ஹீமோகுளோபின் எனும் புரவிதமானது உடலின் உள் உறுப்புகளுக்கு இரத்தத்தை கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஹீமோகுளோபின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து மிகவும்முக்கியம். இரத்த சோகை அதாவது இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் பொழுது உடலில் ஹீமோகுளோபின் அளவுகள் குறையலாம். இதனால் சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, தலைவலி, மார்பு வலி, சீரற்ற இதயத்துடிப்பு, மயக்கம் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பல அறிகுறிகளை உணரலாம்.
இரும்புச்சத்து குறைபாட்டின் இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள். உணவில் ஒரு சில மாற்றங்களை செய்வதன் மூலம் இதை சரி செய்ய முடியும். இதற்கு உதவக் கூடிய 5 உணவுகளை உணவியல் நிபுணரான ராதிகா கோயில் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: குழந்தையின் உடல் எடை அதிகரிக்க, ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரை செய்யும் ஹோம்மேட் பவுடர்!
இது உடலில் இரும்புச் சத்தை அதிகரிக்க செய்கிறது. இன்றைய வாழ்க்கை சூழலில் பெரும்பாலான பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இரத்த பற்றாக்குறையை பூர்த்தி செய்ய காலையில் இரண்டு உலர்ந்த அத்திப்பழங்களை சாப்பிடலாம். மேலும் இதில் உள்ள கால்சியம் மற்றும் நார்ச்சத்து எலும்புகள் மற்றும் செரிமானத்திற்கு நன்மை தருகின்றன.
இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் பேரிச்சம்பழங்களை தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் இதில் உள்ள இரும்புச்சத்து வைட்டமின்கள் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகின்றன. சிறந்த பலன்களைப் பெற காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் பேரிச்சம் பழங்களை சாப்பிடவும்.
உலர் திராட்சை மற்றும் பாதாம் பருப்பில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது. பாதாமில் கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. இரும்புச்சத்து குறைபாட்டை போக்க பாதாம் மற்றும் உலர் திராட்சையை இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
இதில் இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் நிறைந்துள்ளது. சாலியா விதைகளை சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அளவுகள் அதிகரிப்பதோடு மட்டுமின்றி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் வலுப்பெறும்.
இந்த பதிவும் உதவலாம்: தொப்பையை குறைக்க உதவும் 4 நட்ஸ், ஒருமுறை இப்படி சாப்பிட்டு பாருங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com