உடல் நலனும் யோகாவும் என்ற தொடரில் நாம் அடுத்ததாகப் பார்க்கப் போகும் ஆசனம் அர்த்த மச்சேந்திராசனம். அர்த்த என்றால் பாதி, மச்சேந்திராசனம் என்பது சித்தரின் பெயர். இந்த ஆசனம் ஆங்கிலத்தில் Half Fish Pose என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் செய்யும் முன்பாக ப் பயிற்சி ஆசனத்தில் இருந்து தொடங்கலாம்.
![ardha matsyendrasana steps]()
- வஜ்ராசனம் நிலையில் உட்கார்ந்து அதன் பிறகு கைகளை நீட்டி நான்கு கால் உயிரினம் போல உடல் அமைப்பை மாற்றுங்கள். கால்களுக்கு இடையே இடைவெளி இருக்க வேண்டும். இப்போது வலது கையை இடது கையின் அடியே கொண்டு சென்று கையின் வெளிப்புறத்தை தரையில் வைக்கவும். அதன் பிறகு தலையை மெதுவாக தரையில் வையுங்கள். இடது கையை பின்னே கொண்டு செல்லுங்கள்.
- இதே நிலையில் பத்து விநாடிகளுக்கு இருக்கவும். கையை முன்னே கொண்டு வந்து பொறுமையாக எழுந்திரிக்கவும்.
- இப்போது இடது கையை வலது கையின் அடியே கொண்டு சென்று கையின் வெளிப்புறத்தை தரையில் வைக்கவும். அதன் பிறகு தலையை தரையில் சாய்க்கவும். வலது கையை பின்னே கொண்டு செல்லுங்கள். வலது கையை மடக்கி பின்னே கொண்டு செல்ல சிரமமாக இருந்தால் தலைக்கு மேல் நேராக நீட்டவும். பொறுமையாக எழுந்து ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடலாம்.
- தற்போது அர்த்த மச்சேந்திராசனம் செய்யத் தொடங்கலாம்.
- கால்களை நேராக நீட்டி உட்காரவும். கைகளை பக்கவாட்டில் வைக்கவும். இப்போது இடது காலை மடித்து உட்காரவும். வலது காலை தூக்கி இடது காலை தாண்டி வைக்கவும். கால் தரையில் பதிய வேண்டும். வலது கையை பின்னே கொண்டு சென்று நீட்டவும். உடலை இடது புறத்தில் இருந்து வலது புறமாக திருப்பவும்.
- இடது கையால் வலது காலை கொஞ்சம் தள்ளி இடது மூட்டில் பிடிக்கவும். பத்து விநாடிகளுக்கு இதே நிலையில் இருந்துவிட்டு தலையை மெதுவாக திருப்புங்கள். ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடலாம்.
- இதே போல வலது காலை மடித்து உட்காரவும். இடது காலை தூக்கி வலது காலை தாண்டி வைக்கவும். இடது கையை பின்னே கொண்டு சென்று நீட்டவும். உடலை வலது புறத்தில் இருந்து இடது புறமாக திருப்பவும்.
- வலது கையால் இடது காலை தள்ளி வலது மூட்டில் பிடிக்கவும். இதே நிலையில் பத்து விநாடிகளுக்கு இருக்கவும்.
மேலும் படிங்க மனஅழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கும் அனந்தாசனம்!
அர்த்த மச்சேந்திராசனம் பயன்கள்
- உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் இந்த ஆசனம் உதவும்.
- நீரிழிவு நோயாளிகள் அர்த்த மத்ஸ்யேந்திரசனம் செய்தால் சர்க்கரை அளவை திறம்பட குறைக்கலாம்.
மேலும் படிங்க உடல் தோரணையை மேம்படுத்தும் கபோடாசனம்!
காலை 6 மணி முதல் 7 மணிக்குள் இந்த ஆசனம் செய்வது நல்லது.