இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கங்களால் பல உடல் நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இவற்றை தவிர்ப்பதில் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை சூழலில் உடற்பயிற்சி செய்வதற்கான தனியாக நேரம் ஒதுக்க முடியாமல் பலரும் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக பெண்களாகிய நமக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று எண்ணம் இருந்தாலும், வீடு, தொழில் போன்ற வேலைகளில் கவனம் செலுத்தும் பொழுது நம்மை கவனித்துக் கொள்ள மறந்துவிடுகிறோம். இனி நேரமில்லை என்று நீங்கள் கவலைப்படவேண்டிய அவசியமே இல்லை. தூங்க சொல்வதற்கு முன் இந்த ஒரு பயிற்சியை செய்தால் போதும், இதன் மூலம் பல உடல் நல பிரச்சனைகளை தடுப்பதோடு மட்டுமின்றி நீங்கள் அழகாகவும் மாறலாம். இந்த பயிற்சி குறித்த தகவல்களை யோகா நிபுணரான ரூபிகா ராணா அவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: குழந்தையின் உடல் எடை அதிகரிக்க, ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரை செய்யும் ஹோம்மேட் பவுடர்!
இந்த பயிற்சியை செய்வது முதுகுத்தண்டில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கிறது. இதைத் தவிர இதை தொடர்ந்து செய்வதன் மூலம் முதுகின் தசைகள் தளர்த்தப்படுகின்றன. இதன் மூலம் முதுகு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
கண்களை மூடிக்கொண்டு 60 வினாடிகளுக்கு இந்த பயிற்சியை செய்து வந்தால் உடலையும் மனதையும் ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்ளலாம். இது முழு உடலுக்கும் மசாஜ் செய்த ஒரு உணர்வை கொடுக்கிறது. மேலும் தலையை தொங்கவிடுவது மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் மன அழுத்தம் நீங்கி மூளையின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.
தலைவலி மற்றும் ஒற்றைத்தலைவலி பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த பயிற்சி சிறந்த பலன்களை கொடுக்கும்.
இந்த பயிற்சியை செய்யும் பொழுது தலை மற்றும் முகத்தை நோக்கி ஆக்ஸிஜன் நிறைந்த இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் முகச்சுறுக்கங்கள் நீங்கி சருமம் பளபளப்பாக மாறும். மேலும் உச்சந்தலையில் ஏற்படும் சீரான இரத்த ஓட்டத்தால் தலைமுடியின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
எந்த ஒரு புதிய உடற்பயிற்சியையும் தொடங்குவதற்கு முன் யோகா அல்லது உடற்பயிற்சி நிபுணரை அணுக வேண்டும். கர்ப்பிணிகள், இருதய நோய், கிளௌகோமா மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த பயிற்சியை தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: தொப்பையை குறைக்க உதவும் 4 நட்ஸ், ஒருமுறை இப்படி சாப்பிட்டு பாருங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com