Buttermilk Benefits : தினசரி மோர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா!

தினமும் தவறாமல் 1 கப் மோர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் பற்றி நிபுணரிடம் இருந்து தெரிந்து கொள்வோம்...

butter milk benefits in tamil

மோர் சுவையாக இருக்கிறது என்பதை விட, நமக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. ஆனால், மோர் சாப்பிட்டால் உடல்நிலை சரியில்லாமல் போய்விடும் என்ற எண்ணத்தில் பலர் மோர் சாப்பிட பயப்படுகிறார்கள்.

இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் கவிதா தேவ்கன் கூறுகையில், 'மோர் உட்கொள்வதை முறைப்படுத்திக்கொள்ளலாம், ஒரு நாளைக்கு 1 கிளாஸுக்கு மேலும் மோர் குடிக்கலாம். மோர் இயற்கையான முறையில் மற்றும் சரியான வெப்பநிலையில் குடித்தால் மிகுந்த நன்மை பயக்கும். எனவே தினமும் மோர் குடிப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த கட்டுரையில் இருந்து நாம் தெரிந்து கொள்வோம். மோர் அதிக குளுமை ஆன பிறகு குடிப்பது பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

  • மோர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • மோர் உங்கள் கல்லீரல் மற்றும் உடலில் இருந்து நச்சுக்களை நீக்குகிறது.
  • மோரில் அதிகம் கால்சியம் உள்ளது, எனவே மோர் குடிப்பதால் எலும்புகள் வலுவடையும்.
  • மோர் குடித்தால் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து நமக்கு நிவாரணம் கிடைக்கும்.
  • மோர் குறைந்த கலோரிகளை கொண்டது.
buttermilk benefits

செரிமான அமைப்பை மேம்படுத்த மோர் குடிக்கலாம்

  • நீங்கள் மிகவும் காரமான மற்றும் காட்டமான உணவை சாப்பிடும் போது, உணவு செரிமானம் ஆவதில் நீங்கள் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சாப்பிடும் போது மோர் குடிக்க வேண்டும்.
  • மேலும் மோர் உடல் சூட்டை தணித்து, வயிற்று உப்புசம் மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது. தினமும் மோர் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் காலத்தில் வயிற்றில் ஏற்படும் வாய்வு பிரச்சனைக்கும் நிவாரணம் கிடைக்கும்.

நீரிழப்பைத் தடுக்கிறது

  • கோடை காலத்தில் உடலை நீர் சத்து டன் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தொடர்ந்து மோர் குடித்து வந்தால், உங்கள் உடல் எப்போதும் நீர் சத்துடன் இருக்கும்.
  • வெயிலில் வீட்டை விட்டு வெளியில் செல்ல நேரிட்டால், வெயிலின் தாக்கத்தைத் தவிர்க்க முதலில் மோர் அருந்த வேண்டும்.
  • கோடைக்காலத்தில் தொடர்ந்து மோர் உட்கொள்வதால், வயிற்றின் வெப்பம் தணிந்து, உள்ளிருந்து புத்துணர்ச்சியை பெறலாம்.

உடல் எடையை குறைக்க மோர் குடிக்கவும்

buttermilk for weight loss

  • மோர் குடிப்பதால் உடலின் வளர்சிதை மாற்றம் அளவு அதிகரிக்கிறது. இது உடலின் எடையைக் குறைக்க உதவுகிறது.
  • மோர் மிகக் குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளது, ஆனால் இது உடல் எடையைக் குறைக்கத் தேவையான மற்ற அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.
  • மோரில் புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இதனை உட்கொள்வதால் வயிறு நிரம்பியது போன்ற உணர்வு ஏற்படும், பசியும் இருக்காது.

எலும்புகளை பலமாக்கும்

கவிதா கூறுகையில், 'ஒரு கிளாஸ் மோரில் 40 கலோரிகளுக்கும் குறைவாகவே உள்ளது. அதே நேரத்தில், இது மனித உடலுக்குத் தேவையான கால்சியத்தின் தேவையான அளவைக் கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து உட்கொள்வதால் எலும்புகள் பலமடையும்.

தசைகளை பலப்படுத்துகிறது

மோர் தினசரி உட்கொள்ள வேண்டும், ஏனெனில் அதில் போதுமான அளவு புரதம் உள்ளது.

தோல் மற்றும் முடிக்கு நன்மை பயக்கும்

  • மோர் வைட்டமின்-சி மற்றும் பி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த இரண்டு சத்துக்களும் முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது.
  • மோர் குடிப்பதால் சருமம் மற்றும் கூந்தல் ஈரப்பதமாகி வறண்டு போகும் பிரச்சனையை போக்குகிறது
  • மோரில் புரோபயாடிக் லாக்டிக் அமிலம் நிறைந்துள்ளது. இது தோல் மற்றும் முடிக்கு நீர் சத்தினை வழங்குகிறது மற்றும் இரண்டையுமே பிரகாசமாக வைக்கிறது.

மோர் குடிக்க சரியான வழி

  • மோரை ஒருபோதும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதனால் வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படும்.
  • வெயிலில் செல்வதற்கு முன் மோர் குடிக்கலாம், ஆனால் வெயிலில் இருந்து வந்த உடனே குளிர்ந்த மோர் குடிக்க வேண்டாம்.
  • உடலை நீர் சத்துடன் வைத்திருக்க வேண்டும் என்றால், தண்ணீருக்குப் பதிலாக மோர் அருந்தலாம்.
  • செரிமான பிரச்சனைகள் இருந்தால், மோரில் இஞ்சி, கருமிளகு, சீரகம் சேர்த்துக் குடிக்கலாம்.

ஒரு நாளைக்கு எவ்வளவு மோர் குடிக்கலாம்?

ஒரு நாளைக்கு 1 அல்லது 2 கிளாஸ் மோர் குடிக்கலாம். பால் ஒவ்வாமை உள்ளவர்கள் 2 கிளாஸுக்கு மேல் மோர் குடிக்கலாம்.

மோர் குடிக்க சரியான நேரம்

நீங்கள் அதிக வேலை செய்யும் நேரத்தில், வெளியிடங்களுக்கு செல்லும் நேரத்தில், உங்களுக்கு பசி எடுத்தால், பசிக்கும் போதெல்லாம், வேறு எதையும் சாப்பிடுவதற்கு பதிலாக, நீங்கள் ஒரு கிளாஸ் மோர் குடித்து பழகலாம்.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image source: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP