Home garden tips: தோட்டக்கலை என்பது எளிதான காரியம் இல்லை, ஆனால் கடினமானதும் அல்ல. காய்கறிகள், மூலிகைகள் மற்றும் பூச்செடிகளை வளர்ப்பதன் மூலம் உங்கள் தோட்டத்தை அழகாகவும், உயிர்ப்புள்ளதாகவும் மாற்றலாம். ஆனால், முதல் முறையாக தோட்டம் அமைப்பவர்களுக்கு, போதுமான விஷயங்கள் தெரியாததால் சில தவறுகள் நேரலாம். அதற்காக சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: இந்த 3 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க... உங்க வீட்டு ரோஜா செடியில் பூக்கள் பூத்துக் குலுங்கும்!
தோட்டக்கலைக்கு மிகவும் முக்கியமான அம்சம், நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடம். உங்கள் தோட்டத்தில் அல்லது பால்கனியில் தினமும் கண்ணில் படும் இடத்தில் உங்கள் தோட்டத்தை அமைத்து கொள்ளுங்கள். தினமும் அதை பார்ப்பதன் மூலம், செடிகளின் நிலையை எளிதாக புரிந்துகொண்டு, அதற்கேற்ப பராமரிக்க முடியும்.
மதியம் இரண்டு மணி நேரம் மட்டும் சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் உங்கள் தோட்டத்தை அமைத்துவிடாதீர்கள். நாள் முழுவதும் போதுமான சூரிய ஒளி கிடைக்கும் இடத்தை கவனமாக தேர்ந்தெடுக்கவும். பெரும்பாலான செடிகளுக்கும், மூலிகைகளுக்கும் நிறைய சூரிய ஒளி தேவைப்படும். எனவே, அதற்கேற்ப திட்டமிடுங்கள்.
செடிகளின் வளர்ச்சிக்கு நீர் மிகவும் அவசியம். உங்கள் அழகான செடிகள் வளர்வதற்கு தேவையான மற்றும் சரியான நீர் பாசன முறையை திட்டமிடுங்கள். குழாய் அல்லது நீர் ஆதாரத்திலிருந்து மிக தொலைவில் தோட்டம் அமைப்பதைத் தவிர்க்கவும்.
சிறிய செடிகளை விதவிதமான வடிவங்கள் மற்றும் அளவுகளில் உள்ள தொட்டிகளில் வையுங்கள். உங்களுக்கு சிறிய தோட்டம் அல்லது பால்கனி தோட்டம் இருந்தால், வண்ணமயமான தொட்டிகளை பயன்படுத்துவது சிறந்த தேர்வாக இருக்கும்.
மேலும் படிக்க: ஸ்டார் ஹோட்டல் போன்று வீடு முழுவதும் மனம் வீச வேண்டுமா? இந்த சிம்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
உங்கள் செடிகள் செழித்து வளர, மண் மிகவும் முக்கியம். சத்தான மற்றும் நன்கு வடிகட்டும் தன்மையுடைய மண்ணை வாங்குங்கள். ஒவ்வொரு வகை செடிக்கும் வெவ்வேறு வகையான மண் தேவைப்படும். எனவே, நன்கு விசாரித்து, சிறந்த மண்ணை வாங்குங்கள். மண்ணின் தரத்தை சரியாக வைத்திருக்க, அதைத் தொடர்ந்து உழுது, சரியான உரங்களை கலக்க வேண்டும்.
மேற்கண்ட அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்ட பிறகு, இந்த முதல் படியை தொடங்குங்கள். நீங்கள் வாங்க விரும்பும் செடிகளை பற்றி நன்றாக ஆராயுங்கள். தட்பவெப்பநிலை, நீர் பாசனம், மண் வளம் மற்றும் பிற காரணிகளை மனதில் கொள்ளுங்கள். செடி வாங்குவதற்கு முன், நன்கு ஆராய்ந்து, பின்னர் செடிகளை வாங்குவது சிறந்த தோட்டக்கலைக்கு வழிவகுக்கும்.
நல்ல தரமான மண்ணில் செடிகளை நட்டு வைப்பது மட்டும் அழகான தோட்டத்திற்கு கடைசி படி அல்ல. செடிகள் மற்றும் மண்ணை சரியான முறையில் பராமரிப்பது அவசியம். செடிகளின் ஆரோக்கியத்தை தொடர்ந்து சரிபார்த்து கொள்ளுங்கள். உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பது, மண்ணை சரிபார்ப்பது மற்றும் பூச்சிகள் குறித்து கவனம் செலுத்துவது அவசியம் ஆகும்.
எனவே, தோட்டம் அமைப்பதற்கு முன்பாக இந்த அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்வது என்பது சரியான பராமரிப்புக்கு வழிவகுக்கும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com