ஈறுகளில் கூர்மையான வலியுடன் தாடைகளில் துடிக்கும் உணர்வை நம்மில் பெரும்பாலோர் அனுபவித்திருக்கிறோம். அவை பயங்கரமான தலைவலியையும் ஏற்படுத்தக்கூடும். இந்த பல்வலி மிகவும் வேதனையான வலிகளில் ஒன்றாகும். பல் பிரச்சனைகளுக்கு கிராம்பு இயற்கை தீர்வாக இந்து வருகிறது. பல்வலிக்கு கிராம்பு எண்ணெயை பயன்பாடுத்துவன் மூலம் வலியை கட்டுபடுத்த முடியும்.
மேலும் படிக்க: கோடையில் உடலை குளிர்விக்கவும், குளிர்காலத்தில் உடலை வெப்பாக வைத்திருக்க உதவும் பாதாம் பிசின்
பல் வலிக்கு கிராம்பு எண்ணெயின் நன்மைகள்
கிராம்புகளை பல்வலி சிகிச்சைக்கு பயன்படுத்தும் வழிகளில் எண்ணெய் வகையும் ஒன்றாகும். இந்த வலியை கட்டுப்படுத்தும் பண்பு கிராம்பு எண்ணெயில் உள்ள யூஜெனால் எனப்படும் ஒரு பொருளால் ஏற்படுகிறது. இது பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆற்றும். இது நோய்த்தொற்றுகளைத் தடுக்கும் மற்றும் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கும் திறன் கொண்டது.
முக்கிய குறிப்பு: கிராம்பு எண்ணெய் அல்லது வேறு ஏதேனும் கிராம்பு பல்வலியை தற்காலிகமாக குறைக்கிறது. அது உங்களுக்கு நிரந்தர தீர்வாகாது. பல்வலிக்கு பல காரணங்கள் உள்ளது துவாரங்கள், தொற்றுகள் மற்றும் வலி அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகவும்.
பல் வலிக்கு கிராம்பு எண்ணெய் செய்வது எப்படி?
- ஒரு முழு கிராம்பு மற்றும் ஆலிவ் எண்ணெய் தேவைப்படும். பல் வலிக்கு கிராம்பு எண்ணெய் தயாரிக்க கீழே குறிப்பிடப்பட்டுள்ள செய்முறையை பின்பற்றவும்:
- சில கிராம்பு துண்டுகளை நசுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
- நொறுக்கப்பட்ட கிராம்புகளை ஒரு ஜாடியில் வைக்கவும்.
- நொறுக்கப்பட்ட கிராம்பு துண்டுகளை முழுமையாக முழுகும் வரை தேவையான அளவு ஆலிவ் எண்ணெயை ஊற்றவும்.
- அதன்பிறகு அந்த ஜாடியை சீல் வைத்து எண்ணெய் ஒரு இருண்ட இடத்தில் சுமார் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு வைத்திருக்க வேண்டும். அவ்வப்போது ஜாடியை எடுத்து குலுக்கி வைக்க வேண்டும்.
- ஓரிரு வாரங்களுக்குப் பிறகு நசுக்கிய கிராம்புகளை எண்ணெயிலிருந்து வடிகட்டி எடிக்க வேண்டும், கிராம்பு எண்ணெயை ஒரு தனி ஜாடிக்கு மாற்றி வைத்துக்கொள்ளுங்கள்.
- பயன்படுத்தும் முறை: கிராம்பு எண்ணெயில் ஒரு சிறிய பருத்தி உருண்டையை நனைத்து பல்வலியை எதிர்கொள்ளும் போதெல்லாம் வலி உள்ள இடத்தில் தடவவும்.
கிராம்பு எண்ணெயின் பக்க விளைவுகள்
கிராம்பு எண்ணெய் பல் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருந்தாலும். பின்வருபவை போன்ற சில பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது. அதிக அளவில் உட்கொண்டால் தீங்கு விளைவிக்கும்.
- தோல் எரிய செய்யும்.
- கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் இதை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.
- செரிமான பிரச்சினைகள் ஏற்படுத்தும்.
மேலும் படிக்க: கோடையில் உடலை உஷ்ணத்தை குறைக்க வீட்டிலேயே செய்யக்கூடிய 4 எளிய ஜூஸ்கள்
இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக பகிரவும். இதுபோன்ற பிற கதைகளைப் படிக்க ஹர்சிந்தகியுடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation