உடல் நலனும் யோகாவும் என்ற தொடரில் நாம் அடுத்ததாகப் பார்க்கப் போகும் ஆசனம் சக்கி சலனாசனம். மாவு ஆட்டுவது போல இந்த ஆசனம் இருக்கும். ஆங்கிலத்தில் இது Mill churning pose என்று அழைக்கப்படுகிறது. பெயரிலேயே உங்களுக்கு புரிந்து இருக்கும் கிரைண்டர் பயன்பாட்டுக்கு முன்பாக பயன்படுத்தப்பட்ட ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டுவது போல இந்த ஆசனம் செய்ய வேண்டும்.
![chakki chalanasana steps]()
- சக்கி சலனாசனம் செய்வதற்கு முன்பாக பயிற்சி ஆசனத்தில் இருந்து தொடங்கலாம். கால்களை நேராக நீட்டி உட்கார்ந்து கைகளை பக்கவாட்டில் வைத்து கொண்டு ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடவும்.
- கைகளை மடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது வலது காலை வலது புறமாகவும் இடது காலை இடது புறமாகவும் நீட்டவும்.
- ஆங்கில எழுத்தான V போலவே கால்களை இன்னும் சற்று விரித்து வைக்கவும்.
- கால்களை விரிக்கும் போது வலி தெரியாது. அதன் பிறகு நிச்சயம் தொடை பகுதியில் வலிக்கும். அதனால் பொறுமையாக இந்த ஆசனத்தை செய்யவும்.
- இப்போது இரு கைகளையும் மேலே உயர்த்தி மூச்சை உள்ளே இழுத்து வலது கால் கட்டை விரலை பிடிக்கும் போது மூச்சை வெளியே விடுங்கள்.
- இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு இம்முறை இடது கால் கட்டை விரலை பிடிக்க முயற்சி செய்யுங்கள்.
- இதே போல பத்து முறை செய்த பிறகு இயல்பு நிலைக்கு திரும்புங்கள். ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடாலாம்.
- இதே போல தான் சக்கி சலனாசனத்திலும் உங்கள் கால்கள் அகன்று இருக்க வேண்டும்.
- கைகளை முன்னே நீட்டி கோர்த்து மாவு ஆட்டுவது போல இடது காலில் ஆரம்பித்து வலது காலை தொடவும். வலது காலில் இருந்து முதுகை பின்னே தள்ளி கைகளைக் கொண்டு வரும் போது அவை மடங்க கூடாது. அதே நேரம் கால்களையும் தூக்க கூடாது.
- இது போல ஐந்து முறை செய்த பிறகு வலது காலில் ஆரம்பித்து இடது காலை தொடவும்.
- கால்களை நேராக நீட்டி தளர்த்தி கொள்ளுங்கள்.
மேலும் படிங்க வயது முதிர்வை தடுக்க உதவும் ஹலாசனம்
சக்கி சலனாசனம் பயன்கள்
- இது வயிற்று தசைகளை வலுப்படுத்தி செரிமானத்தை மேம்படுத்தி தொப்பையை குறைக்கிறது.
- சக்கி சலனாசனம் செய்யும் போது நமது இனப்பெருக்க உறுப்புகளைத் தூண்டுகிறது. மாதவிடாய் கோளாறுகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இது நன்மை பயக்கும்.
- இடுப்பு, முழங்கால்கள் மற்றும் கணுக்கால்களில் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது.
- முதுகுவலியைப் போக்க சக்கி சலனாசனம் பெரிதும் உதவுகிறது.
- சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்கும் பெண்கள் இரண்டு மாதங்கள் கழித்து இந்த ஆசனத்தைச் செய்யலாம். அறுவை சிகிச்சை மகப்பேறு செய்து கொண்ட பெண்கள் எட்டு மாதங்களுக்கு பிறகு இந்த ஆசனத்தைச் செய்யலாம்.
மேலும் படிங்க உடலில் இருந்து நச்சுகளை நீக்கும் அர்த்த மச்சேந்திராசனம்
இது போன்ற யோகாசன கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.