herzindagi
walking benefits for weight loss right way

Weight Loss Walking: நடைப்பயிற்சியை இப்படி சரியாக செய்தால் எடை தானாக குறையும்!

உடல் எடையை குறைக்க சிறந்த வழி நடை பயிற்சி செய்வது, ஆனால் இதை சரியான முறையில் செய்தால் மட்டுமே இதற்கான முழு பலனையும் பெற முடியும்…
Editorial
Updated:- 2023-08-18, 22:23 IST

உடல் எடையை குறைக்க பலரும் பலவிதமான முயற்சிகளை எடுக்கிறார்கள். உணவு கட்டுப்பாடு முதல் கடுமையான உடற்பயிற்சி வரை உடல் எடையை குறைக்க தங்களால் முடிந்த பலவற்றை செய்கிறார்கள். உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் பொழுது உங்கள் உடலைப் பற்றி முதலில் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். பின்னர் உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சி மற்றும் உணவை தேர்வு செய்ய வேண்டும். இப்படி உங்களுக்கு பொருந்தக்கூடிய விஷயங்களை செய்தால் நிச்சயமாக சிறந்த விளைவுகளை பெற முடியும். 

ஒவ்வொருவருடைய உடல் வகையும் வித்தியாசமானது. மற்றவருக்கு பொருந்தக்கூடிய ஒரு உடற்பயிற்சியும் உணவு உங்களுக்கு பொருந்தாமல் போகலாம். எனவே உடல் பருமனை குறைக்க சரியான ஆலோசனையை பெற வேண்டியது அவசியம். கடுமையான பயிற்சிகளுக்கும், உணவு திட்டத்திற்கும் நிச்சயமாக ஒரு நிபுணரை அணுக வேண்டம். ஆனால் சுலபமாக செய்யக்கூடிய இந்த நடைப்பயிற்சியை உங்களால் எளிதாக செய்திட முடியும். நடைப்பயிற்சி செய்வதற்கான சரியான முறையை ஊட்டச்சத்து நிபுணரான சிம்ரன் கௌர் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.

 

இந்த பதிவும் உதவலாம்: இரும்பு சத்து குறைபாடு பற்றிய கவலையை விடுங்க, காலையில் இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க!

 

நடைப்பயிற்சி செய்யும் முறை

walking benefits for weight loss by expert

உடல் எடையை குறைக்க நடைப்பயிற்சி நிச்சயம் உதவும். ஆனால் நடைப்பயிற்சியால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியாது. நடைப்பயிற்சியுடன் சேர்த்து ஆரோக்கியமான உணவு மற்றும் உங்களுக்கு ஏற்ற சில உடற்பயிற்சியையும் செய்ய வேண்டும்.

  • உடல் பருமனை குறைக்க, ஒரு நாளைக்கு குறைந்தது 4000-5000 ஸ்டெப்ஸ் நடக்க முயற்சி செய்யலாம்.
  • சிறந்த பலன்களைப் பெற விறுவிறுப்பான நடைப்பயிற்சியை மேற்கொள்ளவும். அதாவது நீங்கள் மிக வேகமாகவோ அல்லது மிக மெதுவாகவோ நடக்கக்கூடாது.
  • நடக்கும் பொழுது குறிப்பிட்ட வேகத்தில் நடப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • நிபுணரின் கருத்துப்படி, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஒரு வாரத்திற்கு சுமார் 150 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால் சிறந்த பலன்களை காணலாம்.
  • உங்களுடைய எடை இழப்பு, இலக்கை பொறுத்து உங்களுடைய நடைபயிற்சியின் நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
  • காலை அல்லது மாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்யலாம். உங்கள் வசதிக்கு ஏற்ப இரண்டு நேரங்களிலும் செய்யலாம் அல்லது ஏதேனும் ஒரு நேரத்தில் நடைப்பயிற்சி செய்யலாம்.

walking benefits for weight loss expert tips

  • உணவிற்குப் பிறகு நடைப்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் முக்கியம். இது செரிமானத்தை மேம்படுத்துவதுடன் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
  • நடைப்பயிற்சியை செய்து வந்தால் மன அழுத்தம் நீங்கும். இதனால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.

 

இந்த பதிவும் உதவலாம்: பல உடல் நல பிரச்சனைகளை விரட்ட, இந்த ஒரே ஒரு பயிற்சியை செய்தால் போதும்!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com