
மார்கழி மாதம் மச்சிக் குளிரும் என்பார்கள். தற்போது கார்த்திகை தொடங்குவதற்கு முன்னரே குளிரின் தாக்கம் வாட்டி வதைக்கிறது. குளிரை ரசிக்கலாம் பலருக்கு மத்தியில் இந்த குளிரால் பல்வேறு உடல் நல பாதிப்புகளையும் நாம் சந்திக்க நேரிடுகிறது. அதீத குளிரின் தாக்கத்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கிறது. இதனால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இதோடு சில வைரஸ் தொற்று பாதிப்புகளும் ஏற்படுகிறது. இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் குளிர்காலத்தில் சில உணவுகளைக் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். இதோ அவற்றில் சில இங்கே.
அதீத குளிரின் காரணமாக உடல் சோர்வை அதிகளவில் நாம் சந்திக்கிறோம். கொஞ்சம் தூங்கி எழுந்தாலே சரியாகிவிடும் என்று அலட்சியமாக விடும் போது தான் உடல் சோர்வு அதீத காய்ச்சலுக்கு வழிவகுக்கிறது. எனவே இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றால், வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த எலுமிச்சை, ஆரஞ்ச் போன்ற பழங்களில் ஜுஸ்களைப் பருகவும். குளிர்காலம் என்பதால் ஐஸ் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. உடலை நீரேற்றமாக வைத்திருப்பதோடு காய்ச்சல் பாதிப்புகளைத் தவிர்க்கவும் உதவுகிறது.
வைரஸ் காய்ச்சலின் போது இஞ்சி டீயை உட்கொள்வது நல்லது. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலின் இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு இஞ்சி டீ உதவியாக உள்ளது.
மேலும் படிக்க: Winter Diet: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க வேண்டுமா? சிம்பிள் டயட் டிப்ஸ்
வைரஸ் தொற்று பாதிப்பின் அறிகுறிகளில் முக்கியமானது தலைவலி, சளி மற்றும் இருமல். இவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க வேண்டும் என்றால் மஞ்சள் கலந்த பாலைக் கட்டாயம் குடிக்க வேண்டும். இதில் உள்ள குர்குமின் மற்றும் வலுவான அழற்சி எதிர்ப்பு பண்புகள் தொண்டையில் ஏற்படக்கூடிய புண்களை ஆற்றவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் ஒரு ஏழு நாட்களுக்குத் தொடர்ச்சியாக காய்ச்சல் பாதிப்பு இருக்கும். இதனால் சரியாக சாப்பிட முடியாது மற்றும் ஜீரண சக்தியும் குறைவாக இருக்கும். இந்த நேரத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளைக் கட்டாயம் சாப்பிட வேண்டும். குறிப்பாக கஞ்சி சாப்பிடுவது நல்லது.
மேலும் படிக்க: Winter Care: குளிர்காலத்தில் இஞ்சிக்கு இவ்வளவு மவுசா? பயன்படுத்திப்பாருங்கள் இந்த பாதிப்பெல்லாம் இனி ஏற்படாது!
குறிப்பாக காய்ச்சல் நேரத்தில் உடலின் நீர்ச்சத்துக்கள் சட்டென்று குறைய ஆரம்பிக்கும். காய்ச்சல் ஒருபுறம் அதிகமாக இருந்தாலும் இதனால் உடல் சோர்வை சந்திக்க நேரிடும். இந்நேரத்தில் கட்டாயம் இளநீர் குடிப்பது நல்லது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலுக்கு ஆற்றலை அளிப்பதோடு உடல் சோர்வை நீக்கவும் உதவியாக உள்ளது. மேலும் காய்ச்சலின் போது அதிக வியர்வையால் ஏற்படக்கூடிய நீர் இழப்பையும் மீட்டெடுக்க உதவுகிறது.
Image source - Free
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com