herzindagi
image

வீட்டில் உபயோகித்த பொருட்களை வைத்து இயற்கை உரம் தயாரிக்கலாமா? எளிய வழிமுறைகள் இங்கே!

வீட்டில் உபயோகிக்கும் காய்கறி கழிவுகள், காபி தூள், டீ தூள், முட்டை ஒடு, உலர்ந்த இலைகள், மரத்தூள் போன்றவற்றைப் பயன்படுத்தி எளிமையான முறையில் இயற்கை உரம் தயாரிக்க முடியும்.
Editorial
Updated:- 2025-11-18, 23:40 IST

இன்றைய காலத்து இளைஞர்களிடம் சமீப காலங்களாகவே இயற்கை மீதான ஆர்வம் அதிகரித்து விட்டது. அதிகரித்து வரும் நோய் தாக்குதல்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற பல்வேறு காரணங்களால் இயற்கையாக தயாரித்த உணவுகளை அதிகம் உணவுமுறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற மனநிலை மக்களிடம் அதிகரித்து விட்டது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது ஒவ்வொருவரின் வீட்டில் வைத்திருக்கும் மாடித்தோட்டங்கள் தான். எவ்வித மருத்துகள் அடிக்காமல், வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை உரமாக்கி வளர்க்கப்படும் செடிகளில் விளையும் காய்கறிகளை உட்கொள்ள தயாராகிவிட்டனர். இந்த சூழலில் எப்படி வீட்டிலேயே இயற்கையான முறையில் உரம் தயாரிக்கலாம்? இதற்கு என்னென்ன பொருட்கள் தேவை? என்பதை இங்கே விரிவாக அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.


வீட்டிலேயே இயற்கை உரம் தயாரிக்கும் முறைகள்:

உரம் தயாரிக்க வேண்டும் என்று சொன்னவுடன் இதற்காக என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்ற தேடல் வேண்டாம். வீட்டில் அன்றாடம் பயன்படுத்தி மீதமாகவும் காய்கறி கழிவுகள், பழக்கழிவுகள், காபி அல்லது டீதூள், முட்டை ஒடு, உலர்ந்த இலைகள், மரத்தூள் போன்றவற்றைப் பயன்படுத்தி எளிமையான முறையில் வீட்டிலேயே இயற்கை உரங்கள் தயாரிக்க முடியும்.

 

மேலும் படிக்க: சுவை மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்த 5 மூலிகைகளை உங்கள் வீட்டு தோட்டத்தில் எளிதாக வளர்க்கலாம்

எப்படி உரம் தயாரிப்பது?

  • வீட்டில் பயன்படுத்திய பொருட்களை முதலில் தயாராக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வீட்டுத் தோட்டத்தில் அல்லது வீட்டில் எங்கு உரம் வளர்க்க போதுமான இடம் உள்ளது? என்பதைத் தேர்வு செய்துக் கொ்ள வேண்டும்.

 மேலும் படிக்க: பப்பாளி வளர்ப்பு இனி ஈஸி; வீட்டு பால்கனி போதும்: இந்த டிப்ஸை மறக்காம ஃபாலோ பண்ணுங்க

  • பின்னர் அந்த இடத்தில் 3 அடி ஆழத்தில் குழியைத் தோண்டி கொள்ள வேண்டும். இதில் வீட்டில் மீந்துப்போன காய்கறி கழிவுகள் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • தினமும் கிடைக்கும் பொருட்களை வெட்டி வைத்துள்ள குழிகளுக்குள் சேர்த்து வைக்கவும். மாட்டுச்சாணம் கிடைத்தால் தண்ணீரில் நன்கு கலந்து தெளித்து வரவும்.

Image credit - Freepik

  • வீட்டில் தயாரிக்கும் உரம் அதிக ஈரமாகவும் இருக்கக்கூடாது. அதே சமயம் அதிகமாக காய்ந்தும் இருக்கக்கூடாது. எனவே தினமும் பச்சை தண்ணீர் அல்லது சாணம் கலந்த தண்ணீர் தெளித்து எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும். அதிக தண்ணீர் சேர்க்கும் போது உரத்தில் உள்ள நுண்ணுயிர்கள் அழிந்துவிடக்கூடும் என்பதால் அல்லது உரமானது அழுகிப் போய்விடக்கூடும். எனவே கவனமாக தண்ணீர் தெளிக்க வேண்டும்.
  • இந்த உரக்கலவையில் அனைத்துப் பகுதிகளிலும் ஆக்ஸிஜன் முறையாக கிடைக்க வேண்டும் என்பதற்காக வாரத்திற்கு ஒருமுறை கிளறிவிடவும். ஒருவே ளை உரத்தில் வெப்பம் அதிகமாக இருப்பது தெரிந்தால் அப்போதும் உரத்தை நன்கு கிளறிவிடவும்.
  • உரம் தயாரிப்பதற்குப் போடப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் நன்கு மக்கிவிட்டால் போதும். நுண்ணுயிர்கள் அதிகம் கொண்ட இயற்கை உரம் ரெடி.

 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com