நீங்கள் எப்போதாவது செம்பருத்தி டீ குடித்திருக்கிறீர்களா?இது என்னவென்று உங்களுக்கு தெரியுமா? இந்த சுவையான டீ குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன தெரியுமா? இல்லையென்றால், இந்த கட்டுரையைப் படியுங்கள், ஏனெனில் இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் கொழுப்பைக் குறைக்கிறது. மேலும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த ஆரோக்கியமான பானத்தை குடிப்பதன் மூலம், ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சனைகளை நீங்கள் சமாளிக்கலாம்.
இந்த டீயில் வைட்டமின் C, A, ஜிங்க் மற்றும் பல தாதுக்கள் உள்ளன. இதில் சிட்ரிக் அமிலம், மாலிக் அமிலம் மற்றும் டார்டாரிக் அமிலம் உள்ளிட்ட 15 முதல் 30 சதவீதம் ஆர்கானிக் அமிலங்களும் இதில் உள்ளன. இதில் பாலிசாக்கரைடுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகளும் உள்ளன. செம்பருத்தி இலைகள் மற்றும் பூக்கள் பல மருத்துவ பயன்களைக் கொண்டுள்ளன. ஆயுர்வேதம் மற்றும் சீன மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக, நோய்ககளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலிகையில் இருந்து ஆரோக்கிய நன்மைகளைப் பெற சிறந்த வழி செம்பருத்தி டீ தயாரிப்பதாகும். செம்பருத்தி டீ உண்மையில் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதா இல்லையா என்பதை அறிய, ஷாலிமார் பாக் ஃபோர்டிஸ் மருத்துவமனையின் உணவியல் நிபுணர் சிம்ரன் சைனியிடம் பேசினோம். அதன் பலன்களைப் பற்றி அவர் நமக்குச் சொன்னதைத் தெரிந்து கொள்வோம்.
நிபுணர் கருத்து
உணவியல் நிபுணர் சிம்ரன் சைனி ஜி கூறுகையில், "செம்பருத்தி, அதன் பூக்கள் மற்றும் இலைகளை பல விதங்களில் பயன்படுத்தலாம். செம்பருத்தியில் தயாரிக்கப்படும் டீ மற்றும் கஷாயம் இரண்டும் நம் உடலுக்கு மருத்துவ பலன்களை ஏற்படுத்தும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் C நிறைந்துள்ளது. எனவே நமது முடி மற்றும் சருமத்திற்கு நல்லது. இது தவிர, செம்பருத்தி நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் நம் வயிறை சுத்தம் செய்வதன் மூலம் மலச்சிக்கலை தீர்க்கிறது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு கல்லீரல் செயல்பாடுகளையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. செம்பருத்தி டீயின் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளும் முன் அதை எவ்வாறு தயாரிப்பது என்பதை பார்க்கலாம்
செம்பருத்தி டீ தயாரிக்கும் முறை
- 2 முதல் 3 ஸ்பூன் உலர்ந்த செம்பருத்தி இதழ்களை 2 கப் தண்ணீரில் கலக்கவும்.
- பின்னர் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.அதை வடிகட்டி, தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து சுவைக்கவும்.
- உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க இந்த டீயை தவறாமல் குடிக்கவும்.
உடல் எடை குனறப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும்
இந்த அழகான மூலிகை உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஊட்டச்சத்துக்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் பல்வேறு தாதுக்கள் நிறைந்த செம்பருத்தி, உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதைக் குறைக்கிறது, இதன் மூலம் எடையைக் குறைக்க உதவுகிறது. இது தவிர, இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களின் அளவு மிக அதிகமாக உள்ளதால் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும், டையூரிடிக் தன்மை கொண்ட இந்த மூலிகை டீ உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் செம்பருத்திப் பூ பயன்படுகிறது. இது இரத்த அழுத்த அளவை கணிசமாகக் குறைக்க உதவும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகளைக் கொண்டுள்ளது. இயற்கையில் டையூரிடிக் தன்மை இருப்பதால், இது சிறுநீர் கழித்தலை அதிகரிக்கிறது மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
மனநிலையை மேம்படுத்துகிறது
செம்பருத்தியில் ஆன்டிடிப்ரஸன்ட் பண்புகள் உள்ளன, அவை கவலை மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைப் போக்க உதவும். இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த உதவுவதோடு, எதிர்மறை உணர்ச்சிகள் மற்றும் மனச்சோர்வு மற்றும் பதட்டத்தின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகின்றன. நீங்கள் சோகமாகவோ அல்லது சோர்வாகவோ இருக்கும் போதெல்லாம், ஒரு கப் சூடான செம்பருத்தி டீ குடியுங்கள்.
ஆன்டி இன்பிளமேட்டரி மற்றும் ஆன்டி பாக்டீரியா பண்புகள்
செம்பருத்தி டீயில் வைட்டமின் C அதிகம் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தூண்டவும் உதவுகிறது. இந்த டீ அதன் ஆன்டி இன்பிளமேட்டரி மற்றும் ஆன்டி பாக்டீரியா பண்புகளுக்கு பெயர் பெற்றது, எனவே சளி மற்றும் காய்ச்சலை தடுக்க உதவுகிறது.
இதுவும் உதவலாம்:ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க உதவும் அற்புத பானங்கள்
முடி மற்றும் தோலுக்கு சிறந்தது
முடி உதிர்தல் பிரச்சனையால் நீங்கள் அவதிப்படும் போது, செம்பருத்தி அதை எதிர்த்துப் போராட உதவும். வைட்டமின் A மற்றும் C மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்த செம்பருத்தி முடி உதிர்வதைத் தடுக்கிறது மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் இது பொடுகுத் தொல்லையைக் குணப்படுத்துகிறது, கூந்தல் பிளவுபடுவதைத் தடுக்கிறது மற்றும் முடி இளம் வயதிலேயே நரைப்பதைத் தடுக்கிறது. கூந்தலுக்கு மட்டும் அல்ல, இந்த டீ சருமத்திற்கும் நல்லது செய்கிறது. புற ஊதா கதிர்கள், மாசுகள் மற்றும் நோய்களால் ஏற்படும் தோல் சேதத்தைத் தடுக்க உதவும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதில் அதிகம் நிறைந்துள்ளன. மேலும், இது சருமத்தில் இளமையிலேயே ஏற்படும் சுருக்கங்களை தடுக்கிறது மற்றும் பல ஆண்டுகளுக்கு உங்கள் சருமத்தை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation