சந்தையில் கிடைக்கும் விலையுயர்ந்த கூந்தல் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்தினாலும் ஊட்டச்சத்து குறைபாடு இருக்கும் வரை முடி வளர்ச்சி ஒருபோதும் சிறப்பாக இருக்காது. ஊட்டச்சத்துக் குறைபாடு முடி வளர்ச்சி மற்றும் முடி அமைப்பு இரண்டையும் பாதிக்கிறது. ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் முடி உதிர்தல் ஆகியவற்றுக்கு இடையே இருந்து மன கவலை ஏற்படுகிறது. மேலும் பொடுகு, முடி உதிர்தல் மற்றும் பிளவு முடிகள் போன்ற பிற முடி பிரச்சனைகள் சேர்ந்துவிடுகிறது. இவற்றை சரிசெய்யும் முடி வளர்ச்சியை தூண்டும் விதைகளைப் பற்றி பார்க்கலாம். முடி வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்தின் சக்தியாக விதைகள் கருதப்படுகின்றன. இந்த விதைகள் வைட்டமின்கள், தாதுக்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், இரும்பு, புரதம் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களால் செறிவூட்டப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: உடல் ஆரோக்கியம், முடி பிரச்சனைக்குத் தீர்வு காணும் திறமை கொண்ட கறிவேப்பிலை பற்றி பார்ப்போம்
தோல் மற்றும் முடியின் சிறந்த ஊட்டச்சத்திற்கு தினசரி உட்கொள்ளக்கூடிய ஏழு விதைகள் இங்கே. இவை முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தருக்கூடியது.
ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் உச்சந்தலையின் ஆரோக்கியத்தையும் முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. உங்கள் வழக்கமான உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
Image Credit: Freepik
சியா விதைகள் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் சிறந்த மூலமாக இருக்கிறது, இது காலை பானங்களில் சேர்த்து கூடுக்கலாம்.
சூரியகாந்தி விதைகளில் லினோலிக் அமிலம், ஒலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளதால் மயிர்க்கால்களைத் தூண்டி முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்ய உதவுகிறது.
Image Credit: Freepik
எள்ளில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் முடி அமைப்பை மேம்படுத்தும். அவை உங்கள் உச்சந்தலை மற்றும் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிப்பதன் மூலம் வறட்சி, மற்றும் உடைப்பு போன்ற முடி துயரங்களைச் சமாளிக்க திறம்பட உதவும்.
இந்த விதைகளை பல்வேறு மளிகைக் கடைகளில் அல்லது ஆன்லைன் தளங்களில் எளிதாக கிடைக்கும். உங்கள் தினசரி உணவில் விதைகளை இணைக்க பல வழிகள் உள்ளன. உங்கள் உணவில் அவற்றை இணைப்பதற்கான சில வழிகள் இங்கே:
மேலும் படிக்க: குளிர்காலத்தில் தொண்டை சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்க வழிகள்
இருப்பினும், இந்த விதைகள் ஒவ்வொன்றும் பலருக்கு வித்தியாசமாக வேலை செய்யக்கூடும் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். பலனளிக்கும் நன்மைகளுடன் பக்க விளைவுகளின் பங்கும் இருக்கிறது. முடி உதிர்வுக்கான காரணங்களை ஆராயவும், மயிர்க்கால்களைத் தூண்டுவதற்கும் முடி வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் இந்த விதைகளின் சாத்தியமான நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகளை எடைபோடுவதற்கு எப்போதும் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com