தலைமுடி உதிர்வதை நிறுத்துவதற்கு செய்ய வேண்டிய யோகாசனங்கள்

முடி உதிர்வை தடுப்பதற்கும், குறைப்பதற்கும் பிரதானமாக எட்டு ஆசனங்கள் உள்ளன. இவற்றை தினமும் பயிற்சி செய்தால் முடி கொட்டும் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்

yoga poses to fight hair problems

யோகாவால் வழுக்கை விழுவதை நேரடியாகத் தடுக்க முடியாது என்றாலும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்த முடியும். இது மறைமுகமாக ஆரோக்கியமான முடிக்கு பங்களிக்கும். முடி உதிர்தலை பாதிக்கும் காரணிகளான உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மன அழுத்தத்தை குறைக்கும் யோகாசனங்களை செய்வதால் முதி உதிர்வை கட்டுப்படுத்தலாம்.

அதோ முக ஸ்வனாசனம்

இந்த ஆசனம் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் முடியின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. இது மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கிறது. மன அழுத்தம் குறைவதன் விளைவாக முடி உதிர்வதை தடுக்கலாம்.

சிரசாசனம்

சிரசாசனம் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அதேநேரம் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது முடி உதிர்வுடன் தொடர்புடைய மன அழுத்தம் மற்றும் பதட்டத்தையும் குறைக்கிறது.

பாதஹஸ்தாசனம்

இந்த ஆசனம் உச்சந்தலையில் இரத்த சுழற்சியை மேம்படுத்துகிறது. தலையில் பதற்றத்தை குறைப்பதோடு தளர்வும் அளிக்கிறது. முடி உதிர்தலுக்கு காரணிகளான மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை பாதஹஸ்தாசனம் போக்கும்.

சர்வாங்காசனம்

சர்வாங்காசனம் தைராய்டு சுரப்பியைத் தூண்டுகிறது. இதனால் ஹார்மோன் அளவுகள் சீராகின்றன. ஹார்மோன் சமநிலையின்மை முடி உதிர்தலுக்கு பங்களிக்கும். எனவே சர்வாங்காசனம் மூலம் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவது வழுக்கையைத் தடுக்க உதவும்.

மேலும் படிங்கநீரிழிவு நோயாளிகளுக்கு பயன் தரும் கோமுகாசனம்

பாலாசனம்

குழந்தை நிலை எனும் பாலாசனம் உடலையும் மனதையும் தளர்த்துகிறது. முடி உதிர்வைத் தடுக்க மன அழுத்தத்தைக் குறைப்பது அவசியம். இது உச்சந்தலையின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

விபரீத கரணி

இந்த ஆசனம் நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் முடி உதிர்வு தடுக்கப்படுகிறது. இது உச்சந்தலையை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும்.

cobra pose

புஜங்காசனம்

கழுத்து மற்றும் மார்பு பகுதியை நீட்டி செய்யும் புஜங்காசனம் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் மயிர்க்கால்களைத் தூண்டுகிறது. இது முதுகின் தசைகளை பலப்படுத்துகிறது.

மேலும் படிங்கஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு தரும் மாலாசனம்

அனுலோம் விலோம் பிராணாயாமம்

இந்த சுவாச நுட்பம் மனதை அமைதிப்படுத்துகிறது மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது. இது முடி உதிர்வை தடுக்க உதவும். இந்த மூச்சு பயிற்சி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

யோகாசனங்களை அன்றாட பயிற்சி முறைகளில் இணைத்துக்கொள்வது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கும், ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும். இவை அனைத்தும் ஆரோக்கியமான முடிக்கு பங்களிக்கின்றன. மரபியல், ஹார்மோன் பிரச்சினை மற்றும் மருத்துவ காரணிகள் முடி உதிர்வு மற்றும் வழுக்கை தலைக்கு பங்களிக்கும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். யோகாவை உடல் ஆரோக்கியத்தின் ஒரு பகுதியாக பார்ப்பது நல்லது.

இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP