herzindagi
get rid of belly fat

தொப்பைக் கொழுப்பை குறைப்பதற்கான பயனுள்ள வழிகள்!

தொப்பைக் கொழுப்பை குறைப்பது சற்று சவாலான காரியம் தான். ஆனால் நினைத்தால் முடியாத காரியமல்ல. தொப்பைக் கொழுப்பை கரைக்க பயனுள்ள விஷயங்களை பின்பற்றினால் போதுமானது.
Editorial
Updated:- 2024-04-12, 17:13 IST

வயிற்று பகுதியில் கொழுப்பு அதிகம் இருப்பதால் நமக்கு தொப்பை விழுகிறது என நினைக்கிறோம். தொப்பை என்பது கழுத்து பகுதிக்கு கீழ், கைகளுக்கு கீழ், தொடைப் பகுதி உள்ள கொழுப்பு போல் கிடையாது. தொப்பை பகுதியில் இரண்டு வகையான கொழுப்பு உள்ளன. தொப்பையின் தோலுக்கு அடியில் இருக்கும் கொழுப்பு உடலின் மற்ற பகுதிகளில் இருக்கும் கொழுப்புக்கு சமம். ஆனால் பலருக்கு வயிற்று பகுதியின் தசைகளுக்கு இடையில் உள்ள கொழுப்பு தொப்பையாக தெரியும். இது Visceral fat என்று சொல்லப்படுகிறது. இணையத்தில் உலா வரும் பல உறுதிப்படுத்தாத தகவல்களை கொண்டு பலரும் தொப்பையைக் குறைக்க விரும்புகின்றனர். முதலில் நாம் சில உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும். தொப்பையைக் குறைப்பது எளிதான காரியம் அல்ல. இரண்டாவது தொப்பையைக் குறைப்பதற்கு பிரத்யேக மருந்து, கரைக்கும் உணவுகள் கிடையாது.

Visceral fat இருக்கும் நபர்களுக்கு சர்க்கரை நோய், கொழுப்பு கல்லீரல், மாரடைப்பு போன்ற நோய்களின் அபாயம் உண்டு. தொப்பை ஒரு முக்கியமான பிரச்சினை என்பதால் முழு கவனம் செலுத்தி குறைக்கும் முயற்சியில் ஈடுபடவும்.

lose belly fat naturally

தொப்பையைக் குறைக்க உதவும் ஐந்து விஷயங்கள்

  • மாவுச்சத்து, சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும். ஏனென்றால் இவை உடலில் இன்சுலின் அளவுகளை அதிகரிக்கும்.
  • புருக்டோஸ் அதிகமுள்ள பழங்களையும் உட்கொள்ள வேண்டாம். இதனை கல்லீரலால் மட்டுமே செரிமானம் செய்ய முடியும்
  • புரத உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். புரதங்கள் சாப்பிடும் போது உடலில் கலோரிகள் எரிக்கப்படும். இது எடை இழப்புக்கும் உதவும். தினமும் 80 கிராம் முதல் 120 கிராம் புரதம் வரை உட்கொள்ளுங்கள். புரதம் எடுப்பது எந்த வகையிலும் சிறுநீரகத்தை பாதிக்காது.
  • அதேபோல காய்கறிகள், நார்ச்சத்து அதிகம் சாப்பிடவும். இவை கொழுப்பை கரைக்க உதவும்.
  • விரத முறை : கொழுப்பை குறைக்க உணவு இடைவேளைக்கான நேரத்தை அதிகப்படுத்தவும். காலையில் உணவு சாப்பிட்டால் அடுத்த உணவை 14 மணி நேரம் கழித்து உட்கொள்ளவும்.
  • தினமும் அரைமணி நேரம் ஓட்டப்பயிற்சி, ஜாக்கிங், சைக்கிளிங் செல்வது உடலுக்கு நல்லது.

மேலும் படிங்க நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இந்த விஷயங்களை பின்பற்றுங்க!

உலாவும் வதந்தி

  • வயிற்று பகுதிக்கான பயிற்சி செய்தால் தசைகள் வலுப்பெறுமே தவிர கொழுப்பு கரையாது. உணவுமுறை மாற்றமும், மொத்த உடலுக்குமான பயிற்சி மட்டுமே எடையைக் குறைக்கும்.
  • கொழுப்பு இல்லாத உணவுகளை சாப்பிட்டால் மட்டும் உடலில் கொழுப்பு குறையாது. ஆரோக்கியமான கொழுப்பு கொண்ட உணவுகள் உடலில் கொழுப்பை அதிகரிக்காது. தொப்பையைக் கரைக்க மாத்திரைகள், டானிக் உதவும் என்ற விளம்பரங்களை நம்பி ஏமாற்றம் அடையாதீர்கள்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com