
கோடைகால வெப்பத்தில் இருந்து மழைக்காலம் விடுதலை அளித்தாலும், அதிக ஈரப்பதம் காரணமாக பலவிதமான சருமம் மற்றும் கூந்தல் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. பூஞ்சை தொற்றுகள், பருக்கள் மற்றும் அரிப்பு போன்றவை மழைக்காலத்தில் ஏற்படும் சில பிரச்சனைகள் ஆகும்.
இந்தப் பிரச்சனைகளுக்கு நம் இயற்கை ஒரு சக்திவாய்ந்த தீர்வை வழங்குகிறது. அதன்படி, இது போன்ற பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேப்பிலை மற்றும் அதன் பொடி பயன்படுகிறது. அவற்றில் பாக்டீரியா எதிர்ப்பு (Antibacterial), பூஞ்சை எதிர்ப்பு (Antifungal), அழற்சி எதிர்ப்பு (Anti-inflammatory) மற்றும் நச்சுத்தன்மை நீக்கும் (Detoxifying) பண்புகள் அதிகமாக இருப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது. அந்த வகையில், எவ்வாறு வேப்பிலையை பயன்படுத்தி நம்மை பாதுகாக்கலாம் என்று காண்போம்.
முகப்பரு மற்றும் எண்ணெய் பசையை கட்டுப்படுத்த வேம்பு ஃபேஸ் பேக் பயன்படுத்தலாம். இதற்காக வேப்பிலை பொடியை, தண்ணீர், பன்னீர் அல்லது தேனுடன் கலந்து ஒரு ஃபேஸ் பேக் தயார் செய்யவும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தை தூய்மைப்படுத்தி, பருக்களை கட்டுப்படுத்துகிறது. சருமத்தை புத்துணர்ச்சியுடனும், எண்ணெய் பசை இல்லாமலும் வைத்திருக்க, வாரத்திற்கு 2 முதல் 3 முறை இந்த பேக்கை பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க: கூந்தல் வளர்ச்சியை இயற்கையான வழியில் அதிகரிக்க உதவும் 5 ஹேர்மாஸ்க்
மழைக்காலத்தில், குறிப்பாக சரும மடிப்புகளில் பூஞ்சை தொற்றுகள், அரிப்பு மற்றும் தடிப்புகள் (Body Rashes) ஏற்படுவதுண்டு. இதனை போக்க வேப்பிலை பயன்படுகிறது. இதற்காக, தண்ணீரில் வேப்பிலைகளை போட்டு நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி அந்தக் கலவையை குளிக்கும் தண்ணீரில் சேர்க்கலாம். இல்லையெனில், குளிக்கும் நீரில் சில துளிகள் சுத்தமான வேப்ப எண்ணெய் (Neem Oil) கலந்தும் பயன்படுத்தலாம். இது சருமத்தை பாதுகாக்கும்.
மேலும் படிக்க: Benefits of aloe vera gel: கற்றாழை பயன்படுத்துவதால் உங்கள் சருமத்திற்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
வேப்ப எண்ணெய்யை, தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் போன்றவற்றுடன் கலந்து பயன்படுத்தலாம். இது கொசுக்கடிகள், பருக்கள் மற்றும் சிறிய தோல் எரிச்சல்களுக்கு மருந்து போன்று செயல்படும். வேப்ப எண்ணெய்யை சிறிய துண்டு காட்டனில் எடுத்து நேரடியாக பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால், அதன் கிருமி நாசினி மற்றும் அழற்சி எதிர்ப்பு செயல்பாடு, காயங்கள் ஆறுவதை துரிதப்படுத்தும்.
மாசு மற்றும் ஈரப்பதம் காரணமாக சருமம் பொலிவிழந்து காணப்படுவதுடன், துளைகள் பெரிதாகலாம். இதை போக்க வேப்பிலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறிய பிறகு வடிகட்டி, அதை டோனராக (Toner) பயன்படுத்தலாம். இது சருமத்தில் உள்ள துளைகளை இறுக்கவும், சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும் உதவுகிறது. மேலும், இது ஒரு இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு கவசமாகவும் செயல்படுகிறது.

மழைக்காலத்தில் எண்ணெய் பசை நிறைந்த உச்சந்தலை, பொடுகு மற்றும் முடி உதிர்தல் ஆகியவற்றை அதிகமாகும். வேப்பம் பொடியை தயிர் அல்லது தண்ணீருடன் கலந்து உச்சந்தலைக்கான பேக்கை (Scalp Pack) உருவாக்கலாம். ஷாம்பு போடுவதற்கு முன் வாரத்திற்கு ஒருமுறை இந்த பேக்கை பயன்படுத்துவது பொடுகை கட்டுப்படுத்தவும், அரிப்பை தணிக்கவும், வேர்களை வலுப்படுத்தவும் உதவுகிறது. இதனால் முடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
இவற்றை பயன்படுத்தி மழைக்கலத்திலும் நம்முடைய சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை எளிதாக பாதுகாக்க முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com