herzindagi
yoga for easy delivery poses

Yoga for Easy Delivery in Tamil: பிரசவத்தை எளிதாக்கி, வலியை குறைக்கும் யோகாசனங்கள்

பிரசவத்தை எளிதாக்க பின்வரும் யோகாசனங்களை கர்பிணிகள் தங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளலாம். <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2023-01-18, 14:49 IST

ஒரு பெண் தன் வாழ்க்கையில் சந்திக்கும் மிகப்பெரிய சவால்களில் கர்ப்பம், பிரசவம், மற்றும் பிள்ளை பெறுதலும் அடங்கும். ஆனால் வலிமையான, வலையக்கூடிய இடுப்பறையின் தளம் கர்ப்பத்தின் பல அசௌகரியங்கள் நீக்குவதோடு மட்டுமின்றி பிரசவத்தையும் எளிதாக்குகிறது.

அதனால்தான் பிரசவத்தை எளிதாக்கும் சில யோகாசனங்களை இன்று உங்களுக்காகக் பகிர்ந்துள்ளோம். இந்தத் தகவல்களை உடற்பயிற்சி பயிற்சியாளர் ஜூஹி கபூர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்கள் பிரசவத்தை எளிதாக்கவும், பிரசவ வலியைக் குறைக்கவும் இந்த யோகாசனங்களை உங்கள் வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் மனநலம் மற்றும் உடல் நலத்திற்கு யோகா மிகவும் நல்லது. மேலும் இது தாய் மற்றும் சேய் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. யுனைடெட் ஸ்டேட்ஸ் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் படி, சுமார் 150 நிமிடங்கள் செய்யப்படும் மிதமான விறுவிறுப்பான உடல் செயல்பாடுகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மையளிக்கும்.

சிறந்த விளைவுகலை பெற, யோகவிற்காக நீண்ட நேரம் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. பெண்கள் வாரத்திற்கு 5 முறை 30 நிமிடங்கள் அல்லது வாரத்திற்கு 10 முறை 15 நிமிடங்கள் யோகா செய்யலாம். தவறாமல் தினமும் யோகா செய்வது நல்ல விஷயம்.

பெண்கள் கர்ப்பத்திற்கு முன் யோகா செய்வதில் பழக்கப்பட்டு இருந்தால், அதைத் தொடர்ந்து செய்யலாம், ஆனால் இதுவரை யோகா பயிற்சி செய்யாமல் முதல் முறையாக முயற்சிக்க விரும்பும் பெண்கள் தங்கள் மருத்துவரை ஆலோசித்தபின் முயற்சி செய்வது நல்லது.

நிபுணர் கருத்து

ஜூஹி கபூர் அவர்களின் கருத்துப்படி, 'பிரசவத்தை எளிதாக்கவும், பிறப்புப் பாதையின் திறப்பு மற்றும் வளையுந்தன்மையை மேம்படுத்தவும், சில சுவாரஸ்யமான யோகா நுட்பங்கள் உதவியாக இருக்கும்.'

1. மலாசனா

yoga

கருத்தரிப்பில் இரண்டாவது மும்மாதத்திலிருந்து(second trimester) இதைப் பயிற்சி செய்ய ஆரம்பிக்கலாம். மூன்றாம் மும்மாதக் காலங்களிலும்(third trimester) இதைப் தொடர்ந்து செய்யலாம். மெத்தைகள், பந்துகள் போன்ற பொருட்களை உங்கள் ஆதரவுக்காகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மலாசனா இடுப்பு வளையத்தைத் திறந்து பிரசவத்தை எளிதாக்குவதோடு, பிரசவச் சிக்கலையும் ஓரளவு குறைக்கிறது.

