கடந்த சில ஆண்டுகளாக மக்களுக்கு யோகாவின் மீதுள்ள நாட்டம் வெகுவாக அதிகரித்திருக்கிறது. யோகா ஒருவரை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக மாற்றுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. யோகா மூலம் பல வகையான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம்.
பொதுவாக மக்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பராமரிக்கப் பல்வேறு வகையான யோகாசனங்களை செய்கிறார்கள். இருப்பினும், எளிதான ஆசனங்களில் ஒன்றான பத்மாசனவுடன் ஆரம்பிக்கலாம்.
புதிதாகப் பயில்பவர்கள் கூடப் பத்மாசனத்தை எளிதாகச் செய்ய முடியும். அனைவருக்கும் பலனளிக்க கூடிய இந்தப் பத்மாசனம், பெண்களின் நன்மைக்குக் கூடுதல் சிறப்பு வாய்ந்தது. எனவே, ப்ளாசம் யோகாவின் நிறுவனரும், யோகா நிபுணருமான ஜிதேந்திர கௌஷிக் பகிர்ந்த பத்மாசனத்தின் சில நிகரற்ற நன்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பத்மாசனம் செய்வது எப்படி?
- பத்மாசனம் பயிற்சி செய்ய, முதலில் யோகா பாயை தரையில் விரித்து அதன் மீது அமருங்கள்.
- பிறகு, உங்கள் வலது காலை வளைத்து, குதிகாலை இடது தொடையில் வைக்கவும்.
- அதே போல் உங்களின் இடது குதிகால், வலது தொடையில் இருக்கும் வகையில் இடது காலை வளைக்கவும்.
- இப்போது உங்கள் இடுப்பு மற்றும் கழுத்தை நேராக வைத்திருக்க வேண்டியது அவசியம்.
- அடுத்ததாக, உங்கள் கை விரல்களால் ஞானமுத்ராவை செய்து, இரு கைகளையும் முழங்காலின் மேல் வைக்கவும்.
- இதைச் செய்யும்போது, உங்கள் முழங்கைகள் வளையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
- ஆழமாக மூச்சை இழுத்து விடுங்கள்.
- உங்கள் சுவாசத்தின் இயக்கத்தில் முழு கவனத்துடன் ஈடுபட முயற்சி செய்யுங்கள்.
- உங்களால் முடிந்த வரையில் இந்தத் தோரணையில் இருக்கலாம்.
- நிறைவு பெறும்போது உடலை மெதுவாகத் தளர்த்திக் கொள்ளுங்கள்.
- இதே முறையைப் பின்பற்றி நீங்கள் மீண்டும் பயிற்ச்சி செய்யலாம்.
பத்மாசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
பத்மாசனம் செய்வது அனைவருக்கும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது, குறிப்பாகப் பெண்கள் சிறப்பு நன்மைகளைப் பெறுகிறார்கள். உதாரணமாக,
- பத்மாசனம் செய்வதன் மூலம் பெண்ணுக்குப் பிரசவ காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறைகிறது.
- பத்மாசனம் செய்வதால் இடுப்பறையின் தசைகள் பலப்படுத்துகிறது. இதனால் பெண்களுக்குப் பிரசவ நேரத்தில் பிரசவ வலி மிகவும் குறைவாகவே இருக்கும்.
- பத்மாசனத்தை பயிற்சி செய்தல் மாதவிடாய் வலியையும் குறைக்க உதவுகிறது. இது தசைகளை நீட்சியடையச் செய்து, இடுப்பறைப் பகுதியை வலுப்படுத்துவதால், மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் தசைப்பிடிப்புகளையும் குறைக்கிறது.
- பெண்கள் நாள் முழுவதும் பல முனைகளில் வேலை செய்வதால் தாழ்வாக உணரலாம். ஆனால் தொடர்ந்து பத்மாசனம் செய்யும்பொழுது, உடலின் ஆற்றல் நிலை அதிகரிக்கிறது, இது அவர்களைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.
- பத்மாசனம் செய்யும்போது கண்களை மூடிக்கொண்டு சுவாசத்தில் கவனம் செலுத்துவதால் ஒருமுக சிந்தனையும் அதிகரிக்கிறது.
- 30 வயதிற்குப் பிறகு, பெண்களின் உடலில் கால்சியம் குறையத் தொடங்குவதால், முழங்கால் அல்லது மூட்டு வலி வரக்கூடும். குறிப்பாகக் கீல்வாத பிரச்சனையும் பெண்களுக்கு ஏற்படுகிறது. பத்மாசனம் செய்வதால் முழங்கால் மூட்டு வலியைக் குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: காலையில் இந்த 6 விஷயங்களை மட்டும் செய்தால் போதும், உடல் எடை மிக வேகமாகக் குறையும் தெரியுமா!
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
பத்மாசனம் செய்வது பெண்களுக்கு நன்மை அளித்தாலும் ஒரு சில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்:-
- உங்களுக்கு முழங்காலில் ஏதேனும் காயம் இருந்தால், பத்மாசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
- முழங்கால் வலி பிரச்சனை உள்ளவர்கள் முழங்காலை வளைக்கும்போது அதன் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க, பத்மாசனம் செய்வதற்கு முன் தியான ஆசனங்களைப் பயிற்சி செய்ய வேண்டும்.
- ஆயத்த பயிற்சிகள் (warmup) செய்த பிறகே பத்மாசனம் செய்ய வேண்டும்
இந்த பதிவும் உதவலாம்: எந்த நேரத்தில் யோகா செய்வதால் அதிக பலன் கிடைக்கும் தெரியுமா?
இனி நீங்களும் பத்மாசனத்தை பயிற்சி செய்து பலன் அடையலாம். இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரலாம், மேலும் உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாம். இது போன்ற உடற்பயிற்சி தொடர்பான பதிவுகளை மேலும் படிக்க ஹெர்ஷிந்தகி உடன் இணைந்திருங்கள்.
image source: freepik