herzindagi
image

ரோஜா செடியின் குச்சிகளைப் பதியம் வைத்து வளர்க்கும் முறைகள் இது தான்!

வண்ண வண்ண மலர்களோடு மனதைக் கவரும் ரோஜா செடிகளை வீட்டிலேயே பதியம் வைத்து வளர்க்கும் முறைகள் குறித்த முழு விபரம்.  
Editorial
Updated:- 2025-09-18, 15:46 IST

ரோஜாக்கள் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. கண்களைக் கவரும் வகையில் வண்ண வண்ண பூக்களைப் பார்த்தாலே மனதிற்கு இன்பமாக இருக்கும். அந்த மலர்களையே நாம் வசிக்கும் வீட்டில் வளர்க்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் அனைவரிடத்தும் இருக்கும். கடைகளில் வாங்கி தோட்டத்தில் வைக்கும் அனைத்துச் செடிகளும் சரியான முறையில் வளர்வதில்லை. நல்ல தரமான செடிகளை வளர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பதியம் வைத்து வளர்க்கலாம். எப்படி என்பது குறித்த டிப்ஸ்கள் இங்கே.

மேலும் படிக்க: Home garden tips: வீட்டிலேயே தோட்டம் அமைக்க விருப்பம் கொண்டவரா நீங்கள்? இந்த 7 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

  • முதலில் தரமான ரோஜா செடியின் குச்சிகளைத் தேர்வு செய்துக் கொள்ள வேண்டும்.
  • இதன் பின்னர் ரோஜா குச்சிகளை 6 இன்ச் நீளத்திலும் 45 டிகரி கோணத்தில் வெட்டிக் கொள்ள வேண்டும். உங்களுக்குத் தேவையான அளவு வெட்டி எடுத்துக் கொள்வது நல்லது.
  • ரோஜா குச்சிகளை வெட்டியவுடன் யாரும் ஊன்றி விட மாட்டோம். எனவே எவ்வித பூஞ்சைத் தொற்று பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்கு குச்சியின் இரு முனைகளையும் மஞ்சளில தொட்டு எடுக்க வேண்டும்.

மேலும் படிக்க: குறைந்த இடத்தில் அதிக மகசூல்; மாடித் தோட்டத்தில் பீட்ரூட் வளர்ப்பதற்கான எளிய குறிப்புகள்


  • அதிக நீர் வெளியேறும் வகையில் குறைந்த பட்சம் 9 இன்ச் அளவுள்ள தொட்டியைத் தேர்வு செய்துக் கொள்ள வேண்டும்.
  • ரோஜா செடியின் குச்சிகளை நட்டி வைப்பதற்கு முன்னதாக தொட்டியில் ஆற்றுமணல் அல்லது செம்மண் அல்லது தேங்காய்நார் கழிவுகளைக் கொண்டு நிரப்பிக் கொள்ளவும்.
  • இதில் ஒரு இன்ச் அளவு இடைவெளியில் குச்சிகளை நட்டிவைக்கவும். நெருக்கமாக நட்டி வைக்கும் போது காற்றோட்டம் கிடைக்காது.
  • இவ்வாறு நட்டி வைத்த பின்னதாக மண் நனையும் வரை தண்ணீரை ஸ்ப்ரே செய்ய வேண்டும். அதிக தண்ணீர் இருந்தால் குச்சிகள் அழுகி விட நேரிடும்.
  • தொட்டியில் நட்டி வைத்துள்ள குச்சிகள் காயாமல் இருக்கும் வகையில் வாட்டர் பாட்டிலை பாதியாக அறுத்து மூடி வைக்கவும். நிழல் பகுதியில் வைப்பது நல்லது. மண் காய்ந்திருந்தால் மட்டுமே தண்ணீர் தெளித்துவிட வேண்டும். ஸ்ப்ரே செய்தால் போதும்.

மேலும் படிக்க: மாடித்தோட்டம் அமைக்க தமிழக அரசு வழங்கும் கிட்; மானிய விலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை!

  • இவ்வாறு காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளில் தண்ணீர் ஸ்ப்ரே செய்துக் கொண்டிருந்தாலே 20 நாட்களில் குச்சியில் லேசாக துளிர் வந்துவிடும். இவற்றை ஓரளவிற்கு வெயில் மற்றும் நிழல் இருக்கும் இடத்தில் மூன்று நாட்களுக்கு வைத்திருக்கவும்.
  • இதன் பின்னதாக பூத்தொட்டி அல்லது தோட்டத்தில் உங்களுக்கு விருப்பமான இடத்தில் நடவு செய்து பராமரித்து வந்தால் போதும். ஒன்றிரண்டு மாதங்களில் செடியில் அழகான பூக்கள் பூத்துக்குலுங்கும்.

Image credit - Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com