Beetroot Weight Lose: பீட்ரூட்டை இப்படி சாப்பிட்டால் உடல் எடை வேகமாக குறையும்

எடை இழப்புக்கான ஆரோக்கியமான விருப்பத்தை நீங்கள் தேடுகிறீர்களா? ஆம் எனில், உங்கள் உணவில் பீட்ரூட் ஓட்ஸ் சீலாவை உட்கொள்ளலாம்

beetroot card image ()

உடல் எடையை குறைக்க மக்கள் பல வழிகளை கையாளுகின்றனர். சிலர் க்ராஷ் டயட்டைப் பின்பற்றுகிறார்கள், சிலர் ஜிம்மில் வியர்க்கிறார்கள். ஆனால் இதைச் செய்வது மட்டும் தீர்வாகாது உடல் எடையை குறைக்க சரியான ஊட்டச்சத்துக்களை உட்கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்க ஒரு ஆரோக்கியமான வழியை பார்க்கலாம். உடல்நல நிபுணர் பின்னி சௌத்ரியின் கூற்றுப்படி பீட்ரூட் ஓட்ஸ் அடையை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடையை எளிதாகக் குறைக்கலாம். இது எப்படி தயாரிப்பது என்றும் மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

பீட்ரூட் ஓட்ஸ் அடைக்கு தேவையான பொருட்கள்

  • அரைத்த ஓட்ஸ் - 1 கப்
  • பீட்ரூட் - 1 துருவியது
  • கேரட் - 2 துருவியது
  • முட்டைக்கோஸ் / கீரை - 1 கப்
  • தேவைக்கேற்ப உப்பு
  • கருப்பு மிளகு தூள் - அரை தேக்கரண்டி
  • தண்ணீர் ஒரு கப்

பீட்ரூட் ஓட்ஸ் அடை செய்வது எப்படி?

pregancy inside  ()

  • அடை செய்ய ஓட்ஸை மிக்ஸியில் அரைக்கவும்.
  • அரைத்த கட்டி மாவில் பீட்ரூட், கேரட் சேர்க்கவும்.
  • 1 கப் முட்டைக்கோஸ் அல்லது கீரை நறுக்கி சேர்த்துக்கொள்ளவும்.
  • அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணீர் சேர்க்கவும்.
  • கருப்பு மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து மாவை தயார் செய்யவும்.
  • ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மாவை கடாயில் பரப்பவும்.
  • அடையை இருபுறமும் நன்றாக வேகவைக்கவும்.
  • உங்கள் பீட்ரூட் ஓட்ஸ் அடை தயார்
  • அதற்கு பச்சை சட்னி அல்லது தயிர் சேர்த்து சாப்பிடலாம்.

மேலும் படிக்க: அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சலால் பிரச்சனை போக்க சூப்பரான பாட்டி வைத்தியம்

பீட்ரூட் ஓட்ஸ் அடை நன்மைகள்

beetroot adai inside

பீட்ரூட் ஓட்ஸ் அடை எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதில் உள்ள ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளதால் வயிற்றை நீண்ட நேரம் நிரப்பி எடை குறைக்க உதவுகிறது. ஓட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு புரதம் கிடைக்கிறது. அதே நேரத்தில் பீட்ரூட், கேரட் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றிலும் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதை தயாரிப்பதில் எண்ணெய் மற்றும் மசாலா அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. இவ்வாறு உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

Image Credit- Freepik & Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP