ஆண்களுக்கு மட்டுமல்ல இன்றைய காலத்துப் பெண்களுக்கும் இளம் வயதிலேயே இளநரை பெரும் பிரச்சனையாக உள்ளது. அழகு நிலையங்களுக்குச் சென்று கலரிங் செய்வது அல்லது கடைகளில் விற்பனையாகும் ஹேர் டைகளை வாங்கி வீட்டிலேயே கலர் செல்வது போன்ற தற்காலிகத் தீர்வைத் தான் மக்கள் அதிகம் மேற்கொள்கின்றனர். இவ்வாறு அடிக்கடி இராசாயனம் அதிகம் கலந்த ஹேர் டைகளைப் பயன்படுத்தும் போது உடலுக்கு பல பிரச்சனைகளுக்கு ஏற்படுத்தும். இவற்றைத் தடுக்கவும் இயற்கையான முறையில் தலைமுடியைக் கருமையாக்க வேண்டும் என்று நினைத்தால் வெற்றிலையைப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். எப்படி என்பது குறித்த முழு விபரங்கள் இங்கே..
மேலும் படிக்க: பளபளப்பான சருமத்திற்கு பெரிதும் உதவும் பால்; இந்த டிப்ஸை நோட் பண்ணுங்க மக்களே
வெற்றிலையில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, பொட்டாசியம், தியாமின், நியாசின் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிப்பதோடு இளம் வயதில் ஏற்படக்கூடிய தலைமுடி நரைக்குத் தீர்வு காண்கிறது.
மேலும் படிக்க: முகம் மற்றும் கூந்தல் பொலிவிற்கான ரகசியம் ஏபிசி ஐஸ் க்யூப்கள் தான் ; எப்படி தெரியுமா?
ஒரு பாத்திரத்தில் 10 முதல் 15 வெற்றிலைகளைப் போட்டு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்து வந்ததும் இதன் சாறை வடிகட்டி ஆறிய பின்னதாக குளிர வைக்கவும். இதையடுத்து உச்சந்தலையில் இருந்து தலைமுடியின் நுனி வேர் தேய்த்து தலைக்கு அலசி வரலாம். இதில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் தலைமுடியின் ஏற்படும் பிரச்சனைகளைச் சரி செய்கிறது.
வெற்றிலையைப் பயன்படுத்தி எளிமையான முறையில் எண்ணெய் தயாரித்து உபயோகிக்கலாம். வெற்றிலை எண்ணெய் தயாரிப்பதற்கு முதலில் 15 வெற்றிலைகளை மிதமான தீயில் வைத்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதனுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இலை கொஞ்சம் கருப்பாக மாறியதும் இந்த எண்ணெய்யை வடிகட்டி உபயோகிக்கலாம். இதனுடன் செம்பருத்தி இலைகள், கறிவேப்பிலையையும் சேர்த்துக்கொள்வது நல்லது.
Image Credit - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com