உடல் நலனும் யோகாவும் என்ற தொடரில் நாம் அடுத்ததாகப் பார்க்கப் போகும் ஆசனம் "சசங்காசனம்". இது ஆங்கிலத்தில் Rabbit Pose என்று சொல்லப்படுகிறது. அதனால் இந்த் ஆசனத்தை முயல் ஆசனம் எனப் புரிந்து கொள்ளலம்.
இந்த ஆசனத்தைத் தொடங்கும் போது வஜ்ராசனம் நிலையில் இருப்பது அவசியம். அதனால் முதலில் வஜ்ராசனத்தில் இருந்து ஆரம்பிக்கலாம். நேராக அமர்ந்து கால்களை நீட்டி அதன் பிறகு இரண்டு கால்களையும் மடித்து குதிகால்கள் மீது உட்கார முயற்சி செய்யுங்கள். இதை செய்யும் போது சிலருக்கு கடினமாக இருக்கும்.
அதனால் கால்களுக்கு அடியில் தலையணை வைத்துக் கொள்ளவும் அல்லது குதிகால்கள் மீது தலையணை போட்டுவிட்டு உட்காரவும். வஞ்ராசனம் செய்யும் போது இடுப்பு பகுதியை மேலே தூக்க குடாது. உங்களுக்கு தொப்பை கொழுப்பு அதிகமாக இருந்தால் தலையைக் கீழே கொண்டு வருவதில் சிரமம் இருக்கும். எனவே உள்ளங்கைகளை மடித்து ஒன்றின் மேல் ஒன்றை வைத்து தலையை கைகள் மீது வைக்கவும்.
உங்களுக்குத் தொப்பைக் கொழுப்பைக் குறைக்க வேண்டுமானால் வஞ்ராசன நிலையில் இருந்து கொண்டு இருகைகளையும் நன்றாக மேலே உயர்த்தி தரைக்கு கொண்டு வாருங்கள். அதே போல பத்து முறை செய்யுங்கள்.
ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டு வஞ்ராசனம் நிலையில் இருந்து சசங்காசனம் செய்ய ஆரம்பிக்கலாம். இரண்டு கைகளையும் குதிகால்களில் வைத்து மார்புப் பகுதியை நன்கு விரித்து தலையை கீழே கொண்டு வாருங்கள். தலையைக் கீழே வைக்கும் போது முட்டியை தொடும் அளவிற்கு கொண்டு வாருங்கள்.
மேலும் படிங்க கர்ப்பப்பையை வலுவாக்க உத்தான பாதாசனம் செய்யுங்கள்
அடுத்ததாக இடுப்புப் பகுதியை மேலே தூக்கி தலையை எந்த இடையூறுமின்றி தரையில் அழுத்தவும். ஆழ்ந்த முச்சை உள்ளே இழுத்து வெளியே விடலாம். நீங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும் போது தலை சுற்றுவது போல் இருக்கும். எனவே இயல்பு நிலைக்குத் திரும்பும் போது கண்களை மூடிக் கொண்டே தலையை உயர்த்தினால் தலை சுற்றாது.
இந்த ஆசனத்தை வேறு மாதிரியாகவும் செய்யலாம். வஞ்சாரசனம் நிலையில் இருந்தபடி விரல் நுனிகளை தரையில் அழுத்தி மார்புப் பகுதியை நன்கு விரித்து தலையை பின்நோக்கி கொண்டு செல்லவும். இயல்பு நிலைக்குத் திரும்பி ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுங்கள்.
உச்சந்தலையை கீழே கொண்டுசென்று அழுத்துவதால் தலையில் இரத்த ஓட்டம் அதிகமாகும். தலையை தரையில் அழுத்தும் போது வலி ஏற்படுவதாக இருந்தால் துண்டு அல்லது தலையணை போட்டு தலையைத் தரையில் அழுத்தலாம்.
இந்த ஆசனத்தைச் சரியாகச் செய்து வந்தால் கழுத்து வலி ஏற்படாது. உச்சந்தலையில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதால் உங்கள் முகம் பொலிவு பெரும், தலைமுடி கொட்டாது.
மேலும் படிங்க முதுகுத் தண்டை வலுப்படுத்தும் மர்ஜாரியாசனம்
உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் பத்து நிமிடங்கள் ஒதுக்கி இந்த ஆசனங்களை செய்யலாம்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com