herzindagi
paryankasana steps

Paryankasana Benefits : நல்ல குரல் வளத்திற்கு தினமும் பர்யங்காசனம் செய்யுங்கள்

குரல் வளத்தை பெருக்கவும், தைராய்டு உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து விடுபடவும் தினமும் பர்யங்காசனம் செய்வது நல்லது.
Editorial
Updated:- 2024-03-04, 06:10 IST

உடல் நலனும் யோகாவும் என்ற தொடரில் நாம் அடுத்து பார்க்கப் போகும் ஆசனம் பர்யங்காசனம். பர்யங்கா என்றால் சோபா அல்லது படுக்கை என அர்த்தம். இந்த ஆசனம் முதுகெலும்புக்கு நல்ல பயன்களை தரக்கூடியது. ஆங்கிலத்தில் இது Couch pose என்று சொல்லப்படுகிறது. அதாவது முதுகு பகுதியை வளைக்கும் தோரணை என்று கூறலாம். இந்த ஆசனத்தை மூட்டுவலி, கணுக்காலில் காயம் இருக்கும் நபர்கள் தவிர்த்து விட வேண்டும். அதே போல கீழ் முதுகில் அதிக விறைப்பு மற்றும் கடுமையான முதுகுவலி இருந்தால் இந்த ஆசனம் பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். தற்போது பர்யங்காசனம் எப்படி செய்வது என பார்க்கலாம்.

  • தரையில் உட்கார்ந்து கால்களை நேராக நீட்டவும். பர்யங்காசனத்தை முறைப்படி செய்ய வேண்டும் என்றால் அதற்கு வீராசனம் தெரிந்து இருப்பது அவசியம்.
  • கால்களை மடக்கவும் ஆனால் வஜ்ராசனம் போல குதிகால்களில் உட்கார கூடாது. கால் மூட்டுகள் ஒட்டி இருக்க வேண்டும்.
  • வலது கையை கொண்டு வலது காலையும் இடது கையை கொண்டு இடது காலையும் பிடிக்கவும். சிரமமாக இருக்கும் ஆனால் அப்படியே பின்னே செல்லுங்கள்.
  • முழங்கைகளை தரையில் வைத்து பொறுமையாகப் பின்னே செல்லுங்கள். மார்பு பகுதியையும் வயிற்று பகுதியையும் முன்னே கொண்டு வந்து தலையை பின்னே தள்ளி தரையில் வைக்கவும்.
  • இப்போது உங்கள் கால்களின் மணிக்கட்டுகளை கைகளால் பிடித்திருப்பீர்கள். 
  • அடுத்ததாக இடது கையால் வலது முழுங்கையையும் வலது கையால் இடது முழங்கையையும் பிடித்தபடி கைகளை தலைக்கு பின்னே கொண்டு செல்லவும்.
  • இதே நிலையில் பத்து விநாடிகளுக்கு இருக்கவும். மீண்டும் மணிகட்டுகளுக்கு கைகளை கொண்டு வந்த பிறகு பொறுமையாக எழுந்திருக்கவும்.
  • இதற்கு தளர்வு பயிற்சியாக வீராசனம் நிலையில் இருந்து அப்படியே தலையை முன்னே கொண்டு செல்லவும். கைகள் பின்னே இருக்க வேண்டும்.
  • இந்த ஆசனத்தை செய்யும் போது முதுகு பகுதியில் வலி ஏற்படாமல் இருக்க தலையணையில் உட்கார்ந்து முதுகை அதன் மீது வைக்கலாம். முதுகில் சற்று வலி இருக்காது.

மேலும் படிங்க உச்சி முதல் பாதம் வரை… ஒட்டுமொத்த உடல்நலத்திற்கு பலனளிக்கும் வீரபத்ராசனம்

பர்யங்காசனம் பயன்கள்

  • இது தைராய்டு மற்றும் பாராதைராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் முன்புற கழுத்து பகுதி, முதுகெலும்பு அதிகமாக நீட்டப்படுகிறது.
  • கழுத்து பகுதி முழுவதுமாக நீட்டிக்கப்படுவதால் குரல் நாண்கள், தொண்டை பகுதிகளுக்கு நன்மை பயக்கும்
  • இது அடிவயிற்று உறுப்புகளை தீவிரமாக இயக்குகிறது.
  • இந்த ஆசனத்தின் போது மார்பு மற்றும் நுரையீரல் பகுதி முழுமையாக விரிவடைகிறது. இதனால் ஆக்ஸிஜன் உட்கொள்ளல் அதிகரிக்கிறது.

மேலும் படிங்க தலைமுடி உதிர்வதை நிறுத்துவதற்கு செய்ய வேண்டிய யோகாசனங்கள்

இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com