
உடல் நலனும் யோகாவும் என்ற தொடரில் நாம் அடுத்ததாக பார்க்கப் போகும் ஆசனம் ஹனுமன் ஆசனம். இது ஆங்கிலத்தில் Monkey pose என்று அழைக்கப்படுகிறது. ஹனுமனாசனம் செய்வதற்கு மிகுந்த பொறுமையும் கவனமும் தேவை. நன்கு பயிற்சி செய்தால் மட்டுமே இந்த ஆசனத்தை செய்ய முடியும்.
இந்த ஆசனத்திற்கு இரண்டு தளர்வு பயிற்சிகள் உள்ளன. முதலில் கோ கோ விளையாட்டில் வீரர்கள் உட்காருவது போல உட்கார்ந்து வலது காலை கொஞ்சம் முன்னே வைத்து இடது காலை தூரமாக வைக்கவும். அதன் பிறகு வலது காலை நன்கு மடக்கவும்.
அடுத்ததாக கைகளை வலது மூட்டில் வைத்து அழுத்தி முன்னும் பின்னும் செல்லவும். பத்து முறை இதை செய்த பிறகு கால்களை மாற்றி இதே போல செய்யவும். தற்போது வஜ்ராசனம் நிலைக்கு வந்து ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடலாம்.

பள்ளிக்கூடங்களில் முட்டி போடுவது போல நின்று இடது காலை அகற்றாமல் வலது காலை தூரமாக நீட்டி கைகளை அதன் அருகே வைக்கவும். பத்து விநாடிகளுக்கு இதே நிலையில் இருந்துவிட்டு இடது காலுக்கு மாறவும். ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடலாம்.
மேலும் படிங்க உடலில் உள்ள ஏழு சக்கரங்களுக்கும் சக்தியூட்டும் சக்கராசனம்
மேலும் படிங்க நல்ல குரல் வளத்திற்கு தினமும் பர்யங்காசனம் செய்யுங்கள்
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com