உடல் நலனும் யோகாவும் என்ற தொடரில் நாம் அடுத்ததாகப் பார்க்கப் போகும் ஆசனம் வீரபத்ராசனம். இந்த ஆசனத்திலேயே மூன்று நிலைகள் இருக்கின்றன. வீரபத்ராசனம் ஆங்கிலத்தில் இது Warrior Pose என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் திரிகோணாசனம் செய்வது போலவே இருக்கும். எனவே பயிற்சி இன்றி நேரடியாக வீரபத்ராசனம் செய்யலாம்.
![virbhadrasana for strengthening arms]()
- முதலில் நேராக நின்று இரண்டு கால்களையும் அகற்றி வைக்கவும். இப்போது கைகளை இடுப்பில் வைத்து வலது காலை வலது பக்கமாக 90 டிகிரிக்கு திருப்பவும்.
- இடது காலையும் வலது பக்கமாக திருப்பவும். அடுத்ததாக இடுப்பையும் நன்றாக வலது கால் திரும்பியிருக்கும் திசைக்கு மாறி நிமிர்ந்து பார்க்கவும்.
- இதன் பிறகு வலது காலை மட்டும் பாதியாக மடக்கவும். இடது குதிகாலை தூக்க கூடாது. இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி நமஸ்கார முத்ராவில் வைக்கவும்.
- பத்து விநாடிகளுக்கு இதே நிலையில் இருக்கவும். இப்போது கைகளை இறக்கிவிட்டு கால்களை இயல்பு நிலைக்கு கொண்டு வாருங்கள். இந்த ஆசனத்தை செய்யும் போது இடது காலின் முட்டி மடங்க கூடாது.
- உயரம் அதிகமான நபராக இருந்தால் கால்களுக்கு இடையே இரண்டு அடி இடைவெளி இருக்க வேண்டும். உயரம் கம்மியாக இருந்தால் ஒன்றரை அடி இடைவெளி தேவை.
- இப்போது எதிர்திசையில் அதாவது இடது காலை இடது பக்கமாக 90 டிகிரிக்கு திருப்பவும்.
- வலது காலையும் இடது பக்கமாக திருப்பவும். அடுத்ததாக இடுப்பையும் நன்றாக இடது கால் திரும்பியிருக்கும் திசைக்கு மாறி நிமிர்ந்து பார்க்கவும்.
- இதன் பிறகு இடது காலை மட்டும் பாதியாக மடக்கவும். வலது குதிகாலை தூக்க கூடாது. இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி நமஸ்கார முத்ராவில் வைக்கவும்.
- பத்து விநாடிகளுக்கு இதே நிலையில் இருக்கவும்.
- இந்த ஆசனம் செய்யும் போது தோள்பட்டை வலிக்கிறது என்றால் நமஸ்கார முத்ராவை மார்பு அளவில் அவைக்கலாம்.
- குதிகால் தரையில் ஒட்டவில்லை என்றால் சுவற்றின் அருகே நின்று குதிகாலை சுவற்றில் வைக்கவும். பொதுவாகவே ஆசனங்களை எப்படி தொடங்குகிறோமோ முடிக்கும் போது அதே வழியில் இயல்பு நிலைக்கு வர வேண்டும்.
மேலும் படிங்க தலைமுடி உதிர்வதை நிறுத்துவதற்கு செய்ய வேண்டிய யோகாசனங்கள்
பயன்கள்
- இந்த ஆசனம் தோள், கைகள், தொடைகள் மற்றும் முதுகின் தசைகளுக்கு வலிமையை வழங்கும்.
- ஒரு சில நபர்களை வைத்து சோதனை செய்ததில் வீரபத்ராசனத்தை ஆறு வாரங்களுக்கு தினமும் ஐந்து நிமிடம் பயிற்சி செய்த போது கீல்வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நல்ல பலங்களை கொடுத்துள்ளது.
- வீரபத்ராசனம் தசைக்கூட்டு பிரச்சினைகள் உள்ளவர்களுக்கும் உதவக்கூடும். பலவீனமான தொடை தசைநாரில் மீண்டும் மீண்டும் காயங்கள் ஏற்படாமல் இருக்க வீரபத்ராசனம் செய்வது நல்லது.
- குறைந்த இரத்த அழுத்தம் உடையவர்களுக்கு வீரபத்ராசனம் பயனுள்ளதாக இருக்கும்.
- முட்டி, தோள்பட்டை, முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை செய்வதர்கள் வீரபத்ராசனத்தை தவிர்க்கலாம்.
மேலும் படிங்க நீரிழிவு நோயாளிகளுக்கு பயன் தரும் கோமுகாசனம்
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.