செயல்முறை

  • இதைச் செய்ய, உங்கள் கால்களை அகலமாகத் தள்ளி வைத்துத் தடாசனாவில் நிற்கவும்.
  • குந்துகை நிலைக்குக் கொண்டு வர முழங்கால்களை வளைக்கவும்.
  • முன்னோக்கி வளைக்கும்போது இரு கைகளையும் வளைத்து முழங்கால்களை உள்ளே வைக்கவும்.
  • கைகளை உள்நோக்கித் திருப்பவும்.
  • அதே நமஸ்கார தோரணையில் கைகளை மேல்நோக்கி நகர்த்தவும்.
  • இந்த நிலையில் உட்கார்ந்து ஆழ்ந்த மூச்சு விடுங்கள்.
  • மெதுவாக உங்கள் கைகளைத் திறந்து எழுந்திருங்கள்

2. மலாசன நடை

yoga

இந்தியப் பெண்கள் தரையை துடைக்கப் பயன்படுத்தும் முறையைப் போலவே, இடுப்பு வளையத்தைத் திறக்கவும், இடுப்பறையின் தளத் தசைகளை வலுப்படுத்தவும் மலாசன நடை ஒரு சிறந்த வழியாகும். சமநிலையை இழக்காதபடி உங்கள் ஆதாரவிற்காகத் தரையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதை இரண்டாவது மற்றும் மூன்றாவது மும்மாதக் காலங்களிலும் பயிற்சி செய்யுங்கள்.

செயல்முறை

  • இதைச் செய்ய, குந்துகை நிலைக்குச் செல்லவும்.
  • முன்னோக்கி வளைக்கும்போது இரு கைகளையும் வளைத்து முழங்கால்களை உள்ளே வைக்கவும்.
  • கைகளை முன்னோக்கி இருக்கும் படி வைக்கவும்.
  • பின்னர் கைகளின் உதவியுடன், குந்துகை நிலையில் மெதுவாக முன்னோக்கி நடக்கவும்.
  • பிறகு இயல்பு நிலைக்கு வரவும்

இந்த பதிவும் உதவலாம்:பெண்கள் பத்மாசனம் செய்வதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

எச்சரிக்கை

மேற்கண்ட இந்த 2 யோகாசனங்களையும் பின்வரும் நிலையில் செய்வதைத் தவிர்க்கவும்

  • மூல நோய்
  • முதல் மூன்று மும்மாதங்கள் (first trimester)
  • ப்ரீச் நிலையில் குழந்தை இருந்தால்
  • கர்ப்பகால சிக்கல்கள்

3. அபான முத்ரா

yoga

கட்டாயமாக 9வது மாதத்தில் தான் இதைப் பயிற்சி செய்ய வேண்டும். இது அபான பிராணனை (உடலிலிருந்து நீக்கும் செயலுக்குப் பொறுப்பு) செயல்படுத்துகிறது. கர்ப்பத்தின் 8 மாதங்கள்வரை இதைப் பயிற்சி செய்ய வேண்டாம்.

செயல்முறை

  • இதைச் செய்ய, ஒரு தளர்வான தோரணையில் உட்காரவும்.
  • உங்கள் இரு கைகளையும் நீட்டி, தொடைகளின் மீது வைக்கவும்.
  • உங்கள் கைகள் வானத்தை நோக்கி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • பிறகு நடுவிரல் மற்றும் மோதிர விரலால் கட்டை விரலின் மேல் பகுதியைத் தொடவும்
  • இப்போது ஆள்காட்டி மற்றும் சிறிய விரலை முழுமையாக நீட்டவும்.
  • இரண்டு கைகளாலும் இதைச் செய்யுங்கள்.
  • இந்த ஆசனம் செய்யும்போது கண்களை மூடிக் கொள்ளவும்.
  • மெதுவாகச் சுவாசிக்கவும், சுவாசத்தில் கவனம் செலுத்தவும்

இந்த பதிவும் உதவலாம்: மலச்சிக்கலை போக்கும் யோகாசனங்கள்

மேலே உள்ள அனைத்து யோகாசனங்களும் பதிவுசெய்யப்பட்ட கர்ப்பகால பெண்களுக்கான யோகா பயிற்சியாளரின் (RPYT) வழிகாட்டுதலின் கீழ் மட்டுமே செய்ய வேண்டும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com