Korean skin care: பளபளப்பான சருமத்தை நீங்கள் பெற விரும்பினால், இந்த எளிமையான கொரியன் சரும பராமரிப்பு முறை உங்களுக்கு சிறந்த தீர்வாக அமையும். எப்போதும் வேலைகளில் மும்முரமாக இருப்பவர்களுக்கும், கொரியன் சரும பராமரிப்பு பாணியில் ஈடுபாடு கொண்டவர்களுக்கும் ஏற்றவாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ச்சியாக பின்பற்றுவதன் மூலம் கண்ணாடி போன்ற தெளிவான சருமத்தை பெற முடியும்.
மேலும் படிக்க: Benefits of almonds: சருமத்தை பொலிவாக்கும்; எலும்புகளை வலுப்படுத்தும் - ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்
அந்த வகையில், இந்த சரும பராமரிப்பு முறையை பின்பற்ற வேண்டுமென்றால் இதற்காக 5 வழிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டியதாக இருக்கும். அதனை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கொரியன் சரும பராமரிப்பு முறையின் முதல் படி, உங்கள் சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை அகற்றாமல் முழுமையாக சுத்தம் செய்வதை உறுதி செய்கிறது. இதில் முதலில் எண்ணெய் சார்ந்த கிளென்சரை பயன்படுத்த வேண்டும். இது சன்ஸ்கிரீன், மேக்கப் போன்றவற்றை நீக்குகிறது. இதை உங்கள் வறண்ட சருமத்தில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர், அதை நீரில் கழுவி விட்டு, அழுக்கு, வியர்வை ஆகியவற்றை நீக்குவதற்காக நீர் சார்ந்த கிளென்சரை பயன்படுத்த வேண்டும். இந்த இரண்டு படிநிலைகள், சரும துளைகளை சுத்தமாக வைத்திருக்கவும், அடுத்த படிகளுக்கு உங்கள் சருமத்தை தயார்ப்படுத்தவும் உதவுகிறது.
அடுத்து, டோனரை பயன்படுத்த வேண்டும். மேற்கத்திய டோனர்களை போலன்றி, கொரியன் டோனர்கள் அதிக ஈரப்பதத்தை தருவதோடு, சுத்தம் செய்த பிறகு சருமத்தின் pH அளவை சமநிலைப்படுத்த உதவுகின்றன. கற்றாழை, வெள்ளரி போன்ற பொருட்களின் தன்மை இதில் பெரும்பாலும் சேர்க்கப்பட்டிருக்கும். சீரம் மற்றும் கிரீம்களை சருமம் சிறப்பாக உறிஞ்சிக் கொள்வதற்காக, டோனரை உங்கள் கைகளால் அல்லது காட்டன் பயன்படுத்தி மெதுவாக தடவி சருமத்தை மென்மையாக்கலாம்.
கொரியன் சரும பராமரிப்பு முறைகளில் முக்கியமான படிநிலைகளில் ஒன்று எசென்ஸ். இது சீரத்தை விட லேசானதாகவும், டோனரை விட அடர்த்தி வாய்ந்ததாகவும் இருக்கும். இதில் உள்ள பொருட்கள் சருமத்திற்கு அதிக ஈரப்பதத்தை அளிக்கும். எனினும், பருக்கள் போன்ற பிரச்சனைகள் இருப்பதாக நினைப்பவர்கள் சீரத்தை பயன்படுத்தலாம். இவற்றை உங்கள் சருமத்தில் மெதுவாக தடவ வேண்டும்.
மேலும் படிக்க: முடி உதிர்வுக்கு முற்றுப்புள்ளி; இனி முருங்கை பொடியை இப்படி யூஸ் பண்ணுங்க மக்களே
ஒரு நல்ல மாய்ஸ்சரைசர் முந்தைய செயல்முறைகளின் நன்மைகள் அனைத்தையும் தக்கவைக்க உதவுகிறது. உங்கள் சரும வகைக்கு ஏற்ற ஜெல் அல்லது கிரீம் வகையை தேர்ந்தெடுக்கலாம். எண்ணெய் சருமத்திற்கு லேசான மாய்ஸ்சரைசரும், வறண்ட சருமத்திற்கு அடர்த்தியான மாய்ஸ்சரைசரும் சிறந்தது. மாய்ஸ்சரைசிங் உங்கள் சருமத்திற்கு ஈரப்பதத்தை பராமரிக்கவும், சருமத்தின் தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது. உங்கள் சருமம் எண்ணெய் பசையாக இருந்தாலும், இதனை தவிர்க்க வேண்டாம்.
புற ஊதா கதிர்வீச்சில் இருந்து சருமத்தை பாதுகாப்பது என்பது கொரியன் சரும பராமரிப்பு முறையின் முக்கியமான அம்சமாகும். காலையில், குறைந்தபட்சம் எஸ்.பி.எஃப் 30 கொண்ட சன்ஸ்கிரீனை பயன்படுத்தலாம். இரவில், சருமத்தை சரி செய்யும் நைட் கிரீம் அல்லது ஸ்லீப்பிங் மாஸ்க்கை பயன்படுத்தலாம்.
இந்த கொரியன் சரும பராமரிப்பு முறையை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சருமத்தை நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com