைக் குறைக்கச் செய்கிறது. இதில் கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் ஈ மற்றும் பிற முக்கிய தாதுகள் நிறைந்துள்ளதால், முடி உதிர்வதை நிறுத்தி, பொடுகை எதிர்த்துப் போராடும். உச்சந்தலையில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் முடியின் வேர்களை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதன் விளைவாக முடி பளபளப்பாகவும், வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். வேப்பிலை மயிர்க்கால்களை வலுப்படுத்தி உச்சந்தலையைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. முடி பொடுகு தொல்லை இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேப்பிலை ஹேர் மாஸ்க் சிலவற்றை பார்க்கலாம். 

 

மேலும் படிக்க: வேகமாக முடி வளர்ச்சி இருக்கனுமா.. இந்த 4 விதைகளை உங்கள் உணவில் சேருங்கள்

பொடுகு இல்லாத கூந்தலுக்கான 5 வேப்பிலை ஹேர் மாஸ்க்குகள்

 

பல கூந்தல் பிரச்சனைகளைச் சமாளிக்க வேப்பிலை சிறந்த தீர்வாக இருக்கிறது. குளிர்கால பொடுகு பிரச்சனைக்கு சில வேப்பிலை ஹேர் மாஸ்க்குகள் பார்க்கலாம்.

 

தேங்காய் எண்ணெய் மற்றும் வேம்ப்பிளை ஹேர் மாஸ்க்

 

ஒரு பாத்திரத்தில் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது சில துளிகள் கடுகு எண்ணெய் எடுத்துக்கொள்ளவும், அதனுடன் உங்கள் முடிக்கு தேவையான அரைத்த வேப்பிலை விழுதுகளை கலக்கவும். இந்த ஹேர் மாஸ்க்கை உச்சந்தலை முதல் முடியின் நுணி வரை தடவவும். 30 நிமிடங்கள் கழிந்து தலைமுடியைக் கழுவவும்.

neem paste

Image Credit: Freepik


நெய் மற்றும் வேப்பிலை ஹேர் மாஸ்க்

 

ஒரு பாத்திரத்தில் சில வேப்பிலை இலைகள், நெய் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த ஹேர் மாஸ்கை நன்றாக கலந்த இரவு முழுவதும் அப்படியே ஊறவிடவும். இப்போது இந்த கலவையை இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் குறைந்த தீயில் சூடாக்கவும். இந்த ஹேர் மாஸ்க் மிதமான பதத்திற்கு வந்ததும், தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவவும். அதன்பிறகு 30 நிமிடங்கள் கழித்து தலைமுடியை ஷாம்பூ போட்டு கழுவவும்.

 

தயிர் மற்றும் வேப்பிலை மாஸ்க்

 

வேப்பிலையை நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும், அதனுடன் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அதை உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடி முழுவதும் தடவி குறைந்தது ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். இப்போது கலவையை 30 நிமிடங்கள் ஊற வைத்து ஷாம்பூ போட்டு கழுவவும்.

ஆம்லா ஜூஸ் மற்றும் வேப்பிலை ஹேர் மாஸ்க்

 

ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் நசுக்கிய வேப்பிலைகள் மற்றும் நெல்லிக்காய் சாறு சேர்க்கவும். பின்னர் கலவையை ஐந்து முதல் 10 நிமிடங்கள் வரை ஆறவிடவும். இந்த கலவையை உச்சந்தலையில் தொடங்கி உங்கள் தலைமுடியின் நீளம் வரை தடவவும். மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்கு, உங்கள் உச்சந்தலையில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு மசாஜ் செய்யவும். இப்போது ஷாம்பூவைப் பயன்படுத்தி கழுவவும்.

dandruff hairfall neem paste

 Image Credit: Freepik


தேன் மற்றும் வேப்பிலை ஹேர் மாஸ்க்

 

சிறிது தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் சில வேப்பிலை இலைகளைச் சேர்த்து, ஒரு தேக்கரண்டி தேன் சேர்க்கவும். ஒரே இரவில் விட்டு விடுங்கள். மறுநாள் காலை தண்ணீரை வடிகட்டி, இலைகளை பேஸ்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். இந்த கலவையைத் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவவும். 20 நிமிடங்கள் காத்திருந்து பின் தலைமுடியைக் கழுவவும்.

 

மேலும் படிக்க: மளமளவென அடர்த்தியுடன் வேகமாக முடி வளர வீட்டிலேயே உருவாக்கலாம் ஹேர் டானிக்

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com