herzindagi
flat tummy exercises at home

Flat tummy Exercises : வீட்டு சுவர் போதும், ஒரே மாதத்தில் தொப்பையை குறைத்திடலாம்!

தொப்பை இல்லாத தட்டையான வயிற்றைப் பெற ஜிம்மிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருக்கும் சுவற்றை பயன்படுத்தி இந்த இரண்டு உடற்பயிற்சிகளையும் செய்ய கற்றுக் கொள்ளுங்கள்…
Editorial
Updated:- 2023-08-28, 20:45 IST

சரியான உடல் எடை, ஃபிட் ஆன உடல் வாகு, தொப்பை இல்லாத வயிறு என தங்களுடைய எடையை பராமரித்து என்றும் அழகுடன் கச்சிதமான தோற்றத்துடன் இருக்கவே பெண்கள் விரும்புகிறார்கள். ஆனால் இதற்கான நேரத்தை ஒதுக்கி ஜிம்மிற்கு செல்லவோ அல்லது உடற்பயிற்சி செய்யவோ நேரம் ஒதுக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். இனி தினமும் அரை மணி நேரமாவது உங்களுக்காக செலவிட முயற்சி செய்யுங்கள். இதை செய்ய தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே நல்ல விளைவுகளை காணலாம். இனி நீங்கள் விரும்பும் உடையை உடுத்துவதற்கு தொப்பை ஒரு தடையாக இருக்காது. 

தொப்பை மற்றும் உடல் பருமன் கவலைக்குரிய விஷயம் தான். இது மோசமான தோற்றத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி பல நோய்களுக்கும் வழி வகுக்குறது. இந்நிலையில் தொப்பையை குறைக்க நம்மால் முடிந்த ஒரு சில எளிய பயிற்சிகளை செய்யலாம். அந்த வகையில் ஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே இரண்டு சுலபமான பயிற்சிகளை செய்து தொப்பையை குறைப்பதற்கான வழியை இன்று பார்க்கப் போகிறோம். இந்த இரண்டு பயிற்சிகள் குறித்த தகவல்களை யோகா நிபுணரான ஜூஹி கபூர் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.

இந்த பதிவும் உதவலாம்:  ஸ்பெஷல் மஞ்சள் டீ, இதை குடித்த 10 நிமிஷத்தில் நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும்!

சுவர் பயிற்சி 1 : Mountain Climber 

flat tummy mountain climbers

  • இந்த உடற்பயிற்சி செய்வதற்கு சுவரின் அருகே நேராக நிற்கவும்.
  • இதை செய்யும் பொழுது முதுகு நேராகவும் வயிற்று தசைகள் இறுக்கமாகவும் கழுத்து இயல்பான நிலையிலும் இருக்க வேண்டும்.
  • இப்போது உங்கள் இரு கைகளையும் சுவரின் மீது வைக்கவும்.
  • பின்னர் வலது முழங்காலை வளைத்து மார்பை நோக்கி மேலே உயர்த்தவும். பின் இயல்பு நிலைக்கு கொண்டு செல்லவும்.
  • இதே முறையை பின்பற்றி இடது முழங்காலை வளைத்து, உங்களால் முடிந்தவரை மார்பை நோக்கி கொண்டு வரவும் .
  • இந்த பயிற்சியை கொஞ்சம் வேகமாகவும் நீண்ட நேரத்திற்கும் செய்யவும். பயிற்சியை செய்யும் பொழுது முறையாக சுவாசிப்பதிலும் கவனம் செலுத்துங்கள்.

சுவர் பயிற்சி 2: Mountain Cross Climber

flat tummy mountain cross climbers

  • இந்த பயிற்சியை செய்வதற்கும் சுவரின் அருகே நேராக நிற்கவும்.
  • பயிற்சியை செய்யும் பொழுது முதுகு நேராகவும், வயிற்று தசைகள் இறுக்கமாகவும், கழுத்து இயல்பான தோரணையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  •  இரு கைகளையும் சுவரின் மீது வைக்கவும்.
  • உங்களால் முடிந்தவரை வலது முழங்காலை வளைத்து இடது மார்பை நோக்கி உயர்த்தவும். பின்பு இயல்பு நிலைக்கு கொண்டு செல்லவும்.
  • பின்னர் இதே முறையை பின்பற்றி இடது முழங்காலை வளைத்து வலது மார்பின் பக்கமாக உயர்த்தவும்.
  • வேகத்தை அதிகரித்து இதே பயிற்சியை உங்களால் முடிந்தவரை செய்யலாம்.
  • வீட்டு சுவரை பயன்படுத்தி சுலபமாக செய்யக்கூடிய இந்த இரண்டு பயிற்சிகளையும் செய்து வந்தால் தொப்பை விரைவில் குறையும். இதனுடன் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகளையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

 நீங்கள் செய்ய வேண்டியவை 

  •  தினமும் 10 நிமிடங்கள் வலிமை பயிற்சிகளை செய்ய வேண்டும்.
  •  தினமும் 45 நிமிடங்கள் நடக்க வேண்டும்.
  • வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது வலிமை அல்லது எடை தூக்கும் பயிற்சி செய்யுங்கள்.
  • சியா விதைகள், ஆளி விதைகள், ஓட்ஸ், திணை, பார்லி, பச்சை இலை காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளவும்.
  • குறைந்தது ஒரு மாதத்திற்க்காவது இனிப்பு மற்றும் ஜங்க் உணவுகளை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.
  • உணவிற்குப் பிறகு உடனே தூங்குவதை தவிர்க்கவும். குறைந்தது 2 மணி நேர இடைவெளியை கடைபிடிக்கவும்.
  • ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகும் குறைந்தது 100 படிக்கட்டுகளில் ஏறி இறங்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: தேனில் ஊறிய நட்ஸ் உடலுக்கு எவ்வளவு நல்லது தெரியுமா?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com