மஞ்சளில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு போன்ற ஏராளமான நற்பண்புகள் உள்ளன. ஆயுர்வேதத்தின்படி மஞ்சள் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதோடு மட்டுமின்றி ஒரு நல்ல வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. வெதுவெதுப்பான பாலில் சிறிதளவு மஞ்சள் கலந்து குடித்தால் உடல் வலி தீரும். மேலும் பல சருமம் மற்றும் உடல்நல பிரச்சனைகளை குணப்படுத்த மஞ்சள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தொப்புளில் மஞ்சள் தடவுவதால் ஏராளமான நன்மைகளை பெறலாம். செரிமான மண்டலத்தை சீராக வைத்துக் கொள்வது முதல் மாதவிடாய் வலிக்கு நிவாரணம் தருவது வரை இதில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இது குறித்த தகவல்களை நிபுணர் சித்தார்த் எஸ் குமார் அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: இனி ஜோடியாக உடற்பயிற்சி செய்யலாம், இது தம்பதிகளுக்கான ஒர்க் அவுட்ஸ் !
மஞ்சளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையால் ஏற்படக்கூடிய வயிற்று வலி, வீக்கம் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது. இதற்கு மஞ்சளுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்து தொப்புளில் தடவலாம்.
ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் தாங்க முடியாத வலி இருக்கும். இதுபோன்ற நிலையில் வலி மற்றும் வயிற்றுப் பிடிப்பு பிரச்சனைகளை குறைக்க தொப்புளில் மஞ்சள் தடவலாம்.
மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இதை கடுகு எண்ணெயுடன் கலந்து தொப்புளில் தடவி வர பருவ காலத்தில் ஏற்படக்கூடிய பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை தவிர்க்கலாம்.
மஞ்சளில் உள்ள நார்ச்சத்து மிகவும் அத்தியாவசியமானது ஆகையால் உங்களுடைய உணவில் கண்டிப்பாக மஞ்சளை சேர்த்துக் கொள்ளுங்கள் இதனுடன் தொப்புளில் மஞ்சள் தடவி வர செரிமான மண்டலமும் சீராக இருக்கும் மேலும் வயிற்று வலி மற்றும் அஜீரண பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.
மஞ்சளில் பல ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்றன. இதற்கு பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி கலந்து இரவில் குடிக்கலாம் இதனுடன் தினமும் இரவில் தொப்புளில் மஞ்சள் தடவிய பிறகு தூங்கலாம். இது உடல் எடையை குறைப்பதற்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.
மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற வேதிப் பொருள் மன அழுத்தம் பதட்டம், மனச்சோர்வு போன்ற பல மனநல பிரச்சனைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: நீண்ட காலமாக தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் இருந்தால் என்ன ஆகும் தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com