நட்ஸ் வகைகளை தேனில் ஊற வைத்து சாப்பிடும் பொழுது அதன் ஊட்டச்சத்து விகிதம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மற்றும் எடையை பராமரிக்க தினமும் ஒரு கைப்பிடி அளவு நட்ஸ் உடனை தேனை எடுத்துக் கொள்ளும்படி ஊட்டச்சத்து நிபுணர்களும் பரிந்துரை செய்கிறார்கள். பாதாம், உலர் திராட்சை, அக்ரூட் பருப்புகள், பிஸ்தா போன்றவற்றில் தனித்துவமான நன்மைகள் நிறைந்துள்ளன.
நட்ஸ் வகைகளில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் காணப்படுகின்றன. அதேசமயம் இயற்கையான இனிப்பு சுவையுடைய தேனில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் பண்புகள் நிறைந்துள்ளன. இவ்விரண்டையும் சேர்த்து சாப்பிடும் பொழுது பின்வரும் நன்மைகளை பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: கொழுப்பை குறைத்து ஸ்லிம்மான இடை அழகு பெற, இந்த 3 பயிற்சிகளை செய்யுங்கள்!
சரும பிரச்சனைகள் நீங்கி ஆரோக்கியமான சரும அழகை பெற வேண்டுமா? இன்றிலிருந்தே தேனில் ஊறவைத்த நட்ஸ் வகைகளை சாப்பிட தொடங்கலாம். இந்த கலவையானது சரும செல்களை வலுப்படுத்தி பருக்கள், சுருக்கங்கள், மெல்லிய கோடுகள் போன்ற சரும பிரச்சனையை தடுக்கின்றன. பாதாம் போன்ற வைட்டமின் E நிறைந்த நட்ஸ் வகைகளை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் நல்ல தெளிவான பளபளப்பான சருமத்தை பெறலாம்.
தேன் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்தது. இந்நிலையில் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த நட்ஸ் வகைகளை தேனில் ஊற வைத்து சாப்பிடலாம். இக்கலவையில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் வைட்டமின் B, B2 மற்றும் துத்தநாகத்தின் உறிஞ்சுதலை மேம்படுத்துகின்றன.
உடல் எடை அதிகரிப்பதை தடுக்க தேனில் ஊற வைத்த நட்ஸ் வகைகளை எடுத்துக் கொள்ளலாம். இயற்கையான இனிப்பு சுவையுடைய தேன் உங்கள் பசி ஆர்வத்தை கட்டுப்படுத்த உதவும். மேலும் குறைந்த கலோரி உடைய நட்ஸ் வகைகள் உடல் உடல் எடையை குறைப்பதற்கு ஏற்றது. இக்கலவையை ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளும் பொழுது அதிக உணவு உட்கொள்ளலை கட்டுப்படுத்தலாம்.
நட்ஸ் வகைகளை தேனில் ஊற வைத்து சாப்பிடும் பொழுது அவை எளிதாக ஜீரணமாகும். நட்ஸ் வகைகளில் காணப்படும் ஒரு சில சேர்மங்களை உடல் ஜீரணிக்க சற்று கடினமாக இருக்கலாம் இந்நிலையில் அதனை தீனில் ஊறவைத்து சாப்பிடும் பொழுது செரிமானம் எளிதாகும்.
மூளையை சுறுசுறுப்பாக மற்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், நினைவாற்றலை அதிகரிக்கவும் நட்ஸ் வகைகளை தேனில் ஊறவைத்து சாப்பிடலாம். நட்ஸ் வகைகளில் உள்ள வைட்டமின் E மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், விழிப்புணர்வை அதிகரிக்கவும், அறிவாற்றல் குறைவை போக்கவும் உதவியாக இருக்கும். நட்ஸ் மற்றும் தேன் கலவையானது மூளையின் ஆரோக்கியத்திற்கு நம்ப முடியாத பல அதிசய நன்மைகளை கொடுக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: ஸ்பெஷல் மஞ்சள் டீ, இதை குடித்த 10 நிமிஷத்தில் நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com