herzindagi
garland pose

Malasana Benefits : ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு தரும் மலாசனம்

ஒழுங்கற்ற மாதவிடாயினால் கடுமையாக பாதிப்படையும் பெண்மணியா நீங்கள் ? இந்த கட்டுரையில் பகிரப்பட்டுள்ள மாலாசனத்தை தினமும் செய்யுங்கள்.
Editorial
Updated:- 2024-03-13, 15:11 IST

உடல் நலனும் யோகாவும் என்ற தொடரில் நாம் அடுத்ததாகப் பார்க்கப் போகும் ஆசனம் மலாசனம். இது ஆங்கிலத்தில் garland pose என்று அழைக்கப்படுகிறது. மாலாசனா உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஆசனங்களில் ஒன்றாகும். ஆசனத்தைச் செய்யும் முன்பாகத் தளர்வு பயிற்சியில் இருந்து தொடங்கலாம்.

ஹெர் ஜிந்தகியில் ஏற்கெனவே பத்த கோணாசனம் எப்படி செய்வது என பகிர்ந்துள்ளோம். மாலாசனத்திற்கான தளர்வு பயிற்சி என்றால் அது பத்த கோணாசனம் தான்.பட்டாம்பூச்சி தனது ரெக்கையை பயன்படுத்தி பறப்போது போல கால்களை மேலே தூக்கி கீழே இறக்கவும். 

கால்களை மேலே தூக்கும் போது தோள்பட்ட சுருங்க வேண்டும். அதே சமயம் கால்களை கீழே கொண்டு வரும் போது தோள்பட்டை, மார்பு பகுதி விரிந்திருப்பது அவசியம். 30 விநாடிகளுக்கு இப்படி செய்துவிட்டு கால்களை நேராக நீட்டி தரையில் தளர்த்துங்கள். குழந்தைகளுக்கு இந்த ஆசனத்தை சொல்லிக் கொடுங்கள். கண்டிப்பாக அவர்களுக்கு பிடிக்கும்.

malasana benefits for irregular periods

இப்போது மலாசனம் செய்யலாம். 

  • ஐயப்ப சாமி போல அமர்ந்து கைகளில் நம்ஸார முத்ரா வைத்து அப்படியே கைகளை கீழே மார்பு  பகுதிக்கு இறக்கி வைத்து கால்களை பிரிக்கவும்.
  • இதை செய்யும் போது உங்கள் முதுகு தண்டு நேராக இருக்க வேண்டும்.
  • அதேபோல பாதத்தை நகர்த்த கூடாது. கால்களை மட்டுமே விரிக்க வேண்டும்.
  • பத்து விநாடிகளுக்கு இதே நிலையில் இருந்துவிட்டு இயல்பு நிலைக்கு திரும்புங்கள். ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடலாம்.

மேலும் படிங்க வயிற்று கொழுப்பை குறைக்க உதவும் சக்கி சலனாசனம்

மலாசனம் பயன்கள்

  • நீங்கள் ஏதேனும் செரிமான பிரச்சனைகளால் அவதிப்பட்டால் அன்று மலாசனம் செய்யவும்.
  • இந்த ஆசனம் உங்கள் இடுப்பை பகுதியை திறக்க உதவும். மலாசனம் மிகவும் சிறந்தது மற்றும் இடுப்பு மூட்டுகளில் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது.
  • பிசிஓஎஸ் அல்லது பாலிசிஸ்டிக் ஓவரி நோய்க்குறி என்பது இனப்பெருக்கத்தில் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் கோளாறு ஆகும். இது ஒழுங்கற்ற மாதவிடாய், கருப்பை நீர்க்கட்டிகள் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. இது பெரும்பாலும் கருவுறுதல் மற்றும் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது. மலாசனம் செய்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.
  • பிரசவத்திற்கு பிறகு பெண்கள் தங்களது இடுப்பு தசைகளில் வலிமையை இழக்கிறார்கள். மாலாசனா செய்தால் இடுப்பு தசைகள் தூண்டப்பட்டு மீண்டும் வலிமை கிடைக்கும்
  • இந்த ஆசனம் ஆண்கள் மற்றும் பெண்களின் இடுப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • தொடை பகுதி உள்ளிட்ட கீழ் உடலில் உள்ள தசைகளை வலுப்படுத்த மலாசனம் பெரிதும் உதவுகிறது. 

மேலும் படிங்க வயது முதிர்வை தடுக்க உதவும் ஹலாசனம்

இதுபோன்ற யோகாசன கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com