கோதுமைப் புல் சாறு ஏராளமான நன்மைகளை கொண்ட ஊட்டச்சத்து களஞ்சியமாகும். இது பல வைட்டமின்கள், அத்தியாவசிய அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கருவுறுதலை மேம்படுத்தவும், உடல் எடையை பராமரிக்கவும், கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கவும் உதவுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்று நோய்களை தடுக்கவும், கோதுமைப் புல் சாறு குடிக்கலாம். இதில் நிறைந்துள்ள முக்கியமான நொதிகள் மற்றும் அமினோ அமிலங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மாசுக்கள் மற்றும் புற்றுநோயின் விளைவுகளில் இருந்து உடலை பாதுகாக்கின்றன.
இந்த பதிவும் உதவலாம்: வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க, ஜாதிக்காயை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
கோதுமைப் புல் சாறு தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் செலினியம் எனும் கனிமத்தை கொண்டுள்ளது. இது உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. மேலும் கோதுமை புல் சாறில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அதிகப்படியான பசி மற்றும் உணவு உட்கொள்ளலை கட்டுப்படுத்துகின்றன. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் கோதுமை புல் சாறு குடிக்கலாம்.
கோதுமைப் புல் நிறைந்துள்ள என்சைம்கள் மற்றும் நார்ச்சத்து செரிமான மண்டலத்தை மேம்படுத்துகின்றன. இதன் மூலம் வயிற்று உப்புசம், வாயு, மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை தடுக்கலாம்.
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு பழக்க வழக்கங்களினால் உடலில் நச்சுக்கள் சேர தொடங்குகின்றன. இந்நிலையில் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற டீடாக்ஸ் செய்ய வேண்டியது அவசியம். கோதுமை புல்லில் உள்ள குளோரோபில் இரத்தம் மற்றும் கல்லீரலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகின்றன. செல்களை வலுப்படுத்தவும், ஹீமோகுளோபின் மற்றும் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் கோதுமைப்புல் சாறு குடிக்கலாம்.
முடி உதிர்தல், கரடுமுரடான முடி போன்ற பல கூந்தல் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து மீண்டு வர இந்த ஆரோக்கிய பானம் உதவும். இது ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் சிறந்த ஆதாரமாகும். இது வயது முதிர்வின் செயல்முறையை தாமதப்படுத்தவும், முடி நரைப்பதை தடுக்கவும் உதவும்
கோதுமை புல் சாறு குடிப்பது கருவுறுதலை மேம்படுத்த உதவும். இது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதுடன் பிறப்புறுப்பு பகுதிகளில் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது.
நார்ச்சத்து, குளோரோபில், ஆன்டி ஆக்ஸிடன்ட்களின், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ள கோதுமை புல் வீக்கத்தை குறைக்க உதவும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் இரத்தப்போக்கு மற்றும் வலியைக் குறைக்கவும், காயத்தை குணப்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும். கோதுமைப் புல் சாறு குடிப்பதன் மூலம் வாய்வழி அழற்சியையும் குறைக்கலாம்.
கோதுமைப் புல் சாறு உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள சத்துக்கள் உணவில் உள்ள கொலஸ்ட்ரால் உறிஞ்சுதலைக் குறைக்க உதவும்.
கோதுமைப் புல் சாறை குடிப்பது சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதை குடித்து வர சளி, ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற நோய்களின் அறிகுறிகளை குறைக்கலாம்.
கோதுமைப் புல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இருப்பினும் அலர்ஜி, செலியாக் நோய், குளூட்டன் உணர்திறன் அல்லது சிறுநீரக கற்களின் வரலாறு உள்ளவர்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பின் கோதுமை புல் சாறை எடுத்துக் கொள்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: மாதுளை பழ சாறின் மிகச்சிறந்த 8 நன்மைகள்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com