கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைக்கும் போது நமக்கு மண்பாண்ட பொருட்களின் நன்மை நினைவுக்கு வரும். குறிப்பாக மண்பானை. பிரிட்ஜில் தண்ணீர் வைத்து குடித்தாலும் மண் பானையில் வைத்து குடிக்கும் தண்ணீரின் சுவை தனித்துவமானது. மண் பானை பயன்பாடு சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. கீழடியில் மண்பானை கிடைக்கப்பெற்றுள்ளது. மண் பானை தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள், நல்ல மண் பானையை எப்படி வாங்குவது, மண் பானையை எப்படி பழக்குவது உள்ளிட்ட விஷயங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
மண் பானையை வாங்கும் போது அதை கைகளால் தட்டினால் டங் டங் என சத்தம் வரும். ஒட்டை அல்லது விரிசல் இருந்தால் பானையில் சத்தம் கேட்காது. வெளிப்புறத்தில் மட்டுமல்ல உட்புறத்திலும் விரிசல் இருக்கிறதா என பாருங்கள்.
மேலும் படிங்க தொப்பைக் கொழுப்பை குறைப்பதற்கான பயனுள்ள வழிகள்!
மண் பானை தண்ணீர் குடிப்பதன் முக்கிய நன்மைகளில் ஒன்று அதன் இயற்கையான குளிர்ச்சி ஆகும். களிமண் காற்று மற்றும் ஈரப்பதத்தை கடந்து செல்ல அனுமதிக்கிறது. ஒரு மண் பானையில் தண்ணீர் சேமிக்கப்படும் போது தண்ணீர் மெதுவாக துளைகள் வழியாக வெளியேறி மேற்பரப்பில் ஆவியாகிறது. இதனால் நீர் இயற்கையாக குளிர்ச்சியடைகிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com