herzindagi
Gomukhasana Benefits

Gomukhasana Benefits : நீரிழிவு நோயாளிகளுக்கு பயன் தரும் கோமுகாசனம்

<p style="text-align: justify;">நீரிழிவு நோயாளிகள் தினமும் பத்து நிமிடங்களுக்கு கோமுகாசனம் செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்&nbsp;
Editorial
Updated:- 2024-02-28, 17:50 IST

உடல் நலனும் யோகாவும் என்ற தொடரில் நாம் அடுத்து பார்க்கப் போகும் ஆசனம் கோமுகாசனம். பெயரை படித்தவுடனேயே உங்களுக்கு புரிந்து இருக்கும். இந்த ஆசனம் மாட்டின் முகத்தை குறிக்கிறது. ஆங்கிலத்தில் Cow face pose என்று அழைக்கின்றனர். இந்த ஆசனத்தை நிறைவு செய்யும் போது மாட்டின் முகம் போல உங்கள் தோற்றம் இருக்கும்.

  • முதலில் பத்மாசனம் நிலையில் இருந்து அமர்ந்த பிறகு இடது காலை மடக்கி உட்காரவும். இடது காலி முட்டி நேராக இருக்க வேண்டும்.
  • வலது காலை இடது காலின் மீது தூக்கி வைக்கவும். இப்படி செய்யும் போது இரண்டு கால்களும் நேர்கோட்டில் இருப்பது அவசியம்.
  • இரண்டு கால்களும் பின் நோக்கி இருக்க வேண்டும். கைகளை மேலே உயர்த்தி ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுக்கலாம்.
  • இப்போது மூச்சை வெளியே விட்டு வலது கையை தலையின் பின்னே மடக்கவும். அதாவது வலது கையை இடது கையின் தோள்பட்டைக்கு கீழும் இடது கையை வலது கையின் தோள்பட்டைக்கு கீழும் வைக்கவும்.
  • முகமும், முதுகு தண்டும் நேராக இருக்க வேண்டும். இதே நிலையில் பத்து விநாடிகளுக்கு இருக்கலாம்.
  • கைளை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடலாம்.
  • இப்போது வலது காலை மடக்கி உட்காரவும். வலது காலி முட்டி நேராக இருக்க வேண்டும்.
  • இடது காலை வலது காலின் மீது தூக்கி வைக்கவும். இப்படி செய்யும் போது இரண்டு கால்களும் நேர்கோட்டில் இருப்பது அவசியம்.
  • இரண்டு கால்களும் பின் நோக்கி இருக்க வேண்டும். கைகளை மேலே உயர்த்தி ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுக்கலாம்.
  • இப்போது வலது கையை இடது கையின் தோள்பட்டைக்கு கீழும் இடது கையை வலது கையின் தோள்பட்டைக்கு கீழும் வைக்கவும்.
  • முகமும், முதுகு தண்டும் நேராக இருக்க வேண்டும். இதே நிலையில் பத்து விநாடிகளுக்கு இருக்கலாம்.
  • கைளை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடலாம்.
  • இதே ஆசனத்தை சற்று மாற்றியும் செய்யலாம். இடது கால் மேலே இருந்தால் வலது கையை மடக்கி பின்னோக்கி கொண்டு வரவும்.
  • ஆனால் இடது கையை அப்படியே பின் கொண்டு வந்து வலது கையுடன் கோர்க்கவும்.
  • இதன் பிறகு கால்களை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து தளர்த்தவும்.

gomukhasana for stress relief

மேலும் படிங்க ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு தரும் மாலாசனம்

கோமுகாசனம் பயன்கள்

2021ல் நீரிழிவு நோயாளிளுக்கு கோமுகாசனம் செய்வது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது குளுக்கோஸ் அளவு குறைவதையும் இன்சுலின் அளவு அதிகரிப்பதையும் மருத்துவர்கள் கண்டுபிடுத்தனர். எனவே இந்த ஆசனத்தை நீரிழிவு நோயாளிகள் செய்து பலன் பெறலாம்.

மேலும் படிங்க வயிற்று கொழுப்பை குறைக்க உதவும் சக்கி சலனாசனம்

இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com