பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த அற்புதமான யோகா கலையின் பெருமையையும், நன்மைகளையும் உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாள் ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளன்று பெண்களுக்கு அதிகபட்ச நன்மைகளை தரக்கூடிய இரண்டு ஆசனங்களை பற்றி பார்க்க போகிறோம்.
திரைப் பிரபலங்கள் பதிவிடும் ஃபிட்னஸ் வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம். அவர்களுடைய பிட்னஸ் ரகசியங்களை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் நடிகை தமன்னாவும் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இன்றைய தினமான சர்வதேச யோகா நாளன்று, யோகாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிரபல நடிகையான தமன்னாவின் ஃபிட்னஸ் ரகசியத்தை தெரிந்து கொள்வோம். அவர் பயிற்சி செய்த யோகாசனங்கள் பின்வருமாறு…
இந்த பதிவும் உதவலாம்: எதிர்ப்பு சக்தி முதல் கருவுறுதல் வரை, அளவற்ற நன்மைகளை தரும் கோதுமைப் புல் சாறு!
சலபாசனம்
செய்வது எப்படி
- குப்புற படுத்து, உங்கள் கைகளை திறந்து உடலுக்கு அருகில் வைக்கவும்.
- கன்னத்தை முன்னோக்கி சாய்த்து தரையை தொடவும்.
- கண்களை மூடிக்கொண்டு உங்களால் முடிந்தவரை கால்களை மட்டும் மேல் நோக்கி தூக்க முயற்சி செய்யவும்.

நன்மைகள்
- தினமும் சலபாசனம் செய்து வந்தால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கலாம். இது எடை இழப்பிற்கான ஒரு சிறந்த ஆசனம் ஆகும்.
- வயிற்றை சுற்றி உள்ள கொழுப்பை குறைத்து மெல்லிய இடையழகு பெற சலபாசனம் செய்யலாம்.
- இந்தத் தோரணை தசைகளை வலுப்படுத்துவதோடு மட்டுமின்றி கைகள் கால்கள் தொடைகள் மற்றும் கால் கன்றுகளையும் வலுவாக வைத்திருக்கவும் உதவுகிறது.
- இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் தோரணை மேம்படும். இது முதுகு தண்டுவடத்தை வலிமையாக்குவதுடன், முதுகு வலியிலிருந்தும் நிவாரணம் பெற உதவுகிறது.
- சலபாசனம் வயிற்றுக் கொழுப்பை குறைக்கவும் வயறு சார்ந்த பிரச்சனைகளை அகற்றவும் உதவுகிறது. சிறந்த பலன்களைப் பெற இந்த ஆசனத்தை தினமும் பயிற்சி செய்யலாம்.
- இந்த ஆசனத்தை காலையில் மலம் கழித்த பிறகு செய்யவும் முக்கியமாக தளர்வாக ஆடைகளை அணியவும் புதிதாக பயிற்சி செய்பவர்கள் இதை மெதுவாக செய்ய தொடங்குவது நல்லது.
பூர்வோட்டனாசனம் (மேல்நோக்கி பிளாங்க் போஸ்)
செய்வது எப்படி?
- கால்களை நீட்டி நேராக நிமிர்ந்து உட்காரவும்.
- பின் உங்களுடைய உள்ளங்கைகளை இடுப்பை சுற்றி அல்லது தோள்பட்டைக்கு அருகில் தரையில் வைக்கவும். ஆனால் கைகளை வளைக்கக் கூடாது.
- இப்போது பின்னால் சாய்ந்த படி உங்கள் கைகளால் உடலின் எடையை ஆதரிக்கவும்.
- மூச்சை உள்ள இழுத்து இடுப்பை மேலே உயர்த்தவும். இவ்வாறு செய்யும் பொழுது முழு உடலையும் நேராக வைத்திருங்கள்.
- பின்னர் முழங்கால்களை நேராக வைத்து பாதங்கள் தரையில் தொடும்படி வைக்க வேண்டும்.
- மூச்சை வெளியேற்றும் போது மீண்டும் உட்கார்ந்த நிலைக்கு வந்து ஓய்வெடுக்கவும்.

நன்மைகள்
- மணிக்கட்டு, கைகள், தோள்கள், முதுகு மற்றும் முதுகுத்தண்டு பகுதியை பலப்படுத்தும்.
- இந்த ஆசனம் செய்வது கால்கள் மற்றும் இடுப்பு பகுதியை நீட்சி அடைய செய்கிறது.
- இந்த தோரணை சுவாச செயல்பாட்டை மேம்படுத்தும். மேலும் குடல் மற்றும் வயிற்று உறுப்புகளுக்கும் நன்மை பயக்கிறது.
- இது தைராய்டு சுரப்பியை தூண்டுகிறது. ஆகையால் பெண்களுக்கு இந்த ஆசனம் அதிகபட்ச நன்மைகளை கொடுக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: மாதுளை பழ சாறின் மிகச்சிறந்த 8 நன்மைகள்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source: instagram
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation