உடலில் உள்ள ஏழு சக்கரங்களுக்கும் சக்தியூட்டும் சக்கராசனம்

உடலில் உள்ள மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம் உட்பட ஏழு சக்கரங்களை தூண்டி ஆற்றலை அதிகரித்திட தினமும் சக்கராசனம் செய்யுங்கள்.

how to practise chakrasana

உடல் நலனும் யோகாவும் என்ற தொடரில் அடுத்ததாக நாம் பார்க்கப் போகும் ஆசனம் சக்ராசனம். இதன் பெயரிலேயே புரிந்திருக்கும் ஆசனத்தை இறுதியில் உங்கள் உடல் சக்கரம் போல வளைந்திருக்கும். ஆங்கிலத்தில் இது Wheel pose என்றழைக்கப்படுகிறது. பிற ஆசனங்களை விட இந்த ஆசனம் சற்று கடினமாக இருக்கும். எனவே பொறுமையாக செய்யுங்கள்.

chakrasana for beginners

  • முதலில் தரையில் படுத்துக் கொண்டு கால்களை பாதியாக மடக்கவும். இரண்டு கால்களையும் இடுப்பிற்கு நெறுக்கமாக கொண்டு வரவும்.
  • அடுத்ததாக கைகள் இரண்டையும் திருப்பி தோள்பட்டையில் பக்கத்தில் வைக்கவும்.
  • தற்போது இரண்டு கால்களையும், இரண்டு கைகளையும் உயர்த்துங்கள். இடுப்பு பகுதியை மேலே தூக்க பின் இருக்கும் கைகளுக்கு அழுத்தம் கொடுங்கள்.
  • இதே நிலையில் பத்து விநாடிகளுக்கு இருக்கவும். இறங்கும் போது தலையை கீழே வைத்து விட்டு இடுப்பை இறக்கவும்.
  • ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடலாம்.
  • சக்ராசனம் செய்த பிறகு நிச்சயம் தளர்வு ஆசனம் செய்வது அவசியம். சக்ராசனத்தில் முதுகு பகுதி பின்பக்கமாக வளைந்து இருந்தது. அதனால் இப்போது முதுகை முன் பக்கமாக வளைக்க வேண்டும்.
  • தரையில் உட்கார்ந்து கால்களை நீட்டி கைகள் இரண்டையும் உயர்த்தி கால் விரல்களை பிடிக்கவும். இதே நிலையில் பத்து விநாடிகளுக்கு இருக்கவும்.
  • இயல்பு நிலைக்கு திரும்பி ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடலாம். தளர்வு ஆசனமும் கடினமாக பத்மாசனம் நிலையில் உட்கார்ந்து மார்பு பகுதியை விரித்து தலையை முன்னே சாய்க்கவும்.

சக்ராசனம் பயன்கள்

  • இந்த ஆசனம் செய்யும் போது உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் தூண்டப்பட்டு ஆற்றல் கிடைக்கிறது. அதாவது சக்ராசனம் நரம்பு மண்டலத்தைத் தூண்டி ஆற்றல் அளவை அதிகரிக்கிறது.
  • சக்ராசனம் மாதவிடாய் அசௌகரியங்களை போக்க உதவும். அதேபோல மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வை போக்க உதவுகிறது.
  • நாம் அனைவருமே இளமையாக இருக்க விரும்புகிறோம். சக்ராசனத்தை தவறாமல் பயிற்சி செய்வது முதுமையைத் தாமதப்படுத்த உதவும், மேலும் நீங்கள் புத்துணர்ச்சியுடனும் இளமையாகவும் தோன்றலாம்.
  • ஒவ்வொரு நபரும் இடுப்பு மற்றும் வயிற்று கொழுப்பை குறைத்து மெல்லிய தோற்றத்திற்கு ஆசைப்படுகிறோம். இதற்கும் சக்ராசனம் உதவுகிறது.

தவிர்க்க வேண்டியவை

  • இதயக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் சக்ராசனம் செய்வது பாதுகாப்பானது அல்ல.
  • கர்ப்பிணிகள் சக்ராசனம் பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது வயிற்று தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது மற்றும் உடலின் நடுப்பகுதியில் இரத்த ஓட்டத்தை குறைக்கலாம். வயிற்றில் வளரும் கருவுக்கு இது நல்லதல்ல.

இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP