வீட்டில் தோட்டம் அமைத்து பராமரிப்பதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, நம்முடைய தோட்டத்தின் மூலம் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பணத்தையும் மிச்சப்படுத்தலாம் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், அது உண்மை தான்.
மேலும் படிக்க: வீட்டிலேயே கொத்தமல்லி செடியை ஈசியா வளர்க்கலாம்: தெரிந்துகொள்ள வேண்டிய 6 முக்கிய டிப்ஸ்!
மாடி தோட்டத்தில் பல விதமான பூக்களை வளர்ப்பதை காட்டிலும் நம் உணவுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் தாவரங்களை பராமரித்து வளர்ப்பதன் மூலம் நமக்கு இரண்டு விதமான நன்மைகள் கிடைக்கின்றன. நாமே பராமரிக்கும் தோட்டத்தில் இருந்து கிடைக்கும் காய்கறிகளில் இரசாயனங்கள் இருக்காது. இதன் வாயிலாக நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். மேலும், நமது பணத்தையும் மிச்சப்படுத்திக் கொள்ளலாம். அதன்படி, வீட்டு தோட்டத்தில் எளிதாக வளர்க்கக் கூடிய காய்கறிகள், பழங்கள் மற்றும் தாவரங்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
கீரையில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி, கே போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளன. இது ஆரோக்கியமான எலும்புகள், வலுவான நோய் எதிர்ப்பு சக்தி, கூர்மையான கண்பார்வை மற்றும் அதிக ஆற்றல் ஆகியவற்றை வழங்குகிறது. கீரையை தொட்டிகளிலோ அல்லது தோட்டத்தில் உள்ள சிறிய இடத்திலோ கூட விரைவாக வளர்க்க முடியும். இதை பலமுறை அறுவடை செய்யலாம்.
மருத்துவ குணங்களுக்காக அறியப்படும் ஒரு மூலிகையாக துளசி விளங்குகிறது. இது, செரிமானம், இதய ஆரோக்கியம் மற்றும் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. வெப்பமான சூழ்நிலையில் சிறப்பாக வளரும் தன்மை துளசிக்கு இருக்கிறது. சிறிய தொட்டிகளிலோ அல்லது ஜன்னல் போன்ற இடங்களிலோ இதை எளிதாக வளர்க்கலாம். நீங்கள், தேநீர் தயாரிப்பதற்கும் அல்லது பாஸ்தாவில் சேர்ப்பதற்கும் இந்த துளசி பெரிதும் பயன்படும்.
மேலும் படிக்க: வீட்டுத் தோட்டத்தில் குங்குமப்பூ வளர்ப்பு: சிறிய இடம் இருந்தால் போதும்; இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
புதினா விரைவாக வளரக்கூடிய ஒரு மூலிகையாகும். இது புத்துணர்ச்சியூட்டும் நறுமணம் மற்றும் குளிர்ச்சியூட்டும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதேபோல், மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது. புதினாவை எளிதாக தொட்டிகளில் வளர்க்கலாம். சட்னி, சாலட், மூலிகை தேநீர் போன்றவற்றுக்கு புதினா பெரிதும் பயன்படும்.
தக்காளியில் லைகோபின் நிறைந்துள்ளது. இது இதய நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், அவை வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் ஆகியவற்றையும் வழங்குகின்றன. இவை அனைத்தும் இதயம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகின்றன. கடைகளில் வாங்குவதை விட வீட்டில் வளர்க்கப்படும் தக்காளிகள் மிகவும் சுவையாக இருக்கும். இவற்றை தொட்டிகளிலோ அல்லது பைகளிளோ எளிதாக வளர்க்கலாம்.
எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்திற்கு உதவவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. மேலும், இதற்கு குறைந்த பராமரிப்பே போதுமானது. மற்ற செடிகளை விட இது சற்று பெரிதாக இருந்தாலும் எளிதாக வளர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